கொடநாடு கொலைவழக்கில் என்னையும் அ.தி.மு.க. நிர்வாகிகளையும் குறிவைக்கிறார்கள் என அலறிய எடப்பாடி, சுப்ரீம்கோர்ட் வரை சென்று மறுவிசாரணைக்கு தடை கோரினார். அவரது கோரிக்கையை சுப்ரீம்கோர்ட் ஏற்க மறுத்தவுடன், "மறுவிசாரணை செய்யுங்கள்' என கூலாகச் சொன்னார். முதலில் அலறியதற்கும் பின்பு எடப்பாடி கூலாக அறிவித்ததற்கும் இடையே மறுவிசாரணையை சந்திக்க ஏகப்பட்ட ஏற்பாடுகளை எடப்பாடி செய்து விட்டார் என்கிறார்கள் காவல்துறைக்கு நெருக்கமானவர்கள்.

kodanadu

மறுவிசாரணைக்காக வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்டவர்களை ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. ஆசீஷ்ராவத் ஆகியோர் தலைமையில் நான்கு தனிப்படை போலீஸ் விசாரித்துவருகிறது.

அதில் கொடநாடு கொள்ளைக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட தினேஷின் அப்பா மற்றும் தங்கையை விசாரித்தபோது, அவர்கள் தினேஷின் தற்கொலை பற்றி பெரிதாக புதிய தகவல்கள் எதையும் சொல்லவில்லை.

Advertisment

தினேஷின் தற்கொலைக்குப் பிறகு அவர்கள் மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். மறுவிசாரணை என வந்தபிறகு அவர்களுக்கு எங்கிருந்தோ பெரிய அளவில் பணம் தரப்பட்டிருக்கிறது. தினேஷ், கொடநாட்டில் உதவி மேனேஜராக பணியாற்றி வந்தார். கொடநாட்டில் கொள்ளை நடக்கும்போது சி.சி.டி.வி., மின்சாரம் போன்றவை எப்படி துண்டிக்கப்பட்டது, யார் அதை துண்டித்தது, கொள்ளையில் ஈடுபட்ட கனகராஜா அல்லது கொடநாடு மேனேஜர் நடராஜனா? என கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து அவர் நடராஜனால் மிரட்டப்பட்டார். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதுதான் போலீஸார் எழுப்பும் சந்தேகம்.

dd

இந்த சந்தேகத்தை உறுதிப் படுத்தும் வகையில் எந்தப் பதிலும் தினேஷின் உறவினர்களிடம் இருந்து வரவில்லை. அத்துடன் அவர்கள் மிகவும் வசதியாக இருக்கிறார்கள் என்கிற கூடுதல் தகவல் போலீசாரை சோர்வடைய வைத்திருக்கிறது. இது எப்படி என இன்னொரு தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள் என்கிறது காவல் துறை வட்டாரங்கள்.

Advertisment

காவல்துறையை பொறுத்த வரை ஐ.ஜி. சுகுமார் தலைமையில் வழக்கு தொடர்பான சாட்சிகளை மறுபடியும் விசாரிக்கிறார்கள். இதில் கனகராஜின் மனைவி கலைவாணி மட்டுமே எடப்பாடி பற்றி கனகராஜ் சொன்னதாக கூடுதல் தகவல்களைத் தந்திருக்கிறார். கனகராஜின் மரணத்திற்குப் பிறகும் வழக்கை திசை திருப்ப எடப்பாடி செய்த முயற்சிகளைப் பற்றி ஆதாரங்களுடன் சாட்சியம் அளித்திருக்கிறார். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள அந்த ddசாட்சியம் பற்றி வெளியே பேசக்கூடாது என ஐ.ஜி. சுதாகரே கலைவாணிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

மற்றபடி எல்லா சாட்சியையும் எடப்பாடி செட்-அப் செய்திருக்கிறார். அதில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷின் குடும்பமும் அடங்கும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்திய மூர்த்திக்கு இதற்காக ஒரு ஸ்பெஷல் அசைன்மெண்ட்டே எடப்பாடி கொடுத் திருக்கிறார். ஐ.ஜி. சத்தியமூர்த்திக்கு மிக நெருக்கமானவர்தான் மறுவிசாரணை டீமில் இருக்கும் டி.ஐ.ஜி. முத்துசாமி.

ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த முத்துசாமி, எடப்பாடி ஆட்சியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக சட்டம் ஒழுங்கு பதவியில் ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமாக இருந்தவர். அவரை கொடநாடு பகுதி அடங்கும் கோவை டி.ஐ.ஜி.யாக எடப்பாடி ஆட்சிக் காலத் திலும், அதைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி, எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியின் அழுத்தத் தால் நியமித்தார். கொடநாடு வழக்கு விசாரணையில் என்ன நடக்கிறது என்பதை தினந்தோறும் தெரிந்துகொள்ள சத்தியமூர்த்தி செய்த ஏற்பாடுதான் முத்துசாமியின் நியமனம்.

இன்னும் முத்துசாமியை அந்த பதவியில் இருந்து மாற்றாமல் பாதுகாப்பவர், உளவுத்துறை தலைவராக இருக்கும் டேவிட்சன் தேவஆசிர் வாதம். வழக்கை திறமையாக விசாரிக்க முயலும் ஐ.ஜி. சுதாகருக்கு செக் ஆக இருக்கும் முத்துசாமி, இந்த வழக்கில் பெரிய தடைக்கல். முத்துசாமி, சத்தியமூர்த்தி அண்ட் கோ மட்டுமல்ல... இந்த வழக்கில் உள்ள சாட்சிகளை தினமும் கவனிக்க ஒரு தனி டீமையே எடப்பாடி ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த வழக்கின் சாட்சிகளை சுகந்தி என்கிற ஒரு பெண் தினமும் சந்திக்கிறார். தன்னை ஒரு ப்ரீலேன்ஸ் பத்திரிகையாளர் என சொல்லிக் கொள்ளும் இந்தப்பெண், கனகராஜின் உறவினர் ரமேஷை சந்தித்துப் பேசியதாக ரமேஷ் நம்மிடம் கூறினார். ரமேஷிடம் போலீஸ் என சொல்லி, முதலில் இந்தப் பெண்ணை தொலைபேசியில் நாம் விசாரித்தபோது... முரசொலி பத்திரிகைக்காக ப்ரீலேன்ஸ் பத்திரிகையாளராக வேலை செய்வதாகச் சொன்னார். இந்தப் பெண் கொட நாடு வழக்கு சம்பந்தமான சாட்சிகளிடம் எடப் பாடியால் அனுப்பப்பட்ட நபர் என காவல்துறையினரே சந்தேகிக்கிறார்கள்.

கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்ததாக சொல்லப்படும் காரை ஓட்டிய தம்மம்பட்டி ரபீக் என்பவரையும் ஒரு டீம், போலீஸ் என்ற பெயரில் சந்தித்திருக்கிறது. வேகமாக வந்த கார் மோதி இறந்ததாக சொல்லப்பட்ட ரபீக் ஓட்டிவந்த கார், வேகமாக வரவில்லை. கிட்டத்தட்ட நிறுத்தப்பட்ட நிலையில் இருந்த காரின் எதிர்த் திசையில் மிகவேகமாக வந்த கனகராஜ், தற்கொலை செய்துகொள்வதைப் போல மோதினார்.

அவர் இறந்தார். போலீசார் ரபீக்கை கைது செய்யவில்லை. இதை ஒரு மரண விபத்தாக கூட மதிக்கவில்லை. ரபீக் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரது லைசென்ஸைக் கூட வாங்கி வைக்கவில்லை. ரபீக்கை கைது செய்யவில்லை. அவர் விபத்து நடந்த இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல் லப்படவில்லை. முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊரான தம்மம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார்.

dd

ரபீக் ஓட்டிவந்த கார், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தது. விபத்து நடந்த ஆத்தூருக்கு பக்கத்தில் உள்ள தம்மம்பட்டியைச் சேர்ந்த ரபீக் ஓட்டிவந்துள்ளார். தம்மம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷன் என்பவர் ரபீக்கை பெங்களூருக்கு அனுப்பி அவரது உறவினருக்குச் சொந்தமான காரை ஓட்டிவரச் செய்திருக்கிறார். வெங்கடேஷின் நெருங்கிய உறவினர் எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் தலைமை தாங்கிய கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகியாக இருக்கிறார். விபத்து நடந்தவுடன் கனகராஜின் உறவினர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்ததுபோல் வெங்கடேஷனும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.

ஒரு பைக் மோதி இந்த அளவுக்கு கார் டேமேஜ் ஆகுமா? என கேள்வி எழுப்பப்படும் அந்தக் காரை காயலான் கடைக்கு விற்றுவிட்டார் வெங்கடேஷ். மறுவிசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில்... சம்பந்தப்பட்ட காரை எப்படி விற்றார்கள் என கேட்டபோது, அதிலென்ன தவறு? என நம்மை திருப்பிக் கேட்டார் வெங்கடேஷ்.

நாம் ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் சேகரனிடம், கொடநாடு கொலை வழக்கு இன்னமும் முடியவில்லை விபத்துக்குள்ளான கனகராஜின் பைக்கும் கனகராஜை சாகடித்த காரும் எங்கே இருக்கிறது என கேட்டோம். அவை போலீஸின் வசம் இல்லை என பதில் சொன்னார்.

தம்மம்பட்டி வெங்கடேஷும் எடப்பாடி ஸ்டைலில் மறுவிசாரணை செய்யட்டும் அதற்கும் காரை காயலான் கடைக்கு விற்றதற்கும் என்ன தொடர்பு என திருப்பிக் கேட்டார். கனகராஜ் தொடர்பாக நாம் விசாரிக்க, அவரது சகோதரர்கள் தனபால், பழனிவேல் ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். அவர்களிடம் மறுவிசாரணையில் போலீசார் முறையாக விசாரிக்கவேயில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. கனகராஜின் தாயார், மகன் இறந்த சோகத்தைக் கூட வெளிக்காட்டாமல் சிரிக்கிறார். அனைவருக்கும் எடப்பாடி அடிக்கடி படியளக்கும் விதமாக விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறார்கள்.

dd

விபத்தை நேரில் பார்த்த கனகராஜின் உறவினர் ரமேஷ், புதிதாக லட்சக்கணக்கான ரூபாயில் வீடு கட்டியிருக்கிறார். டிராக்டர், கார் என வசதியாக வாழ்கிறார். சில ஏக்கர் நிலம் வைத்துள்ள அவர் கார், டிராக்டர், வீடு என வசதியாக வாழ்கிறார்.

எந்த வேலைக்கும் செல்லாத இன்னொரு சகோதரர் தனபால், விசைத்தறிகளையும் வாகனங்களையும் வாங்கியுள்ளார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் ரபீக், புதிய கார் வாங்கியுள்ளார். அந்தக் காரை ஏற்பாடு செய்த வெங்கடேஷ், அரண்மனை போல புதிய வீடு கட்டியுள்ளார். தற்கொலை செய்துகொண்ட தினேஷின் குடும்பத்தினர் அளவுக்கதிகமான வசதியோடு வாழ்கிறார்கள். இவையெல்லாம் எடப்பாடியின் பணம்.

இவர்கள் எல்லாம் எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முறையான விசாரணை செய்யாமல், டி.ஐ.ஜி. முத்துசாமி மூலம் பிரேக் போட்டபடி சாட்சிகளுக்கு பணம் கொடுத்து எடப்பாடி மறுவிசாரணையை சந்தித்துவருகிறார் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.