அ.தி.மு.க. ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும்போது, இந்த தொகுதிகள் "நமக்கான வெற்றித் தொகுதிகள்' என டிக் செய்துவிட்டு வெற்றிக்காகக் காத்திருக்கும் சட்டமன்றத் தொகுதிகள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல்லும், நிலக்கோட்டையும். அத்தகைய திண்டுக்கல்லில் பலமிக்க அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக தி.மு.க. வேட்பாளராக களமிறங்க ஆர்வம்காட்டி வருகின்றார் திண்டுக்கல் மாநகராட்சியின் கவுன்சிலரும், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளருமான கே.கே.ஆர்.வெங்கடேஷ்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல்லை தனக்கே ஒதுக்கி சீனிவாசன் டீம் தேர்தல் பணிகளை முன்னின்று துவக்கியுள்ளது. "அ.தி.மு.க.வின் பொரு ளாளரும் அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் தனக்குத்தான் இங்கு சீட் என தேர்தல் பணிமனைக்காக முகூர்த்த கால் ஊன்றியிருக் கின்றார். 2016 இல் மீண்டும் பவர் பாலிடிக்ஸுக்கு வந்தவர், இந்த முறையும் திண்டுக்கல்லில் வெற்றி தமக்கே என்கின்ற எண்ணத்தோடு போட்டியிட இருக்கின்றார். அவரது ஹாட்ரிக் வெற்றியை தடுக்கும் நோக்கில் தி.மு.க.வின் கே.கே.ஆர்.வெங்கடேஷ் இருக்கின்றார்
அ.தி.மு.க. ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும்போது, இந்த தொகுதிகள் "நமக்கான வெற்றித் தொகுதிகள்' என டிக் செய்துவிட்டு வெற்றிக்காகக் காத்திருக்கும் சட்டமன்றத் தொகுதிகள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல்லும், நிலக்கோட்டையும். அத்தகைய திண்டுக்கல்லில் பலமிக்க அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக தி.மு.க. வேட்பாளராக களமிறங்க ஆர்வம்காட்டி வருகின்றார் திண்டுக்கல் மாநகராட்சியின் கவுன்சிலரும், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளருமான கே.கே.ஆர்.வெங்கடேஷ்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல்லை தனக்கே ஒதுக்கி சீனிவாசன் டீம் தேர்தல் பணிகளை முன்னின்று துவக்கியுள்ளது. "அ.தி.மு.க.வின் பொரு ளாளரும் அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் தனக்குத்தான் இங்கு சீட் என தேர்தல் பணிமனைக்காக முகூர்த்த கால் ஊன்றியிருக் கின்றார். 2016 இல் மீண்டும் பவர் பாலிடிக்ஸுக்கு வந்தவர், இந்த முறையும் திண்டுக்கல்லில் வெற்றி தமக்கே என்கின்ற எண்ணத்தோடு போட்டியிட இருக்கின்றார். அவரது ஹாட்ரிக் வெற்றியை தடுக்கும் நோக்கில் தி.மு.க.வின் கே.கே.ஆர்.வெங்கடேஷ் இருக்கின்றார் என்பது நம்பிக்கையளிக்கின்றது'' என்கின்றார் நத்தம் சாலையை சேர்ந்த இஸ்மாயில்.
யார் இந்த கே.கே.ஆர்.வெங்கடேஷ்?
பிரபல தொழிலதிபரான திண்டுக்கல் ரத்தி னத்தின் இளைய மகன்தான் கே.கே.ஆர்.வெங்கடேஷ். வழக்கறிஞரான இவர் துவக்கத்தில் மாநகராட்சிக்கான கவுன்சிலர் தேர்தலில் 17வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2022ஆம் ஆண்டு தி.மு.கழகத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். தொடர்ந்து தனது கழகத்திற்கான சேவையின் மூலம் கழகத்தில் 17-வது வார்டு செயலாளர் மற்றும் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
கே.கே.ஆர்.வெங்கடேஷின் நலத் திட்டங்கள், அரசியல் கட்டமைப்புக்கள் "ஒரு பக்கம் கழகத்தில் பொறுப்பு, மற்றொரு பக்கம் கவுன்சிலர் பொறுப்பு என சவால்கள் காத்திருந்த நிலையில் இரண்டையும் திறம்பட நிர்வகித்தார் என்பதனைக் காட்டிலும் அப்பதவிகளுக்கு தன்னை தகுதியுடையவனாக்கிக் காட்டிக்கொண்டார் கே.கே.ஆர். வெங்கடேஷ். மாநகரத்தில் கழக கூட்டம், நிகழ்ச்சி, மக்களுக்கான விழிப்புணர்வு என கழகரீதியான பணி களில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் மா.செ. ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரின் ஆலோசனை களை பெற்று பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல் தன்னுடைய வார்டான 17ஆவது வார்டில் உள்ள அத்தனை மக்களையும் தனது வாட்ஸ்-அப் குழுக்களில் இணைத்தார். பின் வார்டில், மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், குறைகள் என்ன இருக்கின்றதோ, அதனை உடனடியாக சரி செய்துவிட்டு அதனை மக்களிடம் தெரியப்படுத்துவதில் இவரை மிஞ்சும் மக்கள் பணியாளர் எவரும் இல்லை'' என்கின்றார் பாலகிருஷ்ணாபுரத்தினை சேர்ந்த நிர்மல்குமார்.
வார்டில் 165 உறுப்பினர்களு டன் 15 மகளிர் சுயஉதவிக்குழுக்களை ஆரம்பித்து வார்டு முழுவதும் உள்ள மகளிருக்கு சுமார் ரூபாய் 4.05 கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கி யது, வார்டு மகளிர் சுயஉதவிக் குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துதல், குப்பைகளை தரம் பிரிக்க ஜி.டி.என்.கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் மூலம் விழிப் புணர்வு முகாம் நடத்துதல், மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியே பிரிப்பதற்கு வார்டில் உள்ள 1200 குடும்பங்களுக்கும் பிளாஸ்டிக் தொட்டிகள் வழங்கியது, துணிப்பை பயன்படுத்த செய்யும் வகையில் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கியது, வார்டை மாடல் வார்டாக்கும் நோக்கில் அரசு திட்டங்களையும், மாநகராட்சி சணத ஈர்க்ங் சேவைகளை மாநகராட்சி அலுவலர்கள் மூலம் துவக்கி வைத்தது, பராமரிப்பின்றி இருந்த மாநகராட்சி சிறுவர் பூங்காவினை சொந்த முயற்சியில் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது, சொந்த செலவில் வார்டில் குப்பைகளை அகற்ற 3 சக்கர வாகனம் வாங்கியும், வாடகை டிராக்டர் மூலம் குப்பைகளை அகற்றி யும் 4 தூய்மை பணியாளர்களை நியமித்து மாதாந்திர ஊதியம் வழங்கி வார்டை மாடல் வார்டாக தூய்மையாக பராமரித்து வருவது மற்றும் அரசின் திட்டங்களான முதியோர் உதவித் தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா வழங்குதல் உள் ளிட்ட அரசு நலத்திட்டங்கள் வார்டு மக்களை சிரமமின்றி சென்றடைய உதவி செய்து வருவது உள்ளிட்ட பணிகள் கே.கே.ஆர்.வெங்கடேஷின் முத்திரைகளே!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/dindugal1-2026-03-03-11-59-36.jpg)
"இது ஒரு புறம் இருக்கட்டும். காவல் துறை மூலம் இணைய தளப் பயன்பாடு, சைபர் கிரைம் குற்றங்களை தடுத்தல், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, போக்கு வரத்து விதிகள் மற்றும் போதை ஒழிப்பு உள் ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வரும் தலைமுறையினர், எதனையும் எதிர்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி கொடுத் துள்ளார் கே.கே.ஆர்.வெங்கடேஷ். அவ ருடைய சமூகப்பணியை கண்டு பா.ஜ.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் அவரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகளை நடத்தியது. இருப்பினும் தலைவர் மு.க.ஸ்டாலின், இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வழியிலேயே என் பயணம் என்கின்றார் அவர். அவருடைய சமூக சேவை தொ டர வேண்டுமென்பது என்னைப் போன்ற ஒவ்வொருவரின் ஆசை. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் திண்டுக்கல்லை தமிழ்நாட்டிலேயே மிகச்சிறந்த தொகுதியாக மாற்றிக்காட்டுவார் கே.கே.ஆர்.வெங்கடேஷ்'' என்றார் நாகல்நகரை சகாய எட்வின்ராஜன்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கழகத்தில் இளைஞர்களுக்கு தான் பெருமளவில் வாய்ப்பு வேண்டுமென திருவண்ணாமலையில் நடந்த இளைஞ ரணி மாநாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலி னிடம் கோரிக்கை வைத்தார் இளைஞ ரணித் தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின். அவரது கோரிக்கை நிறைவேறுமென காத்திருக்கின்றனர் இளைஞரணியினர். அது உறுதியாகும் நிலை யில் 27 வயது இளைஞரான கே.கே.ஆர். வெங்கடேஷ் திண்டுக்கல்லில் சீனிவாசனை வீழ்த்தி தொகுதியினை தி.மு.க. வசம் கொண்டுவருவார் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
-NG'26
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us