விளவங்கோடு இடைத்தேர்தல் களத்தில் காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் என நான்கு கட்சிகளும் பெண் வேட்பாளர் களையே நிறுத்தியுள்ளது மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

தொகுதியில் ஏற்கனவே 3 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக இருந்த விஜயதாரணி தொகுதிக்கு எதுவுமே செய்யாத நிலையில் அவர் மீது காங்கிரசாரும் தொகுதி மக்களும் அதிருப்தி யில் இருந்த நிலையில்... விஜயதாரணி எம்.பி. ஆசையால் பா.ஜ.க.வுக்கு ஓடியதால் காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி குறைந்துள்ளது.

எந்த நேரமும் கழுத்தில் காங்கிரஸ் துண்டோடு திரியும், காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த தொகுதிவாசியான தாரகை கத்பட்டை காங்கிரஸ் களமிறக்கியிருப்பது காங்கிரசாருக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 1996-ல் தி.மு.க.வில் குளச்சல் பெர்னார்டுக்குப் பிறகு கால்நூற்றாண்டுக்குப் பின் குமரி மாவட்டத்திலிருந்து மீனவ பிரதிநிதிக்காக ஒருவர் நிறுத்தப்பட்டிருப்பதால் மீனவ மக்களும் உற்சாகத்திலுள்ளனர்.

vv

Advertisment

தொகுதியில் மெஜாரிட்டியாக உள்ள 50 சதவிகித நாடார் வாக்குகளில் கிறிஸ்தவ நாடார் வாக்குகள் காங்கிரஸ் வசமும், இந்து நாடார் வாக்குகளில் பெரும்பான்மை பா.ஜ.க. வசமும் உள்ளது. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களான பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், கடந்த முறை போட்டியிட்ட ஜெய சீலன் இருவரும் இத்தொகுதியை நம்பியிருந்தனர். பா.ஜ.க. அமைப்புச் செயலாளரான கேசவவிநா யகம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தன் உறவுக்கார பெண்ணான நாயர் சமூகத்தின் நந்தினியை வேட்பாளராகக் கொண்டுவந்துள்ளார். இதனால் அதிருப்தியிலிருக்கும் தர்மராஜ், ஜெயசீலன் உட்பட முக்கிய நிர்வாகிகள் யாரும் நந்தினி வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடன் போகவில்லை என்கின்றனர் பா.ஜ.க.வினர்.

தொகுதியிலிருக்கும் 35 சதவிகிதம் நாயர் சமுதாய வாக்குகளை சேதாரம் இல்லாமல் அறுவடை செய்யவேண்டும் என்ற முனைப்பிலிருக்கும் பா.ஜ.க. நந்தினிக்கு உற்சாகம் கொடுக்கும் விதத்தில் தொகுதியிலிருக்கும் சுமார் 50 என்.எஸ்.எஸ். கரயோகங்கள் (நாயர் சர்வீஸ் சொசைட்டி) ஆதரவு அளிக்கப் போவதாகக் கூறியுள்ளன. இதை மறுத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, "நாயர் சமுதா யத்தின் பெருவாரி யான வாக்குகள் எங்களிடம்தான் உள்ளது. ஒன்றிரண்டு என்.எஸ்.எஸ். கரயோகம்தான் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அவற்றையும் தேர்தலுக்கு முன்னதாக எங்கள் பக்கம் வரவைத்து விடுவோம்' என கூறிவருகின்றனர்.

கடந்த 3 தேர்தல்களில், நாயர் சமுதாயத்தில் முக்கிய நபராக இருக்கும் காங்கிரசை சேர்ந்த அறநிலையத்துறை உறுப்பினர் ஜோதீஸ்குமாரை, விஜயதாரணி தன் பக்கம் வைத்துக்கொண்டு நாயர் வாக்கு வங்கியை தன் கைக்குள் கொண்டுவந்தார். தற்போது ஜோதீஸ்குமார் காங்கிரசின் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். இதை சாதகமாகப் பயன்படுத்த பா.ஜ.க. முயற்சியெடுத்து வருகிறது.

தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட்டுக்கு இருக்கிற ஓட்டு வங்கியைப் போல் அ.தி.மு.க.வுக்கு குறிப்பிட்டுச் சொல்லு மளவுக்கு ஓட்டு வங்கி கிடை யாது. அக்கட்சியின் வேட்பாளர் ராணி தொகுதிக்கு புதுசு என்ப தால் பெரும்பாலான நிர்வாகி கள் அவருடன் பணியாற்றத் தயங்குகிறார்கள். பா.ஜ.க.வில் சீட் கிடைக்காத அதி ருப்தியிலிருக்கும் தர்மராஜ், ஜெய சீலனின் ஆதர வாளர்கள் மூலம் இந்து நாடார் வாக்குகளை யும் மோதிர மலை, ஒரு நூறாம் வயல், குறத்தி மலை, வட்டப் பாறை, மேல மண்ணடி, கீழ மண்ணடி உள் ளிட்ட 17 மலைக் கிராமங்களின் காணி பழங்குடி யினர் வாக்கு களையும் அ.தி. மு.க. நம்பியிருக் கிறது. "மலைக்கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மின்சார வசதியை, முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வராக இருக்கும்போது அவர் முயற்சியெடுத்து நிறைவேற்றினார். அதனால் அந்த மலைக்கிராம மக்களின் ஓட்டு தி.மு.க. கூட்டணியிலிருக்கும் காங்கிரசுக்குதான்' என உத்தரவாதத்தோடு கூறுகிறார்கள் தி.மு.க.வினர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சேவியர் குமாரின் மனைவியான ஜெமினி நிறுத்தப் பட்டிருக்கிறார். கனிமவளக் கொள்ளையைச் சுட்டிக்காட்டியதால் தனது கணவர் கொல்லப்பட்டதாக அனுதாபத்தைப் பெற முயற்சிக்கும் ஜெமினி, தனது கணவர் வழியில் கனிமவளக் கொள்ளையைத் தடுப்பதற்காகவே இந்தத் தேர்தலில் நிற்பதாகக் கூறி வாக்கு கோருகிறார்.

விளவங்கோட்டைப் பொறுத்தவரை இடைத் தேர்தல் வெற்றிக்காக காங்கிரசும் பா.ஜ.க.வும் நேரடியாக மல்யுத்தத்தில் இறங்கியிருக்க, மற்றவை ஓரமாக அடித்துக் கொள்கின்றன. ஜாதி, மத வாக்குகள் தான் விளவங் கோடு வெற்றி யைத் தீர் மானிக்கும்.