Advertisment

கொடநாடு வழக்கு! ஆறுகுட்டி சொன்ன ரகசியம்! -சிக்கும் எடப்பாடி

ss

கொடநாடு வழக்கு, ஜெய லலிதா மரண மர்மத்தை விளக்கும் ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை, வேலுமணியின் ஸ்மார்ட் சிட்டி ஊழல் ஆகியவை வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சியின் மிகப்பெரிய ஆயுதங்களாக வெடிக்கும்... எடப்பாடி, வேலுமணி சிக்குவார்கள் என்கிறார்கள் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.

Advertisment

கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ் என்பவர் திடீரென ஒரு கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்தார். “கொடநாடு வழக்கு விசாரணை மிகவும் மெதுவாகச் செல்கிறது. இந்த விசாரணையை வேகப்படுத்த வேண்டும்” என்பதுதான் அவர் வைத்த கோரிக்கை.

dd

வாளையார் மனோஜ் முக்கியக் குற்றவாளிகளான கனகராஜ் மற்றும் சயானுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டவர். மனோஜ், ஓம் பகதூர் என்கிற காவலாளியின் வாயை அழுத்தி மூடியதால்தான் அவர் மூச்சுத்திணறி இறந்தார். அந்தச் சம

கொடநாடு வழக்கு, ஜெய லலிதா மரண மர்மத்தை விளக்கும் ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை, வேலுமணியின் ஸ்மார்ட் சிட்டி ஊழல் ஆகியவை வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சியின் மிகப்பெரிய ஆயுதங்களாக வெடிக்கும்... எடப்பாடி, வேலுமணி சிக்குவார்கள் என்கிறார்கள் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.

Advertisment

கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ் என்பவர் திடீரென ஒரு கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்தார். “கொடநாடு வழக்கு விசாரணை மிகவும் மெதுவாகச் செல்கிறது. இந்த விசாரணையை வேகப்படுத்த வேண்டும்” என்பதுதான் அவர் வைத்த கோரிக்கை.

dd

வாளையார் மனோஜ் முக்கியக் குற்றவாளிகளான கனகராஜ் மற்றும் சயானுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டவர். மனோஜ், ஓம் பகதூர் என்கிற காவலாளியின் வாயை அழுத்தி மூடியதால்தான் அவர் மூச்சுத்திணறி இறந்தார். அந்தச் சம்பவம் நடந்தபோது சயான் அந்த இடத்தில் இல்லை. ஆனால் வாளையார் மனோஜ் அந்தக் கொலையில் நேரடியாகப் பங்கெடுத்தார். இப்படி கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் நேரடியாகப் பங்கெடுத்ததாகக் குற்றம்சாட்டப்படும் குற்றவாளியே வழக்கின் விசாரணையை வேகப்படுத்துங்கள் என்று கோரிக்கை வைப்பது ஏன் என epsஅனைவரும் ஆச்சரியமாகவே பார்க்கின்றார்கள்.

இது குறித்து நாம் விசாரித்த போது, “இந்த மனோஜ் சிறையில் இருக்கும்போது எடப்பாடி வசம் வந்து விட்டார். அவருக்கு ஒரு பெரிய தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் அவர் வழக்கை வேகப் படுத்தச் சொல்லி மனு போடுகிறார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கொடநாடு வழக்கை தனக்கு நெருக்கமாக இருந்த கோவை மண்டல டி.ஐ.ஜி. மற்றும் நீலகிரி மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டர் சுபாஷிணி ஆகியோர் மூலம் எடப்பாடி கண்காணித்து வந்தார்.

சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை வாகனங்களுக்கு டீசல் போடுவதில் ஊழல் நடந்தது என எழுந்த புகாரில் சுபாஷினி சிக்கிக் கொண்டார். அவர் மீது விசாரணை நிலுவையில் உள்ளதால் கொடநாடு விவகாரம் தொடர்பாக எதுவும் போலீசாரால் சொல்லப்படுவதில்லை.

அதேபோல் கோவை டி.ஐ.ஜி. முத்துசாமி யிடமும் ஐ.ஜி. சுதாகர் எதையும் விவாதிப்ப தில்லை. சங்கர்ராமன் கொலை வழக்கை புலனாய்வு செய்த பிரேம்குமார் எஸ்.பி.யுடன் ஜெயலலிதா நேரடியாக தொடர்பு வைத்திருந்தார். அடிக்கடி அது சம்பந்தமாகப் பேசினார். அதுபோலவே, கொடநாடு கொலை வழக்கில் ஐ.ஜி. சுதாகர் நேரடியாக முதல்வர் ஸ்டாலினிடம் பேசுகிறார். ஆறுகுட்டி எம்.எல்.ஏ., எடப்பாடி பற்றி சொன்ன ரகசியங்களை ஆறுகுட்டியிடம் விசாரித்த ஐ.ஜி. சுதாகர், “இதைப் பற்றி வெளியே பேசக்கூடாது” என உத்தரவிட்டுள்ளார்.

xx

இதனால் விசாரணையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திருதிருவென முழித்த எடப்பாடி, வாளையார் மனோஜை விட்டு வழக்கை வேகமாக விசாரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவுடன் வழக்கறிஞர் விஜயன் என்பவர் எடப்பாடி மற்றும் முரளி ரம்பா ஐ.பி. எஸ்., சங்கர் ஐ.ஏ.எஸ். ஆகியோரையும் விசாரிக்க வேண்டுமென தாக்கல் செய்த மனுவுக்கும் பதில் தரும் வகையில் அரசுத் தரப்பு பதில் ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்தது.

அந்தப் பதிலில் “இதுவரை முன்னூறு சாட்சிகளை விசாரித் திருக்கிறோம். பல புதிய குற்ற வாளிகள் விரைவில் பிடிபடு வார்கள்’என தெரிவித்திருக்கிறது.

ஆக, ஆறுகுட்டி சொன்ன எடப்பாடி பற்றிய ரகசியங்களை உண்மையாக்கும் வகையில் போலீஸ் ரகசியமாக ஈடுபட்டிருக் கின்றது. வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்த உண்மைகளின் ஒரு பகுதியை அரசு வெளியிடும் என்கிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.

“ஆறுமுகசாமி கமிஷனைப் பொறுத்த வரை அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஆறுமுகசாமி சொன்ன பரிந்துரைகளை தனியாக ஒரு ஸ்பெஷல் போலீஸ் விசாரணை அமைப்பின் மூலம் விசாரிக்கலாம் என்கிற ஆலோசனையையும் அரசு பரிசீலித்து வருகிறது” என்பது கோட்டை வட்டாரங்களின் தகவல்.

Advertisment

ss

அதேபோல, வேலுமணி விசயத்திலும் அரசு மிகவும் சீரியசாகவே உள்ளது. வேலுமணி ஸ்மார்ட் சிட்டி ஊழல் மற்றும் கொடநாடு வழக்கு என இரண்டிலும் சிக்குகிறார்.

கொடநாடு வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடமிருந்தும் ஒரு அழுத்தம் மாநில அரசுக்கு வந்துள்ளது. அ.தி.மு.க.வை துண்டு துண்டாக்கி வைத்து வேடிக்கை பார்க்க வேண்டும் என நினைக்கும் பா.ஜ.க., கொடநாடு வழக்கை எடப்பாடிக்கு எதிரான ஆயுதமாகவே பார்க்கிறது.

nkn100922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe