தேர்தல் ரிசல்ட் வரும் நேரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கொடநாடு கொலை வழக்கு.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பங்களாவில், கடந்த 2017 ஏப்ரல் 24-ந் தேதி, கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. அதில் 10 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் இருக்கிறார்கள். மற்ற 8 பேர் ஜாமீனில் வெளியில் இருக்கிறார்கள். இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது ஜெயலலிதாவின் டிரைவராக இருந்த கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps_186.jpg)
"இந்த கனகராஜ் சொன்னதன் அடிப்படையில்தான், கேரளாவைச் சேர்ந்த 10 பேரை அடியாட்களாக அழைத்து வந்து, கொடநாடு பங்களாவில் உள்ள பணம், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களைக் கொள்ளையடிக்க நாங்கள் முயன்றோம். அந்த முயற்சியில் கொடநாட்டைச் சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் இறந்துவிட்டார். இந்த ஏற்பாடுகளைச் செய்த கனகராஜ், மர்மமான முறையில் கொல்லப்பட் டார். எடப்பாடி பழனிச்சாமி ஏற்பாட்டில் அவரிடமிருந்து சசிகலா பறித்த சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடிக்கத்தான் நாங்கள் கொடநாட்டுக்குச் சென்றோம்'' என சயானும் வாளையார் மனோஜும், கேரளாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேல் ஏற்பாட்டில் பேட்டியளித்தார்கள்.
அந்தப் பேட்டி நக்கீரனில் வெளிவந்தது. அதன்பிறகே "மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் ஆகியோர் இந்த கொடநாடு சம்பவம் பற்றி எதுவும் பேசக்கூடாது' என எடப்பாடி சுப்ரீம் கோர்ட்டுக்குப் போய் அப்போதைய கேரள கவர்னர் சதாசிவத்தின் அறிவுரையின்படி தடை வாங்கினார். அத்துடன் சயான் மற்றும் மனோஜை தமிழக போலீஸார், "சாட்சியங்களை மிரட்டுகிறார்கள்' எனக்கூறி மறுபடியும் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps1_36.jpg)
இந்த வழக்கில், குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனிரத்தினம், "முதல்வர் எடப்பாடி, சசிகலா, இளவரசி, சுதாகரன், அப்போதைய நீலகிரி கலெக்டர் சங்கர், எஸ்.பி. முரளிரம்பா, அ.தி.மு.க. வர்த்தக அணி தலைவர் சுஜீவன், சுனில், எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகிய 9 பேரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என உத்தரவிடக்கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஊட்டி நீதி மன்றத்தில் கடந்த 26-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
"முதல்வர் எடப்பாடிக்கும் கொடநாடு கொலை வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென' அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட...… அதை எதிர்த்து, குற்றவாளி தரப்பு வழக் கறிஞர்கள் வாதிட்டனர். எடப்பாடியை விசாரணைக்கு அழைப்பதா, வேண் டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, சென்னையில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் வாதம் செய்ய விரும்புகிறார்கள் என அரசுத் தரப்பு சொல்ல, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் வாதிட அனுமதி அளித்து நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கை 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கொடநாடு வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய டிரைவர் கனகராஜ் மரணம், இதுவரை கோர்ட்டில் பதிவாகவில்லை. டிரைவர் கனகராஜ் மரணத்திற்கும் எடப்பாடிக்கும் இருந்த தொடர்பை வெளிப்படுத்திய சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரில் வாளையார் மனோஜை எடப்பாடி தரப்பு தமக்கு சாதகமாக்கிவிட்து. வாளையார் மனோஜுக்காக ஆஜராகும் அ.தி.மு.க. வழக்கறிஞர் மனோஜுடைய வாக்குமுலத்தில் கனகராஜின் கொலை இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps2_21.jpg)
அடுத்து, சயான் வாக்குமூலம் அளிக்கவேண்டும். சயானின் வாக்குமூலம் வேண்டுமென்றே தள்ளிப்போடப்பட்டு வருகிறது. இந்நிலையில்… சயானின் வழக்கறிஞரும் தி.மு.க. சட்டப்பிரிவு நிர்வாகி யுமான ஆனந்தன், குற்றவாளிகள் தரப்பு சாட்சியாக மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள், கொட நாடு கொள்ளை என்பது மாநில அரசின் உதவியோடு எடப்பாடி உத்தரவின் அடிப்படையில்தான் நடைபெற்றது என்பதை நிரூபிக்க, சம்பவம் நடந்த 2017, ஏப். 24ம் தேதி நள்ளிரவு மின்தடை ஏற்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட,… மின்சார வாரிய இளநிலை பொறியாளர் ஒருவரை சாட்சியாக அழைப்பதற்கு கோர்ட்டிடம் அனுமதி கேட்டார்.
அதேநேரத்தில், குற்றவாளிகள் தரப்பின் இன்னொரு வழக்கறிஞரான முனிரத்தினம், முதலமைச்சர் எடப்பாடி, சசிகலா உட்பட 9 பேரை சாட்சிகளாக அழைப்பதற்கு அனுமதி கோரி நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
"எடப்பாடியைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே கொடநாடு வழக்கை முடித்துவிடவேண்டும். இந்த வழக்கு முறையாக நடந்தால், "கொலை வழக்கில் சிக்கும் முதல்வர்' என செய்திகள் வரும் என்பதால், திட்டமிட்டு வேகமாகக் காய்களை நகர்த்தினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த வழக்கு, தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் முடிவுக்கு வரும். இதில் எடப்பாடிக்கு கடும் நெருக்கடி இருக்கும்' என்கிறது குற்றவாளி சயானுக் காக ஆஜராகும் தி.மு.க. வழக்கறிஞர் அணி வட்டாரம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/eps-t_0.jpg)