Advertisment

போலீஸ் டைரக்ஷனில் குஷ்பு சொகுசு கைது ஷூட்டிங்!-சீன் பை சீன் ரிப்போர்ட்!

kushboo

தி.மு.க. கூட்டணியை உடைக்கவேண்டும் என்பதுதான் ஏற்கனவே அந்தக் கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வுக்கு வந்த நடிகை குஷ்புவுக்கு மேலிடம் கொடுத்த முதல் அசைன்மெண்ட்.

Advertisment

மனுதர்மத்தில் உள்ள வரிகளை இணைய கருத்தரங்கில் சுட்டிக்காட்டிப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், ஒட்டுமொத்தமாக இந்துப் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என இட்டுக்கட்டி, குஷ்புவை முன்னிறுத்தி பா.ஜ.க மகளிரணி களமிறங்கியது.

kushboo

தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்துமிடம் அறிவிக்கப்பட்டது பிரபல நடிகையான கௌதமி, காயத்திரிரகுராம் ஆகியோர் சென்னையில் களமிறக்கப்பட, திருமாவின் தொகுதியான சிதம்பரத்தை குறிவைக்கும் வாய்ப்பு குஷ்புவுக்குத் தரப்பட்டது.

Advertisment

விடுதலை சிறுத்தைகள் பலமாக உள்ள கட்சியின், பலம் வாய்ந்த பகுதியான சிதம்பரத்தில் குஷ்புவை வைத்து பா.ஜ.க. போராட்டம்

தி.மு.க. கூட்டணியை உடைக்கவேண்டும் என்பதுதான் ஏற்கனவே அந்தக் கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வுக்கு வந்த நடிகை குஷ்புவுக்கு மேலிடம் கொடுத்த முதல் அசைன்மெண்ட்.

Advertisment

மனுதர்மத்தில் உள்ள வரிகளை இணைய கருத்தரங்கில் சுட்டிக்காட்டிப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், ஒட்டுமொத்தமாக இந்துப் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என இட்டுக்கட்டி, குஷ்புவை முன்னிறுத்தி பா.ஜ.க மகளிரணி களமிறங்கியது.

kushboo

தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்துமிடம் அறிவிக்கப்பட்டது பிரபல நடிகையான கௌதமி, காயத்திரிரகுராம் ஆகியோர் சென்னையில் களமிறக்கப்பட, திருமாவின் தொகுதியான சிதம்பரத்தை குறிவைக்கும் வாய்ப்பு குஷ்புவுக்குத் தரப்பட்டது.

Advertisment

விடுதலை சிறுத்தைகள் பலமாக உள்ள கட்சியின், பலம் வாய்ந்த பகுதியான சிதம்பரத்தில் குஷ்புவை வைத்து பா.ஜ.க. போராட்டம் நடத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு, அசம்பா விதம் நடக்க வாய்ப்புள்ளது என்ற உளவுத்துறை ஐ.ஜி ஈஸ்வரமூர்த்தி ரிப்போர்ட் தர, அது காவல்துறையில் சர்ச்சையை உருவாக்கியுள்ள போஸ்ட்டிங்கான சிறப்பு டி.ஜி.பி.யாக உள்ள ராஜேஷ்தாஸிடம் தரப்பட்டது.

அக்டோபர் 26ஆம் தேதி சிறப்பு டி.ஜி.பி.யிடமிருந்து வடக்கு மண்டல காவல்துறைக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குஷ்புவுக்கும் மேலிடத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போராட்ட சீன்கள் வடிவமைக்கப்பட்டன. முதல்நாள் இரவு முதலே மைலாப்பூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட சாந்தோமில் உள்ள குஷ்புவின் வீட்டை உளவுத்துறை கண்காணித்து வந்தது, மறுநாள் காலை ஏழு மணியளவில் பா.ஜ.க.வின் டால்பின் சேகர், சிவசங்கர், பத்மநாபன், நாகராஜன், மீனாட்சிராஜ் உள் ளிட்ட 19 நிர்வாகிகள் குஷ்புவின் காரை பின்தொடர்ந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈ.சி.ஆர்) பறந்தனர்.

சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸின் உத்தரவுக்கிணங்க உளவுத்துறை போலீசும் பின் தொடர்ந்தது. திருவான்மியூர் டூ மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலையில், சென்னை மாநகர காவல் எல்லையின் கடைசி காவல்நிலையமான, கானத்தூரைத் தாண்டி, செங்கல் பட்டு காவல் மாவட்ட எல்லையான கோவளம் அருகே முட்டுக்காட்டில் குஷ்பு மற்றும் ஆதரவாளர் களின் கார் போலீசாரால் நிறுத்தப்பட்டது. அங்கு ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி தலைமையில் ஏ.எஸ்.பி. சுந்தரவதனம் அடங்கிய ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் குஷ்பு டீமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

kk

அருகிலேயே சமுதாயக் கூடம்-திருமண மண்டபம் ஆகியவை இருந்தும் குஷ்பு மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பத்தொன்பது பேரும், எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் உள்ள சதன் ரெசிடெண்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எந்த இடத்தில் கைது செய்ய வேண்டும்-எங்கே தங்க வைக்க வேண்டும் என்பதையெல்லாம் போலீசார் முன்கூட்டியே க்ளியராக ஸ்கெட்ச் போட்டுவிட்டனர்.

சினிமா பிரபலங்கள் வழக்கமாக வீக்எண்ட்டை கொண்டாடும் சகல வசதிகளுடன் கூடிய ரெசார்ட் டைப் இடம் இது. அதன் வளாகத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார் குஷ்பு. இந்த செய்தி வெளியில் கசியவே 50க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கையில் கொடியுடன். செங்கல்பட்டு மாவட்ட செயலா ளர் ராஜ்குமார் தலைமையில் திரண்டதால் இரு கட்சித் தொண்டர்களுக்கு மிடையே கைகலப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அங்கு வந்த செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் தலைமையிலான போலீஸ்படை, வி.சி.க. மீது தடியடி தாக்குதல் நடத்தியது. எஸ்.பி.யே

kk

நேரடியாக லத்தியைச் சுழற்றி, வி.சி.கவினரை மட்டும் குறிவைத்து அடித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த வந்த மற்ற அதிகாரிகள் கூட தடியடியில் இறங்கவில்லை.

சதன் ரெசிடென்சியில் சொகுசாக சிறை வைக்கப்பட்டிருந்த குஷ்புவோ அங்குள்ள ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டபடி, செல்போன் கால்களை அட்டெண்ட் செய்தார். ஆங்காங்கே பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களை ரெசிடெண்சியின் சூட் அறையில் டி.வி செய்திகளை பார்த்தார். லேப்டாப்பிலும் சமூக வலைதளங் களிலும் பிஸியாக இருந்தார். வெரைட்டியான மதிய உணவுக்குப் பிறகு, அங்கிருந்த குளத்தில் வாத்துகள் நீந்துவதை ரசித்தபடி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிடம் பேசிக் கொண்டிருந்தார்,

மாலை 3 மணியளவில் சதன் ரெசிடண்சியின் உள்ளே மாவட்ட எஸ்.பி கண்ணனின் உத்தரவில் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர், மாவட்ட தலைவர் பலராமன், கட்சி நிர்வாகிகளான வேதாசுப்ரமணியன், பாஸ்கர் அகியோர் அனுமதிக்கப்பட்டனர். முற்றுகையிட்ட வி.சி.கவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 மணியளவில் குஷ்புவும் நிர்வாகிகளும் சொகுசு கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப் பட்டனர். மீடியாக்களில் காந்தியின் உப்பு சத்யாகிரகம் போல குஷ்பு கைது ட்ரெண்டாவதற்கும் பி.ஆர்.ஓ.வாக உதவியது எடப்பாடி அரசின் காவல்துறை.

-அரவிந்த்

nkn311020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe