"அ.தி.மு.க. மாஜிக்கள் 4 பேர் மீது நீதிமன்ற விசாரணைக்கான அனுமதியை கவர்னர் தரவிருப்பதாக கிடைத்துள்ள தகவல்கள் அ.தி.மு.க. மாஜிக்களை பதற வைத்திருக்கிறது. இதனால் எடப்பாடிக்கு நெருக்கடிகள் அதிகரித்துள் ளன' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.

ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற் கான அனு மதி கேட்டு தி.மு.க. அரசு அனுப்பி வைத்த கோப்புகளை நீண்டகாலமாக கிடப்பில் வைத் திருப்பதாக கவர்னர் ரவி மீது கடுமையான குற்றச் சாட்டை சமீபத்தில் வீசியிருந்தார் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி.

dd

Advertisment

குறிப்பாக, தமி ழகத்தில் தடை செய்யப் பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக தமிழகத்தில் விற்பனை செய்துகொள்ள குட்கா விநியோகஸ்தர்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச் சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் என பலர் மீது வழக்குப் பதிவு செய்தது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.

ஒருகட்டத்தில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப் பட்டது. இதனையடுத்து வழக்கை கையிலெடுத்த சி.பி.ஐ. அதிகாரிகள், இது தொடர்பாக நிறைய ஆதாரங் களை சேகரித்தனர். மாஜி அமைச்சர் கள் மீது நீதிமன் றத்தில் வழக்குத் தொடர முகாந்திர மும் ஆதாரங்களும் இருந்ததால் வழக்கு போடுவதற்காக மாநில அரசின் அனுமதியைக் கோரியது சி.பி.ஐ.

இதனை ஏற்றுக் கொண்டு கடந்த 12-09-2022-ல் அனுமதி தந்தது தி.மு.க. அமைச்சரவை. அன்றைய தினமே கவர்னரின் ஒப்புதலுக்காகவும் இந்த கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அனுமதி தராமல் நிலுவையில் வைத்தார் கவர்னர் ரவி. இதனால், சி.பி.ஐ. அதிகாரிகளும் இதன்மீது அக்கறை காட்டவில்லை. மேலும், தி.மு.க. அரசுக்கு நினைவூட்டல் கடிதமும் எழுதவில்லை சி.பி.ஐ.

Advertisment

அதேபோல, அ.தி.மு.க.வின் முன்னாள் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது ஊழல் வழக்குகளை பதிவு செய்தது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.

இவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய தி.மு.க. அரசிடம் அனுமதி கோரியபோது, அதற்கும் ஒப்புதலளித்ததுடன் அந்த கோப்பினையும் கடந்த 12-09-2022 மற்றும் 15-05-2023 ஆகிய தேதிகளில் கவர்னருக்கு அனுப்பி வைத்தது தி.மு.க. அரசு. ஆனால், அனுமதி தராமல் இவைகளையும் கிடப்பில் போட்டுவிட்டார் கவர்னர்.

கவர்னரின் இத்தகைய செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி, "இவைகளுக்கு உடனடியாக அனுமதி தரவேண்டும்' என்று சமீபத்தில் கடிதம் எழுதினார் சட்ட அமைச்சர் ரகுபதி. இந்த கடிதம் அரசியல்ரீதியாக பரபரப்பான நிலையில்... "விஜயபாஸ்கர் மற்றும் ரமணா மீதான வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கிறது. அவைகள் சட்ட பரிசோதனையில் இருக்கின்றன. அதேபோல கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட உண்மையான விசாரணை அறிக்கை சமர்ப்பித்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்குக்கு அனுமதி கேட்டு எந்த கோரிக்கையும் ராஜ்பவன் பெறவில்லை'’என்று கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கவர்னர் உண்மையை மறைக்கிறார் என அம்பலப்படுத்தும் வகையில், விஜயபாஸ்கர் மற்றும் வீரமணி தொடர்பாக தமிழக அரசு அனுப்பிவைத்த கோப்பினை ராஜ்பவன் பெற்றதற்கான ஆதார ரசீதுகளை வெளியிட்டு பதிலடி தந்தார் அமைச்சர் ரகுபதி.

dd

இதுகுறித்து பேசிய ரகுபதி, "வீரமணிக்கு எதிரான ஊழல் வழக்குக்கு அனுமதி கேட்டு மாநில அரசு அனுப்பி வைத்த கோப்புகளில், லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கைகள் அனைத்தும் அடங்கி யிருக்கின்றன. விசாரணை அறிக்கையுடன் இணைந்த கோப்பினைப் பெற்றுக்கொண்ட நிலையில், நாங்கள் கேள்வி கேட்டதும், 298 நாட்களுக்கு பிறகு அறிக்கை கிடைக்கவில்லை என ஆளுநர் சொல்வது அழகல்ல.

விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கிலும் விசாரணை அறிக்கை, பரிந்துரை ஆகியவை அடங்கிய கோப்பினை ராஜ்பவன் பெற்ற தற்கான ஆதாரம் இருக்கிறது. அப்படியிருந்தும் ஆளுநர் பொய் சொல்கிறார்.

நாங்கள் எழுதிய கடிதத்திற்கு முறையான பதிலைத் தராமல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் இரட்டை வேடம் போடுகிறார் ஆளுநர். அ.தி.மு.க.வினருக்கு எதிரான நடவடிக்கை களுக்கு தடையாகவும், தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் செயல்பட்டு முதல்வரை பயமுறுத்த நினைக்கிறார். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சமாட்டார் முதல்வர் ஸ்டாலின்.

ஆளுநர் பொய் சொல்லிவருகிறார் என்ற நிலையிலும், ஒன்றிய அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல இந்த விவகாரத்தில் இருந்து வருகிறது. ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். இனியும் முதல்வர் ஸ்டாலின் பொறுமையாக இருக்க மாட்டார்''‘என்றார்.

இப்படி, ஆளுநருக்கு எதிராக கச்சை கட்டும் தி.மு.க. அரசு, அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெறும் வரை ஓயப்போவதில்லை. இந்த மாதம் 20-ந் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதில், பல்வேறு பிரச்சசினைகளை முன் வைத்து நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

அந்த திட்டத்தில் கைக்கோர்த்திருப்ப துடன் அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சர்களுக்கு எதிரான கோப்பில் கவர்னர் கையெழுத்துப் போட வலியுறுத்தியும், ஒன்றிய அரசு அவரை திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டியும் நாடாளுமன்றத்தில் போர்க்குரல் உயர்த்தவிருக்கிறது தி.மு.க.

இந்த நிலையில்தான் டெல்லி சென்றுவிட்டு திரும்பியுள்ளார் கவர்னர் ரவி. மாஜிக்களுக்கு எதிரான ஊழல் கோப்புகளும், சட்ட மசோதாக்களும் கிடப்பில் இருப்பது குறித்து அமித்ஷாவுடன், கவர்னர் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என கோட்டை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட நிலையில், மாஜிக்களுக்கு எதிரான ஊழல்கள் குறித்து விசாரித்தபோது, ‘’அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்க வேண்டும் என்றும், 15 இடங்கள் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கடந்த பல மாதங்களாகவே எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது பா.ஜ.க. தலைமை. அதில் இறுதி முடிவு இன்னும் எட்டப்படாததால்தான் அ.தி.மு.க. மாஜிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு தி.மு.க. அரசு அனுப்பி வைத்த கோப்பில் கையெழுத்துப் போடாமல் நிலுவையில் வைத்திருக்கிறார் கவர்னர்.

பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பினை எடப்பாடி நிறைவேற்றுவார் என்பதால்தான் இதுநாள்வரை அந்த ஊழல் வழக்குகள் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டாம் என கவர்னரை ஒன்றிய அரசு தடுத்து வைத்திருக்கிறது. ஆனால், சமீபகாலமாக, பா.ஜ.க.வுக்கு எதிரான சிந்தனையில் இருக்கிறார் எடப்பாடி. அதாவது, அ.தி.மு.க. கூட்டணி யில் பாஜகவை சேர்க்கக் கூடா தெனும் அவரது திட் டத்தை அறிந்துள் ளது பா.ஜ.க. தலைமை. இப்படிப் பட்ட சூழலில் தான், 20-ந் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக எதிர்க்கட்சிகளுடன் சபாநாயகர் விவாதிக்கும் அனைத்துக் கட்சி களின் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமியும் அழைக்கப் பட்டுள்ளார். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி வரும்போது கூட்டணி விசயத்தில் உறுதியான முடிவை எடுக்க அவருடன் பா.ஜ.க. தலைமை ஆலோசனை நடத்தவிருக்கிறது.

அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், அ.தி.மு.க. மாஜிக்கள் 4 பேருக்கும் எதிரான ஊழல் வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர அனுமதிக்குமாறு கவர்னருக்கு ஒன்றிய அரசு உத்தரவிடலாம் என்பதை உணர்ந்துதான், பதட்டத்தில் இருக்கிறார்கள் மாஜி மந்திரிகள்.

ஆக, மாஜிக்களின் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருப்பதால், தங்களுக்கு எதிரான ஊழல் வழக்கு கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி தந்துவிடாமல் இருக்கும் வகையில் மோடியிடமும் அமித்ஷாவிடமும் பேசவேண் டும் என எடப்பாடிக்கு நெருக்கடி தந்து வருகிறார்கள் மாஜிக்கள்.

ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணியே வேண்டாம் என நாம் நினைக்கிறோம். இவர்களோ, மோடியிடமும் அமித்ஷாவிடமும் பேச வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இவர்களுக்காக நாம் எதற்குப் பேச வேண்டும்? டெல்லிக்கு போனால்தானே ந,மக்கு இந்த நெருக்கடி? அதனால், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சி.வி.சண்முகத்தையோ அல்லது கே.பி.முனுசாமியையோ அனுப்பி வைத்து விட்டு, டெல்லிக்கு போகாமல் தவிர்க்கலாமே என திட்டமிடுகிறார் எடப்பாடி. இதனை அறிந்து அப்-செட்டான மாஜிக்கள், எடப்பாடி யை எப்படியாவது டெல்லிக்கு அனுப்பி காரியத்தை முடிக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றனர்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர்கள் லீடர்கள்.