Advertisment

ஆம்ஸ்ட்ராங் கொலை! சந்தேக வலையில் ஆருத்ரா ராஜசேகர்!

ss

ம்ஸ்ட்ராங் படுகொலை கிட்டத்தட்ட முடிந்துபோன ஆருத்ரா மோசடியை வெளியே கொண்டு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மத்தியபிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல், நீட் தேர்வு மோசடி இவற்றில் தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களை விட அதிகம் பேர் ஆருத்ரா மோசடியில் சிக்கி தங்கள் வாழ்வை இழந்து தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த எண்ணிக்கை நூறைத் தாண்டும்.

Advertisment

aa

வேலூரை மையமாக வைத்து இயங்கிய ஆருத்ரா கோல்டு எனும் இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் சுமார் ஐயாயிரம் கோடியை ஏமாற்றியது. முதலீட்டாளர்களுக்கு நாமம் போட்ட இந்த கம்பெனியின் முதலாளி ராஜசேகர், அவருக்கு வரும் எதிர்ப்புகளை ரவுடிகளை வைத்தே சமாளித்து வந்தார்.

Advertisment

ஆருத்ராவில் ராஜசேகரைப் போலவே பல நூறு கோடி ரூபாய்கள் கொள்ளையடித்தவன் ரூசோ. இதுபோல மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து மிரட்டிப் பணம்வாங்கும் வேலையைச் செய்துவந்த வினோஜ் பி.செல்வம், ஹரீஷ் மூலம் அமர்பிரசாத் ரெட்டி பா

ம்ஸ்ட்ராங் படுகொலை கிட்டத்தட்ட முடிந்துபோன ஆருத்ரா மோசடியை வெளியே கொண்டு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மத்தியபிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல், நீட் தேர்வு மோசடி இவற்றில் தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களை விட அதிகம் பேர் ஆருத்ரா மோசடியில் சிக்கி தங்கள் வாழ்வை இழந்து தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த எண்ணிக்கை நூறைத் தாண்டும்.

Advertisment

aa

வேலூரை மையமாக வைத்து இயங்கிய ஆருத்ரா கோல்டு எனும் இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் சுமார் ஐயாயிரம் கோடியை ஏமாற்றியது. முதலீட்டாளர்களுக்கு நாமம் போட்ட இந்த கம்பெனியின் முதலாளி ராஜசேகர், அவருக்கு வரும் எதிர்ப்புகளை ரவுடிகளை வைத்தே சமாளித்து வந்தார்.

Advertisment

ஆருத்ராவில் ராஜசேகரைப் போலவே பல நூறு கோடி ரூபாய்கள் கொள்ளையடித்தவன் ரூசோ. இதுபோல மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து மிரட்டிப் பணம்வாங்கும் வேலையைச் செய்துவந்த வினோஜ் பி.செல்வம், ஹரீஷ் மூலம் அமர்பிரசாத் ரெட்டி பா.ஜ.க. மா.த. என கூட்டு நெட்வொர்க் போட்டனர். ஒருபுறம் ரவுடிகள் மூலம் ராஜசேகர் மோசடிப் பணத்தைக் காப்பாற்றினார். இன்னொரு புறம் ஹரீஷை பா.ஜ.க.வின் விளையாட்டுப் பிரிவு நிர்வாகியாக்கி அவரை பிரதமரை வரவேற்கும் கமிட்டியில் நியமித்து மோடி பேரில் நடத்தப்பட்ட கபடி லீக் போட்டியை ஸ்பான்சர் செய்ய வைத்து மோசடிப் பணத்தைக் காப்பாற்றினார் அமர். பா.ஜ.க. நிர்வாகியான டைரக்டர் ஆர்.கே.சுரேஷ், பா.ஜ.க. வழக்கறிஞர் அணி செயலாளர் அலெக்ஸ், சுதாகர் ஆகியோர் ராஜசேகரிடமிருந்து மோசடிப்பணத்தை வாங்கினர். ஐயாயிரம் கோடி மோசடியில் சுமார் ஆயிரம் கோடி இவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது.

ss

இந்த வழக்கை விசாரித்த அபின்தினேஷ் மோடக் என்ற நேர்மையான அதிகாரி. ரூசோவையும், ஹரீஷையும் கைது செய்தார். வெளிநாட்டிலிருந்த ஆர்.கே.சுரேஷை சரணடைய வைத்தார். வழக்கறிஞர் அலெக்ஸை விசாரணைக்கு உட்படுத்தினார். ராஜசேகரை வெளிநாட்டிலிருந்து கைது செய்து கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கினார். ராஜசேகர் மற்றும் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு போட்டவர்களிடமிருந்து பணம் சம்பாதித்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என ஒரு பெரிய நெட்வொர்க்கே தமிழகத்தில் இயங்கி வந்தது. இவையனைத்தும் ஆம்ஸ்ட்ராங், ஆற்காடு சுரேஷ், அமர் பிரசாத் ரெட்டிக்கும் தெரியும். ராஜசேகரை இந்தியா விற்கு கொண்டு வருவது மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் தாமதமானது.

இந்நிலையில் ராஜசேகர் முழுக்க பா.ஜ.க. வசம் தஞ்சமடைந்தார். ஆனால், ரவுடிகளிடமிருந்து அவருக்கான மிரட்டல்கள் அதிகரித்தது. தென் மாவட்டமான தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பெரிய ரவுடி ஆம்ஸ்ட்ராங்கை சந்தித்து ஆருத்ரா விசயத்தைப் பற்றி அவரிடம் பேசினார். அவர் சொன்ன சில யோசனைகளை ஆம்ஸ்ட்ராங் செவிமடுக்கவில்லை. திண்டுக்கல் லைச் சேர்ந்த பிரபல ரவுடியான மோகன்ராம் இதில் தலையிட்டார். தமிழகத்தின் நம்பர் ஒன் ரவுடியான மோகன்ராம், வாடகை கொலையாளி களான நெட்டூர் கண் ணன், பாயாசம் என்கிற பரமசிவம், சீசிங் ராஜா, சைதை சுகு, நாகேந்திரன் என தமிழகத்தின் பெரிய ரவுடிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்தனர்.

ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிராக இவர்கள் அணி திரள்வதை ரவுடிகளைக் கண்காணிக்க அமைக்கப் பட்டுள்ள காவல்துறை யின் புலனாய் வுப்பிரிவு கண்டுகொள்ள வில்லை. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டால் அதற்கான பலியை ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு ஏற்றுக் கொள்வது என்றும், ஆம்ஸ்ட் ராங்கின் படுகொலைக்கு காரணம் ஆற்காடு சுரேஷ், ஆருத்ரா விசயத்தில் ஆம்ஸ்ட்ராங் குடன் மோதியது எனவும் கதை ஜோடிக்கப்பட் டது. அவர்களை கொலைக் களத்துக்கு வரவைத்து, ஆம்ஸ்ட்ராங் கதை முடிக்கப்பட்டது என்கிறது போலீஸ் வட்டாரங்கள்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணம் ஆருத்ரா வழக்கு என காவல்துறையினருக்கு தெரியும். ஆனால், ஆருத்ரா வழக்கு என்று கார ணம் சொன்னால் தமிழகத்தின் ஒட்டுமொத்த ரவுடிகளும் ஒரு கொலைக்காக ஒன்று திரண் டதை காவல்துறை எப்படி கவனிக்காமல் போனது என்ற கேள்வி வரும் என்பதால் ஆருத்ரா விவகாரம்தான் படுகொலைக்கு கார ணம் என்பதை கமிஷனராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் மென்று முழுங்கி ஒத்துக்கொண்டார். ஆனால், பா.ஜ.க. மா.த.வை இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை டார்கெட் செய்து பேசியதால் ஆருத்ரா விவகாரத்தை ஆம்ஸ்ட்ராங் படுகொலை பூதம் போல கிளப்பி விட்டுவிட்டது. இதில் நேரடித் தொடர்புள்ள அமர் பிரசாத் ரெட்டிக்கும், மா.த.வுக்கும் இடையிலே பெரிய சண்டை இதனால் வெடித்தது. அமரை ஆந்திராவுக்குப் போ என மா.த. சொன்னார்.

காவல்துறை இந்த விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டியை விசாரிக்கும். அதைத் தொடர்ந்து மா.த.வையும் விசாரிக்கும் எனத் தெரிந்ததால் அமர்பிரசாத்தை ஆந்திராவுக்கு அனுப்பி பதுங்கச் செய்யும் முயற்சிக்கு ஒத்துழைக்க சந்திரபாபு நாயுடு மறுத்துவிட்டார். அதனால் அமர், குஜராத்துக்கு போய்த் தஞ்சம் அடைந்திருக்கிறார் என்கிறது பா.ஜ.க. வட்டா ரங்கள். இப்படியாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை, ஆருத்ரா மோசடியையும், அதன் அதிபர் ராஜ சேகரையும் விவாதத்துக்கு கொண்டு வந் துள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையானதால் நாங்கள் ஏமாந்த ஐயாயிரம் கோடியை திருப்பித் தருமா என காத்திருக்கிறார்கள் ஏமாந்த மக்கள்.

nkn130724
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe