கொடநாடு புதிய சாட்சி! போலீஸ் வளையத்தில் எடப்பாடியின் கூட்டாளி

kk

கொடநாடு கொலைவழக்கு என்பது கிட்டத்தட்ட முடிந்து போன வழக்காகத்தான் கருதப்பட்டது. ஒரு கிரிமினல் வழக்கில் அதிகபட்சம் அது ஒரு விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகள் அடங்கிய விசாரணையாக விசாரிக் கப்படவேண்டும். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் 140 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு அதில் 40 சாட்சிகள் கோர்ட்டில் படியேறி சாட்சியம் சொல்லிவிட்டார்கள். தீர்ப்பு வழங்க நீதிபதியும் தயாராகிவிட்டார். இந்நிலையில்தான்... கூடுதல் விசாரணை என்கிற நிலை வந்தது. இந்த வழக்கில் கூடுதல் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்த நிலையில், மீண்டும் கோர்ட் படி யேறி சாட்சியம் அளித்த நபர்களையே மறுவிசாரணை செய்யவேண்டும் என்கிற நிலைக்கு கூடுதல் விசாரணையில் போலீஸார் தள்ளப்பட்டனர்.

ff

இந்த வழக்கை முன்பு விசாரித்த எடப்பாடி ஆட்சிகால போலீஸார், அவர்கள் எடப்பாடிக்காக கைவிட்ட ஓட்டைகளை முதலில் திரட்ட ஆரம்பித்தார்கள். அதில் ஒன்று... சஜீவனைப் பற்றியது. சஜீவன், கொடநாடு கொலை

கொடநாடு கொலைவழக்கு என்பது கிட்டத்தட்ட முடிந்து போன வழக்காகத்தான் கருதப்பட்டது. ஒரு கிரிமினல் வழக்கில் அதிகபட்சம் அது ஒரு விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகள் அடங்கிய விசாரணையாக விசாரிக் கப்படவேண்டும். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் 140 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு அதில் 40 சாட்சிகள் கோர்ட்டில் படியேறி சாட்சியம் சொல்லிவிட்டார்கள். தீர்ப்பு வழங்க நீதிபதியும் தயாராகிவிட்டார். இந்நிலையில்தான்... கூடுதல் விசாரணை என்கிற நிலை வந்தது. இந்த வழக்கில் கூடுதல் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்த நிலையில், மீண்டும் கோர்ட் படி யேறி சாட்சியம் அளித்த நபர்களையே மறுவிசாரணை செய்யவேண்டும் என்கிற நிலைக்கு கூடுதல் விசாரணையில் போலீஸார் தள்ளப்பட்டனர்.

ff

இந்த வழக்கை முன்பு விசாரித்த எடப்பாடி ஆட்சிகால போலீஸார், அவர்கள் எடப்பாடிக்காக கைவிட்ட ஓட்டைகளை முதலில் திரட்ட ஆரம்பித்தார்கள். அதில் ஒன்று... சஜீவனைப் பற்றியது. சஜீவன், கொடநாடு கொலை -கொள்ளை வழக்கில் ஆக்டிவ்வாக இருந்தார். அவரது தம்பி சுனில்தான் கூடலூர் செக்போஸ்ட்டில் சிக்கிய குற்றவாளிகளை போலீஸின் பிடியிலிருந்து மீட்டார். கிட்டத்தட்ட 10 மணி நேரம் போலீஸின் பிடியிலிருந்த குற்றவாளிகளிடமிருந்து பிளாட்டினம் என்கிற விலை உயர்ந்த உலோகத்தாலான கரடி பொம்மை மற்றும் 5 ஜெ. படம் போட்ட வாட்சுகள் ஆகியவற்றைத்தான் மீட்டதாக போலீஸார் சொன்னார்கள்.

கொலை மற்றும் கொள்ளையடித்ததனால் ஏற்பட்ட காயங்களுடன் இருந்த வாளையார் மனோஜ் உள்ளிட்ட குற்றவாளிகளை போலீஸார் விடுவித்தனர். இதற்கு, சஜீவன் துபாயிலிருந்தும் சுனில் கோத்தகிரியிலிருந்தும் தொலைபேசியில் தமிழகத்தின் உயர் போலீஸ் அதிகாரியிடம் பேசினார்கள் என மனோஜ் கூறினார். அந்த சாட்சியத்தை வைத்து அப்போதைய நீலகிரி எஸ்.பி. முரளிரம்பா, சஜீவனை விசாரித்தார். சஜீவன், "கொள்ளையடித்த அன்று நான் துபாயில் இருந்தேன்'' என சொன்னவுடன் சஜீவனை விட்டுவிட்டார்.

அதுபோல இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தோஷ்சுவாமி என்ற குற்றவாளியை கேரளாவில் கைது செய்யும்போது, "கனகராஜ் எங்கே என அவர் கேட்டார். கனகராஜை சேலத்தில் உள்ள போலீஸார் பார்த்துக்கொள்வார்கள் என போலீஸார் பதில் சொன்னார்கள். அன்றைய தினமே கனகராஜும் சயானின் மனைவியும் மகளும் விபத்தில் கொல்லப்பட்டார்கள். கனகராஜை மோதிய காரை ஏற்பாடு செய்தவர் தம்மம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ். இவரை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. இந்த காரை யார் சொல்லி விபத்து நடந்தவுடன் விடுவித்தார்கள் என போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். இந்த விசாரணைகளையெல்லாம் சாதாரண முறையில் எடுத்துச் செல்ல முடியாது. இந்த வழக்கின் சாட்சியங்கள் எல்லாம் கோர்ட் படியேறி சாட்சி சொன்னவர்கள். இவர்களை கூடுதலாக விசாரணை செய்ய, எலெக்ட்ரானிக் விவரங்கள் போலீஸாருக்குத் தேவைப்படுகிறது.

dd

எடப்பாடி ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கை விசாரித்த போலீஸார், அப்போதே சந்தேகப்பட்ட வர்களின் செல்போன் ரெக்கார்டுகளை சேகரித்து வைத்திருந்தனர். அதில் கொடநாடு கொள்ளை நடந்தபோது, கொடநாடு டவரில் கனகராஜின் போனுக்கு வந்த அழைப்புகளும் இருக்கிறது. அந்த விவரங்களை கூடுதல் விசாரணை செய்ய போலீஸார் கையிலெடுத்திருக்கிறார்கள். புதிய விவரங்களையும் போலீஸார் கண்டுபிடித்துள்ள னர். அதில் ஒரு முக்கிய சாட்சி, பணிக்கனூர் கிராம அ.தி.மு.க. செயலாளரான பன்னீர்செல்வம். இவர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் காண்ட்ராக்டர். எடப்பாடி செல்லும் வழியில் உள்ளது பணிக்கனூர்.

முதலில் தே.மு.தி.க.வில் இருந்த இவரை, கவுன்சிலராக வெற்றிபெற்றதும் அ.தி.மு.க.வில் நேரடியாக எடப்பாடி பழனிசாமி சேர்க்கிறார். எடப்பாடியுடன் நேரடியாக பேசும் அளவுக்கு இவருக்கு செல்வாக்கு இருக்கிறது. இவர்தான் கனகராஜின் குடும்பத்திற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள லைவ்லி-ங்க். இவரது மனைவியும் கனகராஜின் சகோதரரான தனபாலின் மனைவியும் சகோதரிகள். இந்த வழக்கு தொடர்பாக அமைதி காப்பதற்காக கனகராஜ் குடும்பத்திற்கு தரப்பட்ட நிதி, பணிக்கனூர் பன்னீர்செல்வத்திடம்தான் இருக்கிறது. ஜெ.வின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் சம்பாதித்த பணமும் பன்னீர் செல்வத்திடம்தான் இருக்கிறது என கனகராஜ் குடும்பத்தினரே ரகசியமாக போலீஸில் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.

நாம் பணிக்கனூர் சென்றோம். இரண்டு பிரம்மாண்டமான கட்டடங்களை அவரது வீடு என காண்பித்தார்கள். கொடநாடு கொள்ளை நடந்து 2 வருடங்கள் கழித்து 2019-ஆம் ஆண்டுதான் இவர் இந்த வீடுகளை கட்டினார். அவருக்கு ஏகப்பட்ட விவசாய நிலங்களும் இருக்கிறது என்றார்கள்.

நாம் அவரை சந்தித்தோம்.... "எடப்பாடி பழனிசாமி தனக்கு மிகவும் நெருக்கமானவர்' என அவர் ஒத்துக்கொண்டார். கனகராஜ் குடும்பம் உறவுக்கார குடும்பம்தான் என்றார். ஆனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை. இந்த சொத்துக்கள் எல்லாம் காண்ட்ராக்ட்டராக இருந்து சம்பாதித்த சொத்துக்கள் என்றார். இதைப்பற்றி நம்மிடம் பேசிய கனகராஜின் உறவினர்கள், சமீபத்தில் கூட கனகராஜின் சகோதரர் தனபால், பன்னீர்செல்வத்தின் வீட்டில் பல நாட்கள் தங்கியிருந்தார் என்கிறார்கள்.

கோர்ட்டில் கூடுதல் விசாரணைக்கு இன்னும் அதிக காலம் தேவை என தமிழக போலீஸார் அனுமதி பெற்றிருக்கிறார்கள்.

nkn061021
இதையும் படியுங்கள்
Subscribe