தி.மு.க. இளைஞரணி சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அறிவுத் திருவிழாவில், "இருவண்ணக் கொடிக்கு வயது 75' என நடைபெற்ற இருநாள் கருத்தரங்கில், ஐந்தாவது அமர்வில், 'திராவிடப் பொருளாதாரத்தின் திசைவழி' என்ற தலைப்பில் பேசிய தி.மு.க. செய்தித் தொடர்புக்குழு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, "ஒரு குழந்தை பிறக்கிறது. அதற்கான மருத்துவமனை இருக்குதுல்ல...அது ஒரு முதலீடு. அந்த குழந்தைக்கு ஊசி போடுகிறோம்... டாக்டர்... ஊட்டச்சத்து... அது ஒரு முதலீடு... அந்த தாய்க்கு பிரசவ காலத்தில் நிதியுதவி செய்கிறோம்... அது ஒரு முதலீடு... அந்த குழந்தை ஸ்கூலுக்கு போகிறது... ஸ்கூல் வைத்திருக்கிறோம்... டீச்சர் வைத்துள்ளோம்... அது ஒரு முதலீடு.. அதுக்கு பிறகு அந்த குழந்தையின் ஸ்கூல் யூனிபார்மி லிருந்து, செருப்பிலிருந்து, புத்தகங்களிலிருந்து, சாப் பாட்டிலிருந்து அனைத்தையும் கொடுக்கிறோம்... அது ஒரு முதலீடு... அடுத்து அந்த குழந்தை காலேஜுக்கு வருகிறது... காலேஜுக்கு வரும்போது, அக்குழந்தை முதல் பட்டதாரியாக இருந்தால் கட்டணச்சலுகை... அது ஒரு முதலீடு... இப்படி முதலீடுகளை செய்து கொண்டே வருகிறோம்... அடுத்து தலையீடுகள்... என்னமாதிரி தலையீடுகள் செய்கிறோம்? ஒரு குழந்தை காலேஜுக்கு வருகிறதென்றால், அக்குழந்தை பிற்படுத்தப்பட்ட சமூகமா, பட்டியலினமா, பழங்குடியினமா, அவங்களுக்கு இட ஒதுக்கீடு கொடு. அது ஒரு தலையீடு.  இந்த இட ஒதுக்கீடு கொடுத்த பிறகு அந்த குழந்தை காலேஜில் படிக்கும்போது நான் முதல்வன் என்ற திட்டம் கொண்டுவந்தி ருக்கிறோம்... அது ஒரு தலையீடு... அப்போ  பிறந்ததிலிருந்து படித்து முடித்து வேலைக்கு செல்லும் வரை இந்த அரசாங்கம் முதலீடுகளையும், தலையீடு களையும் செய்கிறது. இந்த முதலீடும் தலையீடும் என் னாகிறது? நன்கு சம்பாதிக்கக் கூடிய திற னுள்ள ஆளு மையாக அந்த குழந்தையை சமூகத்திற்கு கொடுக்கிறது. அந்த பிள்ளை வருகிறது... சம்பாதிக்கிறது... சம்பாதித்த பிறகு சம்பாதிப்பதற்கு ஒரு வரி கட்டுகிறான்... ஆக, சாதாரண குடிசையில் பிறந்த ஒரு குழந்தைக்கு ஓர் இருபது ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கம் செய்யக்கூடிய முதலீடுகளும், தலையீடுகளும், அடுத்த 80 ஆண்டுகள்... அந்த குழந்தையின் இறுதிக்காலம் வரை ரிட்டர்னாக வந்துகொண்டேயிருக்கிறது! இதுதான் சமூக முதலீடுகள்'' என்றார்.

Advertisment

arivu1

அடுத்து பேசவந்த பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானத்தைப் பற்றி அவரது முனைவர் பட்ட பேராசிரியரான முன்னாள் திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் கூறுகையில், "ஜோதி சிவஞானம், திராவிட இயக்க கருத்தியலை தாங்கியவர். சென்னை பல்கலைக்கழகத்தில் என்னிடம் 27 பேர் முனைவர் பட்டம் பெற்றார்கள். 27 பேரில் 7 பேர் மாநில உரிமைகளைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வுகளை செய்தார்கள். ஜோதி சிவஞானமும் அப்படித்தான் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை முழுமையான சமூக நீதியை கடைப்பிடித்தது. 1915ஆம் ஆண்டில் தான் பொருளாதாரத்துறை தொடங்கப்பட்டது. அது நூறாண்டுகள் கொண்டாடப்படும்போது ஜோதி சிவஞானம் தான் அங்கே பொருளாதாரத்துறை பேராசிரியராக இருந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் ஒரு தலித் மாணவருக்கு பிஎச்.டி. கொடுத்தது பொருளாதாரத்துறை தான். அதற்கு ஆசிரியராக இருந்தவன் நான் தான். நான் ஓய்வுபெற்ற பிறகு, இன்னொரு பேராசிரியர் ஓய்வுபெற்ற பிறகு, ஒரு தலித் பேராசிரியருக்கும் இவருக்கும் துறைத்தலைவர் பதவிக்கு போட்டி வருகிறது. இவர்தான் சீனியர். அப்போது ஜோதி என்னிடம் கேட்டபோது, "அந்த தலித் பேராசிரியருக்கு விட்டுக்கொடுங்கள்' என்றேன். உடனே மனதார விட்டுக்கொடுத்தார். அப்படியாக, திராவிட இயக்க சமூக நீதிக்கொள்கையை உயர்த்திப் பிடித்தவர் ஜோதி சிவஞானம். ஜோதி மிகச்சிறந்த பொருளாதார அறிஞர்'' என்றார் பெருமிதத்தோடு.

Advertisment

அடுத்ததாக, "மாநிலங்களின் வளர்ச்சியும் கூட்டாட்சியின் அவசியமும்' என்ற தலைப்பில் பேசிய திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஜோதி சிவஞானம், "மாநிலங்களின் வளர்ச்சியென்பதே இந்தியாவின் வளர்ச்சிதான். இதற்கு அடிப்படை கூட்டாட்சி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி 1967-ல் வந்தபோதுதான் திராவிட மாடல் கட்டமைக்கப்பட்டது. அதனை அண்ணா தொடங்கிவைத்தார்... அவருக்கு அதிக காலம் வாய்ப்பில்லாததால் இதை கட்டமைப்பதில் கலைஞர் முக்கிய பங்காற்றினார். இந்த மாடலை கலைஞர், சமூக நீதி, மாநில உரிமை எனும் இரண்டின் அடிப்படையில் தான் கட்டமைத்தார். மாநில சுயாட்சி எவ்வளவு முக்கியமென்பதை நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது ஷெட்யூலில், தெரிந்துகொள்ளலாம். அதில் மாநிலங் களுக்கு என்னென்ன வரி விதிக்கலாமென்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஒன்றிய அரசை தனியாகப் பிரித்து, ஒன்றிய அரசு என்னென்ன செலவுசெய்யலாம், என்னென்ன வரி வசூலிக்கலாமென்று குறிப்பிடுகிறது. அதேபோல் இரண்டு அரசுகளும் சேர்ந்து செய்யக்கூடிய விசயங்களும் இருக்கிறது. இதை பொருளாதார அடிப்படையில் தான் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியா முழுக்க பயன்படக்கூடிய பொருட் களெல்லாம் ஒன்றிய அரசுக்கு ஒதுக்கப்பட்டி ருக்கிறது. பாதுகாப்புத்துறை, விமான, ரயில் போக்குவரத்து, வெளியுறவுத்துறை, தொலைத் தொடர்பு போன்றவை ஒன்றிய அரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. மக்களின் வளர்ச்சியோடு நேரடித் தொடர்புடைய கல்வி, சுகாதா ரம், காவல் துறை, விவ சாயம் உள்ளிட்டவை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் பொதுவான சுற்றுச்சூழல் போன்றவை பொதுப்பட்டியலில் இருக்கிறது. இந்த பட்டியல்படி அந்தந்த அரசுகள், அந்தந்த வேலையை செய்தால் நிச்சயம் வளர்ச்சி ஏற்படும். ஆனால், அரசியலமைப்புச்சட்டம் வந்த முதல் பத்தாண்டுகளில் மாநிலங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட துறையில் செயல்படவே முடியாதபடி ஒன்றிய அரசு திட்டக்குழு என்பதன் மூலம் தனது கட்டுக்குள் வைத்திருந்தது. ஒன்றிய அரசுக்கு வரி வருவாயும், மாநிலங்களுக்கு செலவினங்களுமாக இருந்தது. காமராஜரால் கல்வி, மதிய உணவு, சுகாதாரத்துக்கு செலவுசெய்ய நினைத்தும் முடியாத நிலை. அதனை 1969-ல் உடைத்தெறிந்தவர் கலைஞர். மாநில அரசுக்கு நெருக்கடி செய்த அதிகாரிகளின் பிடி தளர்ந்தது. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற திட்டங்களுக்கு செலவு செய்து, வருமானத்தை 28 சதவீதத்திலிருந்து 40 சதவீதத்துக்கு உயர்த்தினார்'' என்று பேசினார்.

arivu2

அடுத்ததாக, "திராவிடம் தந்த நலத்திட்டங் களும் நல்வாழ்வும்' என்ற தலைப்பில் மாநில திட்டக்குழுவின் செயல் துணைத்தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பேசுகையில், "40 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்திய பொருளா தாரம் பெருமளவு வேளாண்மை சார்ந்துதான் இருந்தது. வேளாண்மை சார்ந்திருக்கும்போது அந்த அதிகாரம் கிராமப்புறத்தில் யார் நிலம் வைத்திருந்தார்களோ அவர்களிடம்தான் இருந்தது. தமிழகம் இன்றைய தினம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருப்பதற்கு, கலைஞர் செய்த மகத்தான பணி என்னவென்றால், கிராமப்புற அதிகாரத்தை காலி செய்ததுதான்! கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்தார். பெருமளவு நிலம் நிலச்சுவான்தார்களிடம் இருந்தது. சைவ மடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரக்கணக்கான வேலி நிலம் இருந்தது. அவை குத்தகைதாரர்களிடம் இருக்கும். குத்தகை தாரர்களின் மூலம் கிராமத்தையே கட்டுக்குள் வைத்திருந்தார்கள். எனவே அவர்களின் அதிகாரங்களை ஒழிப்பதற்கு சில சட்டங்களை இயற்றினார். 

Advertisment

ஏற்கனவே நில உச்சவரம்புச் சட்டத்தால் அவர்கள் ஆட்டங்கண்டிருந்த சூழலில், கலைஞரின் திட்டங்கள் அவர்களிடமிருந்த அதிகாரங்களை குறைக்கச்செய்தது. பொது விநியோகத்திட்டம் கொண்டுவந்து ரேஷன் கடைகளில் விளை பொருட்களை சேர்த்தார். அரிசி 2 ரூபாய்க்கு கொடுத்தார். இதன்மூலம் நிலத்திலிருந்தும், உணவுத்தேவையிலிருந்தும் விவசாயிகளை காப்பாற்றினார். அதனால் நிலத்தின்மூலம் அதிகாரம் செய்தவர்களிடம் சென்று நிற்கவேண்டி யது இல்லாமல்போனது. கிராம நிர்வாகம் பரம்பரையாக வந்துகொண்டிருந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரி திரவியம் என்பவரின் ஆய்வறிக்கைப்படி கிராம நிர்வாகப்பணியை டி.என்.பி.எஸ்.சி. மூலமாகத் தேர்ந்தெடுக்கச்செய்து அரசுப்பணியாக மாற்றினார். இதில் அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக, அந்தந்த ஊர்களின் வசதிபடைத்தவர்கள் இருந்த சூழலை மாற்றி, அனைவரையும் அதிலே நுழைத்ததோடு, கிராமங்களுக்கு சாலை வசதி, பேருந்து வசதி, மின்விளக்கு வசதி எனப் பலவற்றையும் கொண்டுவந்து, கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவித்தார். இதன்காரணமாக வேளாண்மையை மட்டுமே பார்த்துக் கொண்டி ருப்பவர்கள் 5% என்றும், வேளாண்மையோடு மற்ற தொழில்களையும் 
பார்த்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கிராமப்புறங்களில், வேளாண்மை இல்லாத வேலைவாய்ப்புகள் அதிகம் என்ற சூழலை உருவாக்கியவர் கலைஞர். இந்த மாற்றத்தால் தான் விவசாயிகள் தற்கொலை என்ற நிலவரம் மாறியது. இதுதான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்துக்கான காரணம்'' என்றார்.

(கருத்தரங்கம் தொடரும்)

தொகுப்பு: தெ.சு.கௌதமன்