Advertisment

கொடநாடு வழக்கு தீர்ப்பு! sசிக்கலில் எடப்பாடி!

eps


 
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் பின்னணியில் பதிவு செய்யப்பட்ட துணை வழக்கான காட்டேஜ் உரிமையாளர் சாந்தா மிரட்டப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது உதகை கூடுதல் மகிளா நீதிமன்றம். இதனால் பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Advertisment

ஜெயலலிதாவிற்கு சொந்த மான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நள்ளிரவில், கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அரசியல் ஆதாயத்திற் காகத்தான் இது நடந்ததென போயஸ் கார்டனில் ஓட்டுநராக பணியாற்றிய கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், தீபு, ஜம்ஷீர் அலி, சதீசன் உள்ளிட்ட 11 நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் கூடுதலாக பல துணை வழக்குகளை பதிவு செய்தது அப்போதைய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருந்த நீலகிரி மாவட்ட கா


 
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் பின்னணியில் பதிவு செய்யப்பட்ட துணை வழக்கான காட்டேஜ் உரிமையாளர் சாந்தா மிரட்டப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது உதகை கூடுதல் மகிளா நீதிமன்றம். இதனால் பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

Advertisment

ஜெயலலிதாவிற்கு சொந்த மான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நள்ளிரவில், கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அரசியல் ஆதாயத்திற் காகத்தான் இது நடந்ததென போயஸ் கார்டனில் ஓட்டுநராக பணியாற்றிய கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், தீபு, ஜம்ஷீர் அலி, சதீசன் உள்ளிட்ட 11 நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் கூடுதலாக பல துணை வழக்குகளை பதிவு செய்தது அப்போதைய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருந்த நீலகிரி மாவட்ட காவல்துறை.

Advertisment

"அரசியல் ஆதாயத்திற்காக இந்த சம்பவம் நடைபெறவில்லை என சித்தரிப்பதற்காக, இவர்கள் மட்டுமே குற்றவாளிகள், மேற்கொண்டு எந்த குற்றவாளியும் இல்லையெனக் காட்டுவதற்காக, 11 குற்றவாளிகளை மட்டுமே முன்னிறுத்தி, பல துணை வழக்குகளை பதிவு செய்தது, அந்த மணியான அமைச்சரின் மனைவியின் பேட்ஜ்மேட் 'டி.எஸ்.பி.'யின் தலைமையிலான காவல்துறை. 

eps1

அதில் ஒன்று தான் உதகை பேருந்து நிலையம் மெயின் பஜாரில் ராஜா என்ற பெயரில் காட்டேஜ் நடத்திவந்த சாந்தா என்பவரை (சாட்சி 14) 2019ஆம் ஆண்டு, தங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்கக்கூடாது என மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட ஊட்டி மத்திய போலீசாரின் வழக்கு. (உதகை நகர் மத்திய காவல் நிலைய குற்ற எண்.63/2019 ம/ள். 447, 506 (1) ஒடஈ மற்றும் பிரிவு 4 பசடஐர). வழக்கின்படி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் இதில் சேர்க்கப்பட்டனர். இது பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு.'' என் றார் வழக்கின் புலனாய்வு அதிகாரி ஒருவர்.

தனிப்படை அதிகாரி ஒருவரோ, "சாந்தா இந்த வழக்கில் சேர்க்கப்பட்டதே தனிக்கதை. கொடநாட்டில் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு சரியாக, 23.04.2017 தேதி, காலை 8.00 மணிக்கு 6 நபர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருப்பதாகக்கூறி பேருந்து நிலையம் அருகிலுள்ள ராஜா காட்டேஜில் அறை எடுத்தார்கள். அறையை பதிவு செய்து கொடுத்தது தான் தான் என சாந்தாவை வைத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு சாட்சியமாகக் கொண்டுவந்தது அப்போதைய காவல்துறை. அதே சாந்தாவைக் கொண்டு தங்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தால் விபரீதம் நடக்குமென்று வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சயானும், வாளையாறு மனோஜூம் மிரட்டியதாக புகாரை வாங்கி வழக்குப் பதிவு செய்தது ஊட்டி மத்திய போலீஸ். இதே வேளையில் இந்த வழக்கினை விரைந்து முடிக்க வேண்டுமென 2020-ல் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது சாந்தா தரப்பு. மூன்று மாதங்களில் வழக்கினை விரைந்து முடித்திடல் வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு'' என்றார் அவர்.

eps2

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான பல துணை வழக்குகளில் ஒன் றான இவ்வழக்கு உதகை கூடுதல் மகிளா நீதிமன் றத்தில் விசாரணை செய்யப் பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை யன்று, வழக்கை விசாரித்த கூடுதல் மகிளா நீதிபதி சோழியா, "அரசு தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் உறுதி செய்யப் படாததால் இவ்வழக்கில் குற்றச்சாட்டிலிருந்து சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகிய இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள்'' என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞர் முனிரத்தினமோ, "கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் வாளையார் மனோஜை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நோக்கத்திலேயே இந்த மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஒரு ஆதாரத்தையும் நிரூபிக்க முடியாததால் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்''’என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் விஜயனோ, "முதன்மை வழக்கில் சேர்க்கப்பட்ட வர்கள் இந்த கொலை, கொள்ளை சம்பவம் யாருக்காக நிகழ்த்தப்பட்டது? என்பதனை தங்களுடைய பேட்டிகள் மூலம் பொதுவெளி யில் வெளிப்படுத்தினர். இது பலருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. தொடர் பேட்டி களால் தாங்களும் சிக்குவோம் என்பதனையறிந் தவர்கள் அவர்களின் வாயை அடைக்க, அவர்களை மிரட்டும் நோக்கில் பல துணை வழக்குகளைக் கையாண்டனர். அதில் ஒன்றுதான் காட்டேஜ் உரிமையாளர் சாந்தாவின் வழக்கு. ஆனால் இது தற்பொழுது முறியடிக்கப்பட்டு விட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களை இயக் கிய உண்மையான குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள்'' என்றார். இந்த துணை வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.!

-வேகா

nkn031225
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe