போலி சிபிஐ ஆபிசரிடம் ‘ஏமாந்த’ கோகிலா! -விசித்திர வழக்கு!

gg

சில குற்றச்செயல்கள் "இப்படியுமா?'’எனக் கேட்கும் அளவுக்கு விசித்திரமாக இருக்கும். அப்படியொரு சம்பவம் அருப்புக்கோட்டையில் நடந்திருக்கிறது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கோகிலா, கூட்டுறவு சங்கம் ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிகிறார். இவருக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அன்புகுமார் என்பவருக்கு வேலூர் - கொண்டகுப்பத்தில் மனைவி, குடும்பம் உள்ளது.

ஒரு சம்பந்தமும் இல்லாத கோகிலா - அன்புகுமார் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது?

gg

வேலூரில் உள்ள ஒரு பொதுக்கழிப்பறைச் சுவரில் பெண்களின் எண்களென, செல்போன் எண்கள் சிலவற்றை யாரோ ஒரு ‘பிரகஸ்பதி’ எழுதியிருந்தான். அதைப் பார்த்த அன்புகுமாருக்கு ‘ட்ரை பண்ணிப் பார்ப்போம்..’ எனத் தோன்றியது. அத்தனை நம்பர்களுக்கும் போன் செய்தான். அந்த நம்பர்களில் ஒன்றில், கடைசி ஒரு நம்பரை மட்டும் தவறுதலாக அன்புகுமார் டயல் செய்தப

சில குற்றச்செயல்கள் "இப்படியுமா?'’எனக் கேட்கும் அளவுக்கு விசித்திரமாக இருக்கும். அப்படியொரு சம்பவம் அருப்புக்கோட்டையில் நடந்திருக்கிறது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கோகிலா, கூட்டுறவு சங்கம் ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிகிறார். இவருக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அன்புகுமார் என்பவருக்கு வேலூர் - கொண்டகுப்பத்தில் மனைவி, குடும்பம் உள்ளது.

ஒரு சம்பந்தமும் இல்லாத கோகிலா - அன்புகுமார் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது?

gg

வேலூரில் உள்ள ஒரு பொதுக்கழிப்பறைச் சுவரில் பெண்களின் எண்களென, செல்போன் எண்கள் சிலவற்றை யாரோ ஒரு ‘பிரகஸ்பதி’ எழுதியிருந்தான். அதைப் பார்த்த அன்புகுமாருக்கு ‘ட்ரை பண்ணிப் பார்ப்போம்..’ எனத் தோன்றியது. அத்தனை நம்பர்களுக்கும் போன் செய்தான். அந்த நம்பர்களில் ஒன்றில், கடைசி ஒரு நம்பரை மட்டும் தவறுதலாக அன்புகுமார் டயல் செய்தபோது, மறுமுனையில் பேசினார் கோகிலா. வேலை எதுவும் பார்க்காமல், குடும்பத்தையும் கவனிக்காமல், கிரிமினல் சிந்தனையுடன் ஊர் சுற்றிய அன்புகுமார், "ஆஹா.. ஒரு பெண் சிக்கிவிட்டாள்..'’என்று குஷியானான்.

"நான் ஒரு சி.பி.ஐ. அதிகாரி. திருட்டு வழக்கில் ஒருவனை அரெஸ்ட் பண்ணிருக்கோம். அவன்கிட்ட உன் நம்பர் இருக்கு. உன்னையும் விசாரிக்கணும்''’என்று கூறியிருக்கிறான். அன்பு குமாரின் பேச்சு கோகிலா மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியபோது, வேறொரு எண்ணிலிருந்து பெண் எஸ்.ஐ. பேசுவது போல, அன்புகுமாரே பெண்குரலில் கோகிலாவிடம், "இதுக்கு முன்னால உன்னை விசாரிக்கணும்னு சொன்ன சி.பி.ஐ. ஆபீசர் உன்மேல ரொம்ப பாசமா இருக்காரு. அவருக்கு ஆசையும் இருக்கு. இந்த ஆபீசரை நீ கைக்குள்ள போட்டுக்க. உனக்கு எதுன்னாலும் பண்ணிக் கொடுப்பார். அவர் கூப்பிட்ட இடத்துக்குப் போ. அவர பார்த்ததும் உன் கழுத்துல இருக்கிற தாலிய அவர் கழுத்துல போட்ரு. விசாரணைக்காக அவர் எங்கே கூப்பிட்டாலும் மறுக்காம போயிரு..''’எனச் சொன்னான்.

மறுநாள் அருப்புக்கோட்டை சென்ற அன்புகுமார், கோகிலா வேலைக்குச் சென்றபோது வழிமறித்து, "நான்தான் அந்த சி.பி.ஐ. ஆபீசர். உன்னை விசாரிக்கணும். விருதுநகர் ஆபீசுக்கு வா..''’என்று கூறி, கோகிலாவின் டூவீலரில் தானும் ஏறிக்கொண்டு அழைத்துச் சென்றான். விருதுநகர் அல்லம்பட்டி விலக்கு வந்தவுடன், கோகிலா அணிந்திருந்த தங்கத்தாலியும், தங்கச் செயினும் அன்புகுமார் கழுத்துக்கு மாறியது. கோகிலாவின் செல்போனையும் வாங்கிக்கொண்டு, அந்த டூவீலரிலேயே மதுரை கப்பலூர் அருகிலுள்ள டோல்கேட் சென்ற அன்புகுமார், அருகிலுள்ள ஹோட்டலில் கோகிலாவை இருக்கச் சொல்லி, "இந்தப் பையில் துப்பாக்கி இருக்கிறது. பத்திரமாக வைத்திரு. நான் மேலதிகாரியை அழைத்து வருகிறேன்''’எனக் கூறிவிட்டு, அங்கிருந்து தப்பினான்.

வெகு நேரமாகியும் அன்புகுமார் வராததால், அந்தப் பையை திறந்து பார்த்தார் கோகிலா. செருப்பு மட்டுமே இருந்தது. அதன்பிறகு மதுரை சென்ற கோகிலா, அங்கிருந்து அருப்புக்கோட்டையிலுள்ள தன் வீட்டுக்கு வந்து, தான் ஏமாற்றப்பட்டதை குடும்பத்தாரிடம் கூறி அழுதார். அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்திலும் புகார் செய்தார்.

சி.சி.டி.வி. பதிவுகளையும் அன்புகுமாரின் செல்போன் டவர் லொகேஷனையும் போலீசார் ஆய்வுசெய்தபோது, திண்டுக்கல், வேலூர், காட்பாடி, சென்னை, திண்டுக்கல் என அவன் சென்ற இடங்களை எல்லாம் காட்டியது. குழம்பிப் போன போலீசார், ஒருவழியாக வேலூர் கொண்ட குப்பத்திலுள்ள வீட்டில் வைத்து அன்புகுமாரைப் பிடித்தனர்.

காவல்துறையினரால் அருப்புக்கோட்டைக்கு அழைத்துவரப்பட்ட அன்புகுமார் குற்றத்தை ஒப்புக் கொண்டான். திண்டுக்கல் வாகனக் காப்பகத்தில், இருசக்கர வாகனத்தின் டூல்பாக்ஸில் அன்புகுமார் மறைத்து வைத்திருந்த தங்கத்தாலி, செல்போன் ஆகியவற்றோடு அந்த டூவீலரையும் போலீசார் கைப்பற்றினர்.

சி.பி.ஐ. ஆபீசர் என்று அன்புகுமார் சொன்னதை கோகிலா எப்படி நம்பினார்? தான் அணிந்திருந்த தாலியை ஏன் அன்புகுமார் கழுத்தில் அணிவித்தார்? எதற்காக டூவீலரில் அன்புகுமாருடன் ஹோட்டல்வரை சென்றார்?’என சந்தேகக்கணைகள் துளைக்க, கோகிலாவை அவரது கைபேசி எண்ணில் 89லலலலலல16-ல் தொடர்புகொண்டோம். அவருடைய செல்போன் தொடர்ந்து ஸ்விட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், கோகிலாவின் கணவர் சுகுமாரை (75லலலலலல96) தொடர்புகொண்டோம். அவர் நமது லைனில் வருவதைத் தவிர்த்தார். குறுந்தகவல் அனுப்பியும், செய்தி அச்சிலேறும்வரை பதிலில்லை. கோகிலா தரப்பு விளக்கம் அளிக்க முன்வந்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோகிலா ‘மனம்திறந்து’ நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டாராம்.

nkn091122
இதையும் படியுங்கள்
Subscribe