Advertisment

கடத்தல்... பண மிரட்டல்! கைதான போலீஸ்காரர்கள் -போலி நிருபர்கள்!

ss

"மூன்று போலீஸ்காரர்கள் உடபட 6 நபர்கள் வீட்டிற்கு வந்தனர். எனது கணவரை அழைத்து "அந்த' தொழில் தானே செய்யுறே, பணம் கொடு எனக் கேட்ட னர். இல்லையென்றதும், ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதால் அவரை தேடி வந்தேன்'' என ஒரு பெண்மணி, நல்லூர் காவல் நிலையத்தில் முறையிட, ரோந்தில்தானே இரண்டு போலீஸார் இருக்காங்க. அப்படியெனில் இந்த போலீஸ்காரங்க யார்? என சுதாரித்துக்கொண்டு விசா ரணையைத் தொடங்கினர் நல்லூர் போலீஸார்.

Advertisment

cc

அந்தப் பெண் நம்மிடம், "என்னுடைய பெயர் மஞ்சுளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரின் பெயர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சொந்த ஊர் திண்டுக்கல். திருப்பூர் தாராபுரம் சாலையிலுள்ள மாநகர் கோயில்வழி பகுதியில் குடியிருக்கிறோம். எங்க ளுக்கு சரியான வேலை எதுவும் கிடைக்காததால் வறுமையால் பாலியல் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி, எனக்கான

"மூன்று போலீஸ்காரர்கள் உடபட 6 நபர்கள் வீட்டிற்கு வந்தனர். எனது கணவரை அழைத்து "அந்த' தொழில் தானே செய்யுறே, பணம் கொடு எனக் கேட்ட னர். இல்லையென்றதும், ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதால் அவரை தேடி வந்தேன்'' என ஒரு பெண்மணி, நல்லூர் காவல் நிலையத்தில் முறையிட, ரோந்தில்தானே இரண்டு போலீஸார் இருக்காங்க. அப்படியெனில் இந்த போலீஸ்காரங்க யார்? என சுதாரித்துக்கொண்டு விசா ரணையைத் தொடங்கினர் நல்லூர் போலீஸார்.

Advertisment

cc

அந்தப் பெண் நம்மிடம், "என்னுடைய பெயர் மஞ்சுளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரின் பெயர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சொந்த ஊர் திண்டுக்கல். திருப்பூர் தாராபுரம் சாலையிலுள்ள மாநகர் கோயில்வழி பகுதியில் குடியிருக்கிறோம். எங்க ளுக்கு சரியான வேலை எதுவும் கிடைக்காததால் வறுமையால் பாலியல் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி, எனக்கான வாடிக்கையாளர்களை அழைத்து வருவார் ராஜேஷ். 21ஆம் தேதி இரவு 11.45 மணியளவில் வீட்டின் கதவு தட்டப் பட, யூனிபார்ம் போட்ட 3 போலீஸ்காரங் களுடன் மேலும் 3 நபர்கள் இருந்தாங்க. ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என நினைத் துக்கொண்டேன். வீட்டுக் குள் வந்தவர்கள், "அந்த தொழில்தானே செய்யுறே? பணம் பெரிசா வச்சிருப் பியே? ரூ.1 லட்சம் கொடுத் துடு. பணத்தைக் கொடுத் துட்டா வந்த வழியே போய் விடுவோம்' என மிரட்டிப் பார்த்தனர். "மாமூல மாசா மாசம் கொடுத்திடுறேனே? இப்ப எதுக்கு தனியா கேட்கிறீங்க?' என கணவர் வாக்குவாதம் செய்தார். "உன்னைய இப்டி கேட்டால் கொடுக்கமாட்ட. ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போறேன்' எனக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க'' என நடந்த சம்பவத்தை விவரித்தார் அவர்.

தொடர்ந்த விசாரணையில், ராஜேஷின் செல்போனை வைத்து பெருமாநல்லூரில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து மீட்டது நல்லூர் போலீஸ். கூடுதலாக அங்கே அடைத்துவைக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த தனபால்சிங், ஈரோட்டை சேர்ந்த முருகன் ஆகியோரையும் மீட்டு, ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஆறு நபர்களையும் கைது செய்தது. இவர்களில் யூனிபார் மில் வந்த போலீஸார், திருப்பூர் ஆயுதப்படை காவலர் களான கோபால்ராஜ், லட்சுமணன், நீலகிரி சோலூர் மட்டம் காவலரான சோமசுந்தரம் எனவும் மேலும், ஜெயராமன், ஹரீஷ், அருண்குமார் ஆகியோரை அடையாளம் கண்டறிந்தனர். கடந்த வாரத்தில் மது அருந்தியவர்களை மிரட்டி பணம் பறித்த ஆயுதப்படை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதும் வெட்கக்கேடானது.

Advertisment

உளவுப்பிரிவு அதிகாரி ஒருவரோ, "கைது செய்யப் பட்ட 3 காவலர்களும், கடந்த 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, ஆயுதப்படையில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். தற்போது வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட போதும் ஒருவருக்கொருவர் தொடர்பிலிருந்தனர். அதிக பணம் சம்பாதிப்பதற்காக, இணையத்தின்மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து, அவர்களைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டனர்'' என்றார். போலீஸ் காரர்களின் பாணியில் சில பத்திரிகை நிருபர்களும் மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கி பிடிபட்டுள்ளனர்.

cc

மோசடி பத்திரிகை நிருபர்கள்!

திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த வசந்த், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 'என் மீது 2021ஆம் ஆண்டு திருமுருகன்பூண்டி காவல் நிலை யத்தில் விபச்சார வழக்கு பதியபட்டுள்ளது. ஆனால் தற்போது பனியன் கம்பெனி வேலைக்கு சென்றுவருகிறேன். இரு நாட் களுக்குமுன் எனது வீட்டருகே மதுபோதையில் அமர்ந் திருந்தபோது காரில் வந்த கும்பலொன்று, ஓரிடத்துக்கு செல்ல வேண்டுமெனக்கூறி என்னை கணக்கம்பாளையத் துக்கு கொண்டுசென்று, "நீ பாலியல் தொழில் செய்து கொண்டிருக்கிறாய், அதனால் எங்களுக்கு பணம் கொடு' என மிரட்டவும், நான் மறுத்தேன். உடனே என்னை தகாத வார்த்தையால் திட்டி, அடித்தும், காலால் மிதித்தும் காயப் படுத்தினர். பின்னர் மீண்டும் காரிலேற்றி வீட்டிற்கு அருகில் கொண்டுவந்து இறக்கிவிட்டுச் சென்றனர்' எனத் தெரிவித் துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வசந்த் அளித்த புகாரின்பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், காவல் தகவல் மாதப்பத்திரிகையின் நிருபர் அன்புராஜ், செய்தி களஞ்சியம் நிருபர் நீலகண்டன் என்ற மணி, அதிரடி தீர்ப்பு மாத இதழ் நிருபர் முரளி மற் றும் உள்ளாட்சி சுடர் மாத இதழ் நிருபர் பரத் ஆகியோர் தான் கடத்திச்சென்றனர் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் இதேபோல் சிலரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்துவந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

படங்கள்: விவேக்

nkn310824
இதையும் படியுங்கள்
Subscribe