பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அடுத்த கட்டப் பரபரப்பாக கொடநாடு வழக்கு வேகமேடுக்கப் போகிறது என்கிறது தமிழக அரசுக்கு மிக நெருக்கமான அரசியல் வட்டாரம். இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட கொடநாடு குற்றவாளிகள் தலைமறைவாக ஆரம்பித்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் மாநில வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் சஜீவன். இவர் துபாய்க்கு தப்பி ஓடிவிட்டார். இந்த சஜீவனின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்ஞாலக்குடா. இந்த ஊரில் இருந்துதான் கொடநாடு கொலை வழக்கின் குற்றவாளி களான சயான், வாளையார் மனோஜ் உட்பட அனைத்துக் குற்றவாளிகளும் கொடநாட்டைக் கொள்ளையடிக்க அழைத்து வரப்பட்டார்கள்.

eps

கொடநாட்டில் கொள்ளையடித்த சயான், ‘ஜெ.வின் டிரைவரான கனகராஜுக்கு நெருக்கம். மற்ற குற்றவாளிகள் யாரையும் கனகராஜுக்கு தெரியாது. சயானுக்கு அனைத்து குற்றவாளிகளையும் தெரியும். இந்த குற்றவாளிகளை சஜீவனின் தம்பி சுனில்தான் இரிஞ்ஞாலக்குடாவுக்கு வந்து தங்கி, அவர்களை கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஈடுபட தயார்படுத்தினார். அத்துடன் கொடநாடு கொள்ளை முடிந்து அவர்கள் கேரளாவிற்கு தப்பிச் செல்லும்போது கூடலூர் மாவட்டம் நாலுகாணி செக்போஸ்ட்டில் கொடநாட்டிலிருந்து எடுத்துவந்த கரடி பொம்மை, ‘ஜெ.வின் விலை உயர்ந்த வாட்சுகளுடன் போலீசில் சிக்கினார்கள். அவர்களை அப்போது பேசி விடுவித்தது சஜீவனின் தம்பி சுனில்.

அதேபோல் இந்த குற்றவாளிகளை எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மூலம், கொடநாடு கொலை வழக்கு தொடர்பான பிரச்னை சீரியசானபோது அன்பரசனுக்கு சொந்தமான ஒரு கட்டடத்தில் உட்காரவைத்து போலீஸ் வசம் ஒப்படைத்தார்கள். இதையெல்லாம் மறுவிசாரணை நடந்தபொழுது ஐ.ஜி. சுதாகரிடம் வாக்குமூலமாகவே கொடுத்திருக்கிறான் சயான். அதே ஐ.ஜி. சுதாகர் சஜீவனிடமும் விசாரித்திருக்கிறார். அவரது தம்பிகள் சுனில் மற்றும் சிபி ஆகியோரிடமும் விசாரணை நடந்துள்ளது. கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி.வசம் சென்றபிறகு அவர்களும் சஜீவனிடம் விசாரணை நடத்தினார்கள்.

Advertisment

சமீபத்தில் சஜீவனுக்கு சொந்தமான எஸ்டேட்டில் ஒரு காட்டு மாடும், ஒரு மானும் சுட்டுக்கொல்லப்பட்டன. காட்டுப்பகுதியில் மானைச் சுட்டுக் கொல்வது இந்திய வனத்துறை சட்டங்களின்படி கடுமையான குற்றம். பிரபல நடிகர் சல்மான்கானே அந்தக் குற்றங்களில் இருந்து தப்ப முடியவில்லை. சஜீவனின் எஸ்டேட்டில் வன விலங்குகள் கொல்லப்பட்டது சம்பந்தமாக விசாரிக்கச் சென்ற வனத்துறையினர், அங்கே பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த மான் கறியைப் பார்த்து அதிர்ந்துபோனார்கள். அங்கே சோதனை நடத்தியபொழுது மான் கொம்பு, மான் தோல் ஆகியவற்றுடன் மான்களைக் கொல்லப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி மற்றும் குண்டுகளைக் கைப்பற்றினார்கள். அவர்களை விசாரித்தபோது சஜீவன்தான் மானையும், மாட்டையும் கொன்றார் என வாக்குமூலம் கொடுத்தார்கள்.

ddஇந்தத் தகவல் தமிழக காவல்துறையின் உயரதிகாரிகளுக்கும், வனத்துறை உயரதிகாரி களுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் முதல்வர் அலுவலகத்துக்கும் சொல்லப்பட்டது. ‘உடனடியாக சஜீவனைக் கைது செய்யுங்கள்’ என முதல்வர் அலுவலகத்திலிருந்து பாய்ந்தது உத்தரவு. “சஜீவன் கொடநாடு வழக்கில் முக்கியமான குற்றவாளி. இவ்வளவு செயல்களை செய்தும் அவன் இதுவரை சிக்கவில்லை. அவனைக் கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு கிடைத்த வாய்ப்பு இது. இதை அடிப்படையாக வைத்து கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துங்கள்’என முதல்வர் அலுவலகத்தில் இருந்தே மேலும் உத்தரவுகள் பறந்தன.

இதை அ.தி.மு.க. ஆதரவு போலீஸ் மூலம் தெரிந்துகொண்ட அ.தி.மு.க. மேலிடம், சஜீவனை ‘போலீஸ் கையில் சிக்காதே, தலைமறைவாகிவிடு’ என உத்தரவிட, சஜீவன் கேரளா வழியாக துபாய்க்கு ஓடிவிட்டார். அவரை தலைமறைவுக் குற்றவாளி என அறிவித்து கைது செய்ய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் நீதிமன்ற உத்தரவுப்படி கொட நாட்டில் ஓம் பகதூர் என்ற கூர்க்கா காவலாளி கொலை செய்யப்பட்ட இடத்தை போலீசார் பார்க்கச் சென்றார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் கொடநாடு மேனேஜர் நடராஜன் நழுவலாக நடந்துகொண்டிருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறை தயாராகி வருகிறது.

Advertisment

கொடநாடு வழக்கில் முக்கியக் குற்றவாளியான கனகராஜ் ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டார். ‘அது விபத்து அல்ல, கொலை’ என நிரூபிக்க அப்பொழுது இந்த வழக்கை மறுவிசாரணை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஐ.ஜி. சுதாகர் முற்பட்டார். அந்த விபத்து எடப்பாடிக்கு மிக நெருக்கமான அப்போதைய அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முக்கிய பங்கு வகித்த ஒரு நபரால் கையாளப்பட்டு அதை விபத்து என்று மாற்றிய தாக சி.பி.சி.ஐ.டி. போலீசா ரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதைப்பற்றிய செய்தி வெளியே தெரியாமல் இருக்க பல கோடி ரூபாய் செலவு செய்யப் பட்டுள்ளது.

ஆனால் நக்கீரன் அந்த விபத்தைப் பற்றிய அனைத்து செய்திகளையும் தனது கள ஆய்வின் மூலம் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தது. கனகராஜின் சகோதரர் தனபாலும் இந்த விபத்தில் உள்ள சந்தேகங் களைப் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். கனகராஜுடன் ஒன்றாக சரக்கடித்த ரமேஷ் என்ற அவரது சகோதரர் கனகராஜுக்கு விபத்து நடந்ததை நேரடியாகப் பார்த்ததாக சாட்சியம் அளித்திருந்தார்.

அவர் எப்படி விபத்து நடந்த துல்லிய மான நேரத்தில் அந்தப்பக்கமாக இன்னொரு காரில் வந்து பைக்கில் சென்ற கனகராஜ் விபத்தில் சிக்கியதைப் பார்த்திருக்க முடியும் என அந்த விபத்தைப் பற்றி நக்கீரன் கேள்வி எழுப்பியிருந்தது.

“கனகராஜ் வாயைத் திறந்தால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு பற்றிய உண்மை கள் வெளியே வரும் என்றே அவர் கொல்லப் பட்டார் என்ற கோணத்தில் ஐ.ஜி. சுதாகர் விசாரணையைக் கொண்டு சென்றார். அவரது முயற்சிக்கு அ.தி.மு.க. ஆதரவு காவல்துறையிலிருந்தே முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால், தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் கனகராஜ் கொலையில் உள்ள உண்மைகளைக் கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டது.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்ததும் கொடநாடு மீண்டும் தலைப்புச் செய்தியாகும் என்கிறது போலீஸ் வட்டாரங்கள்.