கொடநாடு கொலை வழக்கில் பல முக்கிய திருப்பங்களை கனகராஜ் குடும்பத்தின் மூலமாகவே வெளிக்கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதனால்தான் கனகராஜ் சித்தி மகன் ரமேஷின் போலீஸ் கஸ்டடியை ஒருவாரம் நீட்டித்து கேட்டது போலீஸ். நீதிபதி 5 நாட்கள் அவரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரி
கொடநாடு கொலை வழக்கில் பல முக்கிய திருப்பங்களை கனகராஜ் குடும்பத்தின் மூலமாகவே வெளிக்கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதனால்தான் கனகராஜ் சித்தி மகன் ரமேஷின் போலீஸ் கஸ்டடியை ஒருவாரம் நீட்டித்து கேட்டது போலீஸ். நீதிபதி 5 நாட்கள் அவரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
மொத்தம் 10 நாட்கள் விசாரிக்க ரமேஷிடம் என்ன உள்ளது என போலீஸ் வட்டாரங்களில் கேட்டோம். இதில் 2 வழக்குகள் உள்ளன. ஒன்று கொடநாடு கொள்ளை வழக்கு, இன்னொன்று கனகராஜின் மர்ம மரணம். இந்த இரண்டிலும் ரமேஷ் சம்பந்தப்பட்டுள்ளார். கனக ராஜ் இறப்பதற்கு முன்பு அவருடன் ஒன்றாக இருந்த ரமேஷ், கனகராஜ் இறப்பதை பார்த்துள்ளார். ஆனால் மர்ம மரணம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.
போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் ஒரு புதிய தகவலை கண்டுபிடித்துள்ளார்கள். கொடநாடு கொள்ளை முடிந்ததும் சேலத்துக்கு வந்த கனகராஜுக்கு ஒரு புதிய செல் போனை ரமேசும், தனபாலும் சேர்ந்து வாங்கிக் கொடுத்திருக்கின்றார்கள். அந்த செல்போனை கனகராஜின் மரணத்திற்குப் பிறகு ரமேஷ் வைத்திருந் திருக்கிறார். அதை போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள். புதிய செல் போனில் யாரையெல்லாம் கொடநாடு கொள்ளை நடந்தபிறகு கனகராஜ் தொடர்பு கொண்டுள்ளார் என்று எலக்ட்ரானிக் தகவல் களை போலீசார் திரட்டி, அதை வைத்தும் ரமேஷிடம் விசாரணையை நீடித்துள்ளனர்.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை, அலியார் என்ற ஹவாலா ஆபரேட்டர் மீதான சந்தேகம் ஆகியவற்றுக்கும் கொடநாடு வழக்குக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.