லகின் தொன்மையான நகரங்களில் ஒன்று மதுரை. சங்கம் வைத்து தமிழை வளர்த் ததற்கு மட்டும் பேர்போனதல்ல மதுரை. இதன் சுற்றுவட்டாரங்கள் ஜல்லிக்கட்டு, கிடாமுட்டு எனப்படும் கிடாச் சண்டைக்கும் பேர்போனவை.

ff

மதுரையில் கிடாச் சண்டை தடைசெய்யப் பட்டு கடந்த 30 வருடங்களாக நடைபெறாமல் இருந்துவந்தது. இந்நிலையில் மதுரை கிடா முட்டு சங்கமும், நெல்பேட்டை கிடா நண்பர்கள் சங்கமும், செல்லூர் செவன் ஸ்டார் கிடாமுட்டு சங்கமும் இணைந்து மேலூர் மருதூர் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் கிடாமுட்டுச் சண்டையை ஏற்பாடு செய்ய மேலூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்ட னர். விலங்கு நல சங்கத்தினர் ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள் என்று காவல் துறையினர் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனை யடுத்து மதுரை உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற விழாக் குழுவினர், வருவாய்த்துறை, ஆர்.டி.ஓ, தலைமையில் ஆய்வு செய்து சட்டம்-ஒழுங்கிற்கு பாதகம் வராமல் காவல்துறையின் பாதுகாப் புடன் போட்டியை நடத்திக்கொள்ளலாம் என்று நீதிமன்ற உத்தரவை வாங்கினர்.

பின்னரும் ஆர்.டி.ஓ. பல்வேறு அழுத் தங்களால் கிடாச் சண்டையைக் கிடப்பில் போட,… மதுரையின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் கிடா வளர்க் கும் மக்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று தங்கள் தரப்பு விளக்கங்களைச் சொல்லி, மதுரை தமுக்கம் மைதானத்தில் 1980-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டு பிரம்மாண்டமாக நடைபெற்ற கிடா முட்டு போட்டியின் படங்களையும் செய்திகளையும் காட்டி, ஆர்.டி.ஓ. வரை ஒப்புதலைப் பெற்ற பின்பு ஜல்லிக் கட்டிற்கு இணையாக முதன்முதலாக கிடா முட்டுச் சண்டைப் போட்டியை நடத்திக் காட்டியுள்ளார்கள்.

ff

Advertisment

இந்த போட்டி நடக்க வழக்குத் தொடர்ந்து தொடர் முயற்சியெடுத்த வழக்கறிஞர் விஜய் நம் மிடம், "எப்படி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தார்களோ அதைப் போன்று தமிழர்களின் தொன்மையான கிடாமுட்டுப் போட்டிக்கான அனுமதியை முறையாக நீதிமன்றத்தில் பெற்று கிடாமுட்டுப் போட்டியை நடத்தியுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மதுரை, தேனி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, உசிலம்பட்டி, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட கிடாக்கள் போட்டியில் பங்கேற்றன. இதில் வெற்றிபெற்ற கிடாக்களுக்கு தங்கக்காசு, சைக்கிள், டிரஸ்ஸிங் டேபிள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பாக விளையாடிய கிடாய் உரிமையாள ருக்கு பைக் வழங்கப்பட்டது''’என்றார் மகிழ்ச்சியாக..

கிடா வளர்க்கும் தாரிக் நம்மிடம், "சார் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் ‘கிடாமுட்டு' நாட்டுக் கிடாக்கள் வளர்க்கப்படுகின்றன. என்னிடம் 10- க்கும் மேற்பட்ட முட்டுக் கிடாக்கள் உள்ளன. நாட்டுக் கிடாக்களில் கமுதி, கம்பம், எட்டயபுரத்தைச் சேர்ந்த பொட்டுக் கிடா, கச்சைகட்டி கருப்புக் கிடா, ராமநாதபுரம் கண் கருப்புக் கிடா முக்கியமானவை. மதுரையைப் பொறுத்தவரை நெல்லுப் பேட்டை, செல்லூர், உசிலம்பட்டி கிடாக்களுக்கு கிராக்கி அதிகம்''’என்றார் மகிழ்ச்சியாக.

ff

Advertisment

செல்லூர் செவன்பிரதர்ஸ் ராஜபிரபு, “"தமிழகத்தில் கிடா முட்டுக்கும் நெடிய வரலாறு உண்டு. சங்ககால இலக்கியங் களில் இதுகுறித்து குறிப்புகள் வருகின்றன. கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. முன்னோர், வீரியமிக்க நாட்டுக் கிடாக் களைத் தேர்ந்தெடுத்து மோதவிடுவார்கள். வெற்றிபெறும் கிடாக்களை இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தினார்கள். இதனால் தரமான ஆட்டுக்குட்டிகள் உருவாகின. தென் மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ஜல்லிக்கட்டிற்கு இணையாக கிடாமுட்டு விளையாட்டும் நடத்தப்பட்டுவந்தது.

கிடா முட்டுப் போட்டிகளை தமிழர்கள் மட்டுமில்லை, மெசபடோமியா என்று அழைக்கப்படும் ஈராக்கிலும் இன்றளவும் நடத்துகிறார்கள். ரோம் நகரில் நடத்துகிறார்கள். 2000 வருடங்களுக்கு முன் தமிழர்கள் ”"தகர் சண்டை'’என கிடாமுட்டுச் சண்டையை நடத்தியுள்ளார்கள். தகர் என்றால் ஆண் கிடா என்று பொருள். நம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இந்தப் போட்டியை மிகுந்த முயற்சியெடுத்து மீட்டெடுத்துள்ளோம். இதை மீட்டுக் கொடுத்த மதுரை மக்களுக்கு என் கோடானு கோடி நன்றிகள்!''’என்றார் கொஞ்சம் உணர்ச்சிவசமாக.