Advertisment

போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் காக்கிகள்! அதிரவைக்கும் உண்மை!

ss

மிழகத்தில் புழக்கத்திலிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளைக் கட்டுப்படுத்துவது தமிழக அரசிற்கு பெரும் சவாலான முயற்சியாக உள்ளது. ஆனால் இந்த முயற்சிகளை வீணடிக் கும் விதமாக போதை வஸ்துகளை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையும், மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளும் போதைக் கடத்தல்காரர்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதால், அதில் பின்னடைவே நிலவிவருகிறது.

சமீபத்தில் சென்னையிலுள்ள பூங்காவில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்தும் செல்போன் எண்களை வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், மன்சூர் அலிகான் மகன் துக்ளக், புதுப்பேட்டை யோகேஷ், பாசில் அகமது, முகமது ரியாஸ், சையது சிராஜ், குமரன், சந்தோஷ்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டன

மிழகத்தில் புழக்கத்திலிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளைக் கட்டுப்படுத்துவது தமிழக அரசிற்கு பெரும் சவாலான முயற்சியாக உள்ளது. ஆனால் இந்த முயற்சிகளை வீணடிக் கும் விதமாக போதை வஸ்துகளை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையும், மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளும் போதைக் கடத்தல்காரர்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதால், அதில் பின்னடைவே நிலவிவருகிறது.

சமீபத்தில் சென்னையிலுள்ள பூங்காவில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்தும் செல்போன் எண்களை வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், மன்சூர் அலிகான் மகன் துக்ளக், புதுப்பேட்டை யோகேஷ், பாசில் அகமது, முகமது ரியாஸ், சையது சிராஜ், குமரன், சந்தோஷ்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

Advertisment

ss

இவர்களுக்குப் பின்னாலிருக்கும் அந்த மர்ம நபர், மர்ம கும்பல் யார் என்பது குறித்து சென்னை கமிஷனர் அருண், தெற்கு கூடுதல் கமிஷனர் கண்ணன், வடக்கு கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் என மூன்று அதிகாரிகள் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.

Advertisment

நரேந்திர நாயரின்கீழ் இணை ஆணையர் டாக்டர் விஜயகுமார் தனி டீம் போட்டு தொழில்நுட்ப உதவியோடு போதைப் பொருள் சப்ளையின் முக்கிய இணைப்பு எங்குள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், பிடிபட்ட வர்களின் ஒவ்வொரு எண்ணையும் ஆய்வு செய்ததில் சென்னை அசோக் நகர் காவல்நிலைய காவலர் ஜேம்ஸ் என்பவர் வேட்டையில் சிக்கியிருக் கிறார். இந்த ஜேம்ஸ் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணையில் ஈடுபட்ட நிலையில், ஜேம்ஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் பயன் படுத்தும் ஏதஒசஉத ஆடடலில் தனக்கென்று ஒரு கணக்கைத் திறந்து டேட்டிங் செய்துவந்துள்ளார்.

இந்த செயலியில் ஏற்கனவே இணைந்துள்ள உறுப்பினர்களிடம் பேசுவதன் மூலம் அதில் பலர் போதைப்பொருள் பழக்கம் உள்ளவர்கள் என்பதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு போதைப் பழக்கம் உள்ளவர்களை ஜேம்ஸ் ஒருங் கிணைத்துள்ளார். மேலும் அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கிய ஜேம்ஸ் -ஒருகட்டத்தில் போதைப் பொருள் சப்ளைக்கும் உதவி யிருக்கிறார் என்று அறிந்து போலீசாரே அதிர்ந்துவிட்டனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

dd

இவரைப் போன்றே மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர்கள் ஆனந்த், சமீர் ஆகியோர் போலீ ஸில் சிக்கியிருக்கிறார்கள். அந்த காக்கியிடம் நடத்தப்பட்ட விசா ரணையில், அவர்களுடைய தொடர்பிலுள்ள எண்களை ஆராய்ந்தபோது, அவர்களுடன் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau) அதிகாரிகளுக்கும் தொ டர்பிருப்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் எப்படி இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தியதில் தமிழக அரசில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் தற்காலிகப் பணிக்கு அவ்வபோது மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்குச் செல்வார்கள். இந் நிலையில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பாக நடத்தப்படும் சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், இந்த கீழ்நிலை அதிகாரிகள் மூலமாக போதைப் பொருள் கும்பலுக்கு சப்ளை செய்யப்படுவது உறுதிசெய்யப் பட்டுள்ளது. அதிகாரிகள் மத்தியில் இப்படிப்பட்ட இணைப்பு ஒருபக்கம் இருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் நைஜிரீயா, செனகல், கேமரூன் உள்ளிட்ட ஆப்பிரிக்க பின்தங்கிய நாடுகளிலிருந்து மாணவர்கள், மானியத்தில் இந்தியாவில் உயர்கல்வி பயில வரும்போது பெங்களூரு, கல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் கல்லூரிப் படிப்புக்காக வரும் இந்திய மாணவர்களில் சிலரை, போதைப் பொருள் கும்பல் தங்கள் வசப்படுத்தி அவர்களை போதைப் பொருள் சப்ளை செயினில் ஒரு அங்கமாக ஆக்கிவிடுகிறார்கள். இந்த கும்பல் தமிழ்நாட்டுக்குள்ளும் ஊடுருவியிருக்கிறது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் மட்டு மல்ல. அந்த நெட்வொர்க்கும் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய சவால் தமிழக அரசுக்கு உள்ளது.இவ்விவகாரத்தில் மாநில காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்!

ss

nkn111224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe