கொடநாடு வழக்கில் ஏகப்பட்ட குழப்பங்கள். வழக்கின் இன்றையநிலை பற்றிய விசாரணைத் தகவல் களை உடனடியாக தாக்கல் செய்யச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொட நாடு வழக்கில் புதிய தகவல்களையும் குற்றவாளிகளையும் வழக்கில் இணைத் துள்ளனர்.
"நான் ஒரு சிறிய திருடன். இவ்வளவு பெரிய கொள்ளையெல்லாம் செய்ததில்லை. நான் இதைச் செய்யத் தயங்கினேன். அச்சமயம் தினமும் ஒன்றரைமணி நேரம் என்னிடம் பேசி எனக்குத் தைரியம் கொடுத்தார் ஒருவர். அவர் கொடுத்த அந்த தைரியம்தான் என்னை இந்தக் குற்றச்செயலில் ஈடுபட வைத்தது. என்னிடம் மட்டுமல்ல, முக்கியக் குற்றவாளியான கனகராஜிடமும் அதேபோல் பேசுவார்''’என்று அனுபவ் ரவி சாட்சியம் அளித்துள்ளார். “இப்படி அனுபவ் ரவியுடன் மணிக்கணக்கில் பேசும் நபர் வேறு யாருமல்ல, சாட்சாத் எடப்பாடி பழனிச் சாமியேதான். அதைச் சுற்றித்தான் சி.பி. சி.ஐ.டி. தனது இடைக் கால அறிக்கையைத் தயாரித்துள்ளது''’ என் கிறார்கள் போலீஸ் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
“கோவையில் நகைக்கடைகள் நிறைந்துள்ள பஜா ரில் உள்ள அனுபவ் ஜுவல்லர்ஸ் கடை யின் உரிமையாளர் தான் ரவி. மிக ஏழ் மையான குடும்பத் தைச் சேர்ந்த ரவி, பஜாரில் நகை வாங்க வருபவர்களின் புரோக்கராகத்தான் இருந்தார். பின்னர் திருட்டு நகைகளை வாங்கி விற்க ஆரம்பித்தபோது ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வுடன் நெருக்கமாகி, அதன் பிறகு வீடுகளைக் காலி செய்வது, டபுள் டாகுமெண்ட் போடுவது போன்ற வில்லங்க விவகாரங்களிலும் ஈடுபட ஆரம்பித்தார். போலீசின் கையாளான ரவிக்கு, ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமான ஒரு சிவில் என்ஜினீயர் நண்பரானார். அவர் கனகராஜின் நண்பரான சயானுக்கு நெருக்கமானவர். கோவை மாவட்ட மணல் மாபியா கும்பலுடன் இணக்கமாக இருந்த ஆறுக்குட்டி, அனுபவ் ரவி கோஷ்டி, மணல் கடத்தலிலும் கனகராஜ் உதவியுடன் ஈடுபட்டது.
போயஸ் கார்ட னிலிருந்து ஒரு கட் டத்தில் வெளியேற்றப் பட்ட கனகராஜ், ஆறுக்குட்டிக்கு டிரை வராகிறார். ஆனால், அதிகநேரம் அனுபவ் ரவியின் டிரைவராகவே இருந்தார். ‘ஜெ.’ உடல் நலமில்லாமல் அப் போலோவில் இருந்த சமயம் ‘ஜெ.’ இறந்து விடுவார் என நம்பிய கும்பல் கொடநாடு கொள்ளை குறித்த சதித்திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தது. முன்னாள் அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசன், ரவி, கனகராஜ் ஆகியோரின் சந்திப்புகள் கொடநாடு வழக்கில் முக்கியமானவை. கூடலூர் சஜீவன், அவர் தம்பி சுனில், மந்திரி மில்லர், கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன் அனைவரை யும் இணைத்த ஒரே புள்ளி அனுபவ் ரவி. "கொள்ளை நடந்ததும் ‘போலீசில் சரண் அடைந்துவிடு'’என்று கனகராஜ் இறப்பதற்கு முன்பு ரவி சொன்னதாக, எடப்பாடி பழனிச்சாமியின் போலீஸ், அரசு தரப்பு சாட்சியாக பதிவு செய்தது.
தி.மு.க. அரசு கொடநாடு வழக்கில் மறு விசாரணை செய்ய ஆரம்பித்ததும், தனக்கு நெருக்கமான டி.ஐ.ஜி. முத்துசாமி மூலம் அனுபவ் ரவி விசாரணைக்கு வர சம்மன் அனுப்ப வைத்தார் எடப்பாடி. அந்த சம்மனை அடிப்படையாகக்கொண்டு கொடநாடு வழக்கில் மறு விசாரணை வேண்டாம் என சுப்ரீம் கோர்ட் வரை மனு செய்ய வைத்தார் எடப்பாடி. இப்படி எடப்பாடியின் நம்பர்ஒன் துருப்புச்சீட்டாக இருந்த அனுபவ்ரவிதான், தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கும் நம்பர்ஒன் துருப்புச் சீட்டாக மாறியிருக்கிறார். ‘ஜெ.,’அப்போலோவில் இருந்தபோதே கொடநாடு கொள்ளை சதித்திட்டத்தை வேலுமணி, தங்கமணி, எடப்பாடி ஆகியோர் உருவாக்குகிறார்கள். இது கனகராஜ், ரவி உட்பட ஐந்துபேருக்கும் தெரியும்.
எடப்பாடி முதலமைச்சரானதும் தினகரனும், சசிகலாவும் ஜெயி லுக்குப் போகிறார்கள். அந்த நேரத்தில் கொள்ளை நடத்த சஜீவன், வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் கேரள மனைவி, முக்கியக் குற்றவாளியான சயான், கனகராஜ் ஆகியோர் மூலம் கேரள மாநிலம் திருச்சூருக்குப் பக்கத்தில் உள்ள இரிஞ்ஜாலக்குடா வில் கொள்ளைக் கும்பல் திரட்டப்பட்டு, அனுபவ் ரவிக்கு நெருக்கமான சயான், கனகராஜ் மூலமாகவே ஒருங்கிணைக்கப்பட்டார்கள். கொள்ளை யடிக்கும்போது ஒரு கொலையும் நடக் கிறது. குற்றவாளிகள் தப்பிச் செல்கிறார் கள். அவர்களை கூடலூரில் போலீஸ் பிடிக்கிறது.
போலீஸ் பிடியிலிருந்து அமைச்சர் மில்லர் முயற்சியால் சஜீவனின் தம்பி சுனிலை விடுவிக்கிறார்கள். வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மனைவி மூலம் குற்றவாளிகளை திரட்டி ஒரு குடவுனில் தங்கவைத்து சோறுபோட்டு, அவர்களை அப்போதைய போலீஸ் எஸ்.பி. முரளி ரம்பாவிடம் ஒப்படைத்ததும் அனுபவ் ரவிதான். சயானின் மனைவி, குழந்தையையும் சேர்த்து விபத்து மூலம் கொலை செய்து, விபத்தில் சிக்கிய சயானுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததும் அனுபவ் ரவிதான். கனகராஜிடம் இருந்து டாகுமெண்ட்களை வாங்கியதுடன், அவன் கொல்லப்படும்வரை காவல்துறை அதி காரிகளிடம் பேசியது மற்றும் கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை சேலம் இளங்கோவன் மூலம் கைப்பற்றியது உட்பட அனைத்துமே ரவி மூலமாகத்தான் நடந்தது.
அனுபவ் ரவி, சஜீவன், அவர் தம்பி சுனில், முன்னாள் அமைச்சர் மில்லர், ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., சேலம் இளங்கோவன், அன்பரசன், எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரி கனகராஜ் உள்ளிட்ட 19 பேரை கொடநாடு வழக்கில் தொடர்புபடுத்தி சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தயாரித்துள்ளது. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட் பட, மற்றவர்களின் தொடர்பு பற்றிய விசாரணை நடந்துவருவதுடன், கிரீன்வேஸ் சாலை செல்போன் டவர் உரையாடல் ரகசியங்கள் போன்ற பல வெடிகுண்டுகள் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் வெடிக்கக் காத்திருக்கிறது''’என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.