இந்திய பொருளாதாரத்தையே நிமிர்ந்து நிற்க வைக்கும் அளவிற்கான தங்கம் போலீசார் துணையுடன் சென்னை நகரில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு உடந்தை யாக இருந்த ஒரு போலீஸ் அதி காரியை காவல்துறை விசாரித்து வருகிறது என்கிற தகவல் வர, நாம் களத்தில் குதித்தோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police-officers.jpg)
இன்று நேற்றல்ல கடந்த முப்பது வருடமாக சென்னை பூக்கடை சரகத்திலேயே பணியாற்றி வருபவர் இசக்கி பாண்டியன். தற்பொழுது எஸ்.எஸ்.ஐ.யாக இருக்கும் இவர், மார்வாடிகள் செய்யும் தங்க வியாபாரத்துக்கு பாதுகாவலராக இருப்பவர். கடத்தல் மூலமாக வரும் தங்கம், கணக்கு காட்டாமல் வரும் தங்கம் என கிலோ கணக்கில் புழங்கும் கள்ளத் தங்க மார்க்கெட்டில் ஒரு குண்டூசி தங்கம் கூட இவருக்குத் தெரியாமல் நகராது. பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத தங்கத்தின் மூலம் இயங்கும் தங்க வணிகத்தில் ஒரு பெரிய அமவுண்ட் இசக்கி பாண்டியன் மூலம் கப்பமாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு சென்று விடும். கப்பம் கட்டியிருந்தால் ஓ.கே. கப்பம் கட்டவில்லையென்றால் ரெய்டுதான். குட்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற ஊழலைப் போலவே சென்னை நகரில் புழங்கும் இந்த தங்க வணிகத்திலும் ஊழல் நடைபெறுகிறது. இதை 2016ஆம் ஆண்டு ஜூலை 26-28 நக்கீரன் இதழில் "கண்டெய்னரில் கரன்சி, காரில் தங்கக் கட்டிகள்' என கவர் ஸ்டோரி வெளியிட்டிருந் தோம். அந்த இசக்கி பாண்டியனைத்தான் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை பூங்காநகர், எடப்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் கடந்த முப்பது வருடங்களாக முருகா மோல்டிங் ஒர்க்ஸ் என்ற பெயரில் தங்கநகைப் பட்டறைத் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "பூக்கடை காவல் மாவட்டத்திற்குட்பட்ட ரவுடிகள் கண்காணிப்புப் பிரிவு சிறப்பு எஸ்.எஸ்.ஐ. இசக்கிபாண்டியன் என்பவர் தன்னை மிரட்டி இரண்டு கிலோ தங்கத்தை கேட்கிறார், தரா விட்டால் கடைக்கு சீல் வைத்துவிட்டு திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பேன்' என்று பேசியதை செல்போனில் ரெக்கார்டு செய்த வாய்ஸை புகாருடன் வழங்கி னார். இதுதொடர்பாக விசாரித்த போதுதான் மேலும் பல ரகசியங்கள் வெளிவந்தன.
பாதிக்கப்பட்ட குமார், சென்னை சவுகார்பேட்டை அம்மன் தெருவில் முருகா மோல்டிங் ஒர்க்ஸ் நகைப் பட்டறையை கடந்த பதினைந்து வருடமாக நடத்தி வருகிறார். இவரும் பூக்கடை காவல் மாவட்ட தனிப்படை எஸ்.ஐ. இசக்கிபாண்டியனும் ஆரம்பத் தில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். குமாருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 2011-ல் இசக்கிபாண்டியன் சுமார் இரண்டரைக் கோடி மதிப்புள்ள எட்டு கிலோ தங்கம் கொடுத் துள்ளார். இதற்கு ஈடாக அவர்செய்யும் தொழிலில் இசக்கிபாண்டியன் மனைவி மற்றும் மகளை பார்ட்னர் ஆக சேர்த்துள்ளார். குமார் வாங்கிய கடனுக்கு கடந்த 2011 முதல் 2019 ஜூன் மாதம் வரை 11 கிலோ தங்கமும் 13 லட்சம் பணமும் கொடுத் துள்ளார். இந்தநிலையில் இசக்கிபாண்டியன் நகைக்கடை பட்டறை யைத் தன்வசப்படுத்தும் முயற்சியிலும் சமீபகால மாக இரண்டுகிலோ தங்கத்தை தரும்படியும் மிரட்டிவர... அதன் உச்சத்தில் ஆறுகோடி ரூபாய் பொருட்களு டன் நகைக்கடை ஊழியர் களை மிரட்டி நகைப் பட்டறைக்கு பூட்டு போட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police-officers1.jpg)
இது சம்பந்தமாக லோக்கல் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தும், புகாரை ஏற்காததால் குமார், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். ஆதாரமாக மிரட்டல் ஆடியோ மற்றும் சி.சி.டி.வி. பதிவுகளையும் வழங்க, அதன் பெயரில் சி.எஸ்.ஆர். மட்டுமே பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத் திலே கட்டப்பஞ்சா யத்து நடத்தி இருதரப்பும் சமரசம் செய்துவரு கின்றனர்.
யார் இந்த இசக்கி பாண்டியன், கிலோகணக்கில் தங்கம் எப்படி வந்தது என்ற பின்னணியைப் பார்த்தால் தலையே சுற்றுகிறது.
""மாசானமுத்து என்ற துணை ஆணையர் செல்வாக்கில் ஆரம்பத்தில் வலம்வந்த இசக்கி பாண்டியன்... பொன்மாணிக்க வேல், தாமரைகண்ணன், ஸ்ரீதர், தினகரன், வரதராஜிலு போன்ற மேல்மட்ட தொடர்பில் இதே காவல் மாவட்டத்தில் செல் வாக்குடன் டிப்டாப்பாக வலம்வரும் இவருக்கு சொந்த வீடு, ராயபுரத்தில் திருமண மண்டபம், பார்ட்டி ஹால், கெஸ்ட்ஹவுஸ், பைக் ஷோரூம் என நீண்டுகொண்டே போகிறது.
ஒரு கிராம் தங்கம் வாங்கவே சாமானியனுக்கு வழியில்லை. ஆனால் கிலோ கணக்கில் தங்கம் ஒரு எஸ்.எஸ்.ஐ.க்கு எங்கிருந்து வந்தது? விடை தேட சம்பந்தப் பட்ட யானைக்கவுனி ஆய்வாளர் வெங்கட்குமாரிடம் கேள்வி எழுப்பினோம்.
""விசாரணை நடந்து வருகிறது'' என்று தொடர்பைத் துண்டித்தார். கிலோகணக்கில் தங்கம் ஒரு போலீஸ் அதிகாரி யிடம் புழங்குவதை அறிந்த வருமான வரித்துறை களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் வடசென்னை உயரதிகாரிகள் இசக்கி பாண்டியனைக் காப்பாற்ற முழுவேகத்தில் களமிறங்கி யுள்ளனர். இவர்கள் மீதுதான் குட்கா ஊழல் புகார் எழுந்தது. லஞ்சம் வாங்கிக்கொண்டு குட்கா தயாரித்த மாதவராவ் என்பவ ருக்கு உதவியதாக புழல் பகுதி உதவி கமிஷனராக இருந்த மன்னர்மன்னன் என்பவரை தமிழக காவல்துறை சஸ்பெண்ட் செய்தது.
தினகரன், ஸ்ரீதர், வரத ராஜுலு ஆகிய அதிகாரிகளை குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. சமீபத்தில் சம்மன் அனுப்பி விசாரித்துள்ளது.
இந்த மூவர் அணி இசக்கி பாண்டியனின் தங்க கடத்தல் வணிகத்திலும் கைகோர்த்து அவரைக் காப்பாற்ற முயல்கிறது. இசக்கி பாண்டியன் விவகாரத்தில் மட்டுமல்ல நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை விவரம்அறியாத போலீசார் பிடித்துவிட்டாலும் இந்த போலீஸ் உயரதிகாரிகள் டீம் தலையிடும். "எந்த போலீஸ் காரர்கள் தங்கத்தை பிடித்தார் களோ, அவர்களே சல்யூட் அடித்து கடத்தல் தங்கத்தை அனுப்பி வைப்பார்கள்' என்கிறது காவல்துறை வட்டாரம்.
இதுபற்றி கருத்தறிய அடிஷனல் கமிஷனர் தினகரனை தொடர்புகொண்டோம். அவர் தொடர்பு எல்லைக்குள் வரவே இல்லை.
""சாதாரண திருட்டென் றால் போலீஸ் வரும், விசாரணை நடத்தும்... கைது செய்யும். ஆயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் தங்க கடத்தலில் போலீ சாரே சிக்கிக்கொண்டிருக்கும் போது போலீஸ் என்ன செய்யும்? விசாரணை மட்டுமே செய்யும், வேறொன்றும் நடக்காது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-அரவிந்த்
-தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ஸ்டாலின் & குமரேஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-06-28/police-officers-t_0.jpg)