தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும்தான் போட்டி என உளறிக் கொட்டிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய், தி.மு.க.வின் 75-ம் ஆண்டு பவளவிழாவை அறிவுத் திருவிழாவாக உலகுக்குப் பறைசாற்றிய நிகழ்வை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை 75 ஆண்டு காலமாக உயிர் மூச்சாகக் கொண்டு இனம், மொழி, மண் காக்கும் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்ட இயக்கம் தி.மு.க. கருப்பு-சிவப்பு எனும் அக்கட்சியின் கொடி ஏற்படுத்திய தாக்கம் வெறும் அரசியல் அல்ல; அது ஒரு வேள்வி. எதிரிகளின் தூக்கத்தை 75 ஆண்டுகாலம் கெடுத்திருக்கிறது கருப்பு-சிவப்பு!
தி.மு.க.வும் கருப்பு சிவப்பும் ஏற்படுத்திய தாக்கத்தை அறிவுத்திருவிழாவாக உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது தி.மு.க. தலைமை. அந்த விழாவில் தி.மு.க. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர், நடிகர் விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை தாக்கிப் பேசினர். இதில், த.வெ.க.வை அஸ்திவாரம் இல்லாத அட்டை எனவும், கண்காட்சியில் வைக்கப்படும் தாஜ்மஹால் போன்ற செட்டிங் என்றும் செமை யாக கலாய்த்திருப்பார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த நிலையில், இந்த அறிவுத் திருவிழாவின் வரலாற்றை, லட்சியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத நடிகர் விஜய், தனது சோசியல் மீடியா பக்கமான எக்ஸ் தளத்தில் வன்மத்தைக் கக்கி யிருக்கிறார். அதில், "ஆட்சி அதிகாரத்திலிருந்து விரைவில் மக்களால் தூக்கி எறியப்படப்போகும் அதிகார மமதைகொண்ட கட்சி, அவதூறு அரசியல் ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறது. அந்த கட்சியின் ஒரே இலக்கு நம்மைத் தூற்றுவதுதான்.
"அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்து விட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழா வாக இல்லாமல் அவதூறுத் திருவிழா வாகத் தானே மாறியது? நம்மைப் பார்த்து, கொள்கை யற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம், அவர் களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன? பவளவிழா பாப்பா, நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா. நீ நல்லவர்போல நடிப் பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா''’என்று முழுக்க, முழுக்க தி.மு.க.வை வசைபாடி ஆவேசமாக பதிவுசெய்திருக்கிறார் விஜய்.
விஜய்யின் இந்த பதிவு தி.மு.க.வில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, "தி.மு.க. வின் பவளவிழா என்பது 75 ஆண்டு கால கல் வெட்டு; நீண்ட வரலாறு. விஜய் போன்ற தற்குறி கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த அறிவுத் திருவிழாவையே தி.மு.க. நடத்தியது. இந்த தமிழ் மண்ணில் தி.மு.க. ஏற்படுத்திய சமூக தாக்கத்தை மையப்படுத்தி பல்வேறு தலைப்புகளில் நடந்த 10 அமர்வுகளின் கருத்தரங்கமும் அதில் எதிரொலித்த கருத்துக்களும் காலத்தாலும் அழிக்க முடியாத பக்கங்கள்.
அறிவுத் திருவிழாவுக்கு வந்து அமர்ந்து ஐந்து நிமிடங்கள் கேட்டுப் பார்த்திருந்தால்தான் 75 ஆண்டு காலம் தி.மு.க. ஏற்படுத்திய தாக்கம், அரிதார நடிகருக்கு புரிய வந்திருக்கும். ஆனாலும் கருத்தரங்க கருத்துக்களைப் புரிந்துகொள்ளக்கூட போதுமான அறிவு தேவை. அந்த அறிவு இல்லாத அறிவிலிகளாக விஜய்யும், அவரை சுற்றியிருப்பவர் களும் இருப்பதால்தான் வள்ளுவர் கோட்டம் வரவில்லை போலும்.
1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்திய எதிரிகளுக்கு தி.மு.க. ஒரு சிம்ம சொப்பனம் தான். அதன் அரசியல் களத்தையும் கொள்கை களையும் கண்டு மிரண்டுபோன இயக்கங்கள்தான் இந்தியாவில் அதிகம். இப்போதும் தி.மு.க.வை சீண்டிப்பார்க்க கனவில் கூட நினைக்க அவர் களுக்குப் பயம். நீ ஒரு பச்சா! உன்னை சீண்டுவதை தி.மு.க. கொள்கையாக வைத்திருக்கிறதா? நீ பகல் கனவு காண்கிறாய். தி.மு.க. பவளவிழா பாப்பாவா? உன்னை அறிவிலி, தற்குறி என்று தமிழக மக்கள் விமர்சிப்பது பொருத்தம்தான். இல்லையெனில், தி.மு.க.வைப் பார்த்து இப்படி உளற முடியுமா?
தி.மு.க.வை சீண்டினால் மட்டுமே நாம் வளரமுடியும் என நினைத்து மோதிப்பார்த்த இயக் கங்கள், தலைவர்கள் எல்லாம் அரசியலில் காணா மல் போனதும், தி.மு.க.வால் வீழ்த்தப்பட்டதும் உள்ளங்கையில் இருக்கிற நெல்லிக்கனி மாதிரி. அந்தப் பட்டியலில் நீயும் இருக்கிறாய் விஜய்! திமுகவுடன் மோதியவர்கள்தான் வீழ்ந்துபோனார் கள்; தி.மு.க. வீழ்ந்ததில்லை. நீயும் அந்த ரகம்தான்.
சொந்தமாக ஒரு வரி பேசவோ, எழுதவோ புத்தியில்லாத நீ, தி.மு.க.வை விமர்சித்தாவது அரசியலில் நிற்க நினைக்கிறாய்... நின்றுகொள். தன்னை எதிர்த்தவர்களுக்கும், விமர்சித் தவர்களுக்கும் அரசியல் முகவரி கொடுத்தது தி.மு.க.தான் என்பதை தெரிந்து வைத்திருக்கிறாய். அதனால்தான் தி.மு.க.வை விமர்சித்து, அரசியல் முகவரி தேடி அலைகிறார் விஜய். திமுகவின் அறிவுத் திருவிழா ஏற்படுத்திய தாக்கத்தை ஜீரணித்துக் கொள்ளமுடியாமல் அலறிப் புலம்பு கிறார் விஜய். அதன் வெளிப்பாடுதான் அவரது இந்த பதிவு. உனக்கென்று என்ன கொள்கை இருக்கிறது? உன் கட்சியின் கொள்கை எனச் சொல்வதெல்லாம் தி.மு.க.வின் கொள்கைகள் தானே? தி.மு.க.வின் கொள்கைகளை அப்படியே ஜெராக்ஸ் காபி எடுத்தது போல எடுத்துக்கொண்டுவிட்ட நீ, தி.மு.க.வை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது?
நேரடியாகப் பொதுவெளியில் பேசப் பயந்துகொண்டு சமூக ஊடகங்களில் பதிவுபோடும் உன்னைக் கண்டு எப்போதும், எந்தச் சூழலிலும் தி.மு.க. பயப்படாது, பயந்ததும் இல்லை. உனக்குத் தைரியமிருந்தால் சமூகஊடகத்தினுள் ஒளிந்துகொள்ளாமல் பொதுவெளியில் பேச வா... மோதிப் பார்க்கலாம்! நீ ஒரு பலூன் பாப்பா! காற்றடித்தால் காணாமல் போய் விடுவாய். தி.மு.க. ஆலமரம்! அதனை அசைத்துப் பார்த்து அழிந்துபோனவர்கள்தான் அதிகம். தி.மு.க. அழியவில்லை; அழியாது. ஏனெனில் தி.மு.க.வும் கருப்பு சிவப்பும் வெறும் சொல் அல்ல; அது ஆயுதம்!'' என்று விஜய்யை தாக்கிவருகிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/vijay-2025-11-13-15-34-14.jpg)