ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோகனூர், செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்களான அர்ஜூன், சூர்யா இருவரும் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தின் விளைவாகவே இந்த விவகாரத்தின் மூலகாரணமான அ.தி.மு.க. ஒ.செ. பழனி மகனும், அ.தி.மு.க. ஐ.டி. விங் ஒ.செ.வு மான சத்யா உட்பட 8 பேரை காவல்துறை கைது செய்தது. இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

d

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இடதுசாரித் தலைவர்கள் நேரடியாக அந்த கிராமத்துக்கே வந்து, படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். ""இது அரசியல், சாதிய படுகொலை'' என அறிக்கை வெளியிட்டார் திருமாவளவன். அதேநேரத்தில் "புரட்சி பாரதம்' பூவை. ஜெகன்மூர்த்தி, ""இந்தக் கொலைக்கு அரசியலோ, சாதியோ காரணமில்லை. குடிவெறிதான் காரணம். இறந்தவர்களில் ஒருவர் எங்கள் கட்சித் தொண்டன்'' என்கிறார். எழுத்தாளரும், "சமூக சமத்துவப்படை' தலைவருமான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி, ""ஓட்டுக் கேட்டதாலோ, மது போதையாலோ கொலை செய்யப்படவில்லை. சாதி வெறியால் கொலை செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

தலித் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசுவதால், "இது அரசியல் கொலையா? சாதிய படுகொலையா? குழுச்சண்டையா' என்கிற விவாதம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தலித் அமைப்புகள் முட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

Advertisment

இந்தியப் பெண் சிந்தனையாளர்கள் களத்தின் தலைவர் சிவகாமி தலைமையில் உண்மை அறியும் குழு மக்களிடம் விசாரித்து அறிக்கை வெளியிட்டது. அதுபற்றி அவரிடம் நாம் கேட்டபோது, ""இரண்டு தரப்புக்கும் இடையே குருவராஜப் பேட்டையில் தகராறு வருகிறது. "சமாதானம் பேசலாம்' என அழைக்க... இரண்டு தரப்பும் சமாதானம் பேசிய இடத்தில் மோதல் ஏற்பட்டு கொலை நடந்துள்ளது. அது சாதிக் கலவரமோ, மது போதையால் ஏற்பட்டதோ, தேர்தல் வாக்களிப்பால் ஏற்பட்டதோ அல்ல. அரக்கோணம் பகுதியில் பரவலாகக் காணப்படும் தீண்டாமை கொடுமைகளை மறைக்கவே மேற்கண்டதை பரப்புகிறார்கள். இது முழுக்க, முழுக்க திட்டமிட்ட சாதிவெறித் தாக்குதல்'' என்றார்.

d

பா.ம.க. சார்பில் "சமூக நீதி பேரவை'யைச் சேர்ந்த 7 வழக் கறிஞர்கள் குழு உண்மை அறியச் சென்றுவந்தது. குழு உறுப்பின ரான வழக்கறிஞர் ஜானகிராம னிடம் கேட்டபோது, ""இது சாதிச் சண்டையோ, அரசியல் சண் டையோ கிடையாது. சரக்கு வாங்கிவிட்டு பைக்கில் வரும் போது உருவான சண்டை. இதில் இறந்துபோன ஒருவன்தான் தற் போது சிறையில் உள்ள ஒருவனை பீர் பாட்டிலால் முதலில் அடிக்கி றான். அதனைத் தொடர்ந்தே அடி வாங்கிய குரூப், ஆட்களை வர வைத்து அடிக்க... அதில் இரண்டு பேர் இறந்துபோகிறார்கள். இவர் கள் அனைவரும் ஒருவருக்கொரு வர் அறிமுகமானவர்கள்தான். மது குடிக்க, கஞ்சா குடிக்க, மணல் கடத்தல் என பல விவகாரங்களில் இரண்டு குரூப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். அதில் முன்பகையும் இருந்துள்ளது. இந்நிலையில் சாதாரண வாய்ச்சண்டை கொலை யில் முடிந்துள்ளது என்பதே நாங்கள் கண்டறிந்தது'' என்கிறார்.

Advertisment

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ""அரக்கோணத்தில் கொல்லப் பட்டவர்கள் வி.சி.க. இல்லை. கொலை செய்தவர்கள் பா.ம.க. கிடையாது. இரு தரப்புமே நண்பர் கள். குடிபோதையில் தகராறு வந்துள்ளது. இதில் அரசியலோ, சாதியோ கிடையாது. வன்னியர்கள் மீதான அவதூறுகளுக்கு பதில் தர "வன்னியர் இன, மான உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக் கம்' என்கிற அமைப்பு தொடங்கப் படுகிறது. வன்னியர்கள் மீது பரப்பப்படும் அவதூறு மற்றும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளுக்கு, இந்த அமைப்பு பதில் தரும்'' என அறிவித்துள்ளார்.

dddd

அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்களோ, ""தலித் கட்சிகள் தனித்தனியாக இயங்குவதோடு, "நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா?' என்கிற மோதலும் உள்ளது. தங்கள் கட்சியை, தலித் மக்களிடம் தக்கவைத்துக் கொள்ள இந்த விவகாரத்தில் முட்டிக் கொண்டு ஒவ்வொருவரும் தங்கள் விருப் பம்போல் நகர்த்துகிறார்கள், பேசுகிறார் கள். இதனால் இந்தப் பகுதியில் உள்ள சாதியப் பிரச்சினையையும், சட்டவிரோத செயல்களால் இரு தரப்பு இளைஞர்கள் பாதிக்கப்படுவதும் மறைக்கப்படு கிறது. அதுகுறித்து கவனம் எடுத்துக்கொண்டு, அதனை சரிப்படுத்த எந்த முயற்சியும் எந்த கட்சியும் எடுக்கவில்லை.

d

அரசியல் மட்டுமே செய்வது வேதனைக்குரியது. சாதியை வைத்து அரசியல் செய்பவர்கள், தங்கள் சமூக மக்களை சரியாக வழிநடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத விவகாரங்கள் வெளியே வந்தால், அதற்குத் துணைபோகும் தங்களது துறை விமர்சனத்துக்கு ஆளாகும் என காவல்துறையும் அடக்கி வாசிக்கிறது, அவர்களுக்கு கட்சிகளும் துணைபோகின்றன என்கிறார்கள்'' சமூக நலன் சார்ந்த கவலையுடன்.