லக பங்குச் சந்தையே வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கையில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டும்தான் உலகம் முழுவதும் ஏறுமுகமாக இருக்கிறது.

உலகத்தின் ‘அச்ச’ரேகை இப்படியிருக்க, தைரியமாகவும் துணிச்சலாகவும் கொரோனாவை ப்ளாஸ்மா தெரபி சிகிச்சை மூலமாக முறியடித்திருக்கிறார்கள் கேரள அரசின் முன்னணி டாக்டர்கள். இதன்மூலம் தற்போதுவரை 60 கொரோனா பாஸிட்டிவ் நோயாளிகள் குணமாகியிருக்கிறார்கள் டாக்டர் அனூப், கோழிக்கோடு டாக்டர் ஷின்ட்டோ பிரான்சிஸ் தெக்கூடன் ஆகியோர்.

k

Advertisment

வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கொண்ட மாநிலத்தில் முதலிடத்திலிருப்பது கேரளா. தற்போதைய கொரோனா தொற்று காரணமாக சுமார் 60 ஆயிரம் மலையாளிகள், தாயகமான கேரளா திரும்பியுள்ளனர். அதன் காரணமாகவே கேரளாவின் கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 314 என்றாலும், அவர்களில், பை-பாஸ் சர்ஜரி, பிற நோய்த்தாக்கம் காரணமாக இரண்டு பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர ஆரம்பித்த உடனே முதல்வர் பினராய் விஜயனின் தலைமையிலான அரசு ஆரம்பகட்டத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போதே வைரஸ் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கொண்ட டாக்டர்கள் துணையுடன் கொரோனா முறியடிப்பு ஆராய்ச்சிகளையும் முடுக்கிவிட்டனர். கொரோனா பாதித்த இதர மாநிலங்களில் முறியடிப்பு முறைகள் கண்டறியப்படாமல் தற்காப்பு பணியிலேயே நேரத்தைக் கழிக்கிற நிலையில், கேரளாவில் மட்டும் இது எப்படி சாத்தியமானது?

தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்க ளனைத்தும் கொரோனா தவிர்த்துப் பிற ஆட்கொல்லி வைரஸ்களால் பெரியளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் கேரளாவின் நிலை அப்படியல்ல. கடந்தாண்டு ஜனவரியில் ஸ்வைன்ப்ளு என்கிற பறவைக்காய்ச்சல் புரட்டியெடுத்தது. தொடர்ந்து நிபா வைரஸ் தாக்குதல். இதுபோன்ற தாக்குதல்களில் கேரளாவில் பலர் பலியானார்கள். குறிப்பாக நிபா வைரஸ் தாக்குதலால் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22.

Advertisment

cc

பொதுவாகக் குளிர் தன்மை கொண்ட கேரளாவின் கோழிக்கோடு பகுதியின் கிணறுகளில் மாறுபட்ட தன்மை கொண்ட ஒரு வவ்வால் இனத்திலிருந்து நிபா வைரஸ் பரவுவதை முதன்முதலாகக் கண்டறிந்தவர் அந்நகர அரசு மருத்துவமனை சீஃப் டாக்டரான அனூப்.

இப்படி கேரளா, பல்வேறு கொடிய வைரஸ்களால் அடிமேல் அடிவாங்கி மனித உயிர்களைப் பலிகொடுத்ததால்தான் அந்த வைரஸ் களின் தாக்கத்தை முறியடிக்க மருத்துவரீதியான நிவாரண முறைகளைக் கண்டறியும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதில் நிபா வைரஸ் அனுபவ ஆராய்ச்சியாளரான டாக்டர் அனூப், டாக்டர் ஷின்டோ பிரான்சிஸ் தெக்கூடன் ஆகியோர் ஈடுபடுத்தப் பட்டனர்.

தற்போதைய கொரோனா தாக்குதலுக்கும் அதே முறைகளைப் பயன்படுத்தி கொரோனா தொற்று பாசிட்டிவ் நோயாளிகளுக்கு சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்கள். அது நல்ல பலனைக் கொடுத்திருக்கிறதாம். அந்த சிகிச்சையின் மூலம் அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டதால் கொரோனா தொற்று பாஸிட்டிவ் நோயாளிகள் குணமாகி, பின்னர் அவர்களுக்கு நடத்தப்பட்ட ரத்த சோதனையில் நெகடிவ் ரிப்போர்ட் வந்திருக்கிறது. அதுபோன்ற ட்ரீட்மெண்ட்டில் மூலமாக 22 பேர்களின் மாதிரிகள் நெகட்டிவ் என்றாகிக் குணமாகியிருக்கிறார்கள்.

இதையடுத்தே இதிலிருந்து மற்றொரு சிகிச்சை முயற்சியை மேற்கொண்ட கேரள டாக்டர்கள், சிகிச்சைக்குப் பின்பு நெகட்டிவ் ரிப்போர்ட் வந்த 22 பேர்களையும் 5, 6, 4, என்ற நாட்கள் இடைவெளிவிட்டு மூன்று முறை ரத்தப் பரிசோதனை செய்ததில் மூன்று தடவையும் நெகட்டிவ் ரிப்போர்ட் வந்திருக்கிறது.

ff

இதுபோல் முதல் நெகட்டிவிற்குப் பின்பு மூன்று கட்ட சோதனையிலும் நெகட்டிவ் என்று வந்தவர்களின் உடலிலிருந்து ப்ளாஸ்மா எடுத்து அதனை ஆன்ட்டிபாடியாக்கி, கொரோனா தொற்று பாஸிட்டிவ் நோயாளி களின் உடலில் செலுத்தி சிகிச்சையை மேற்கொண்டதில் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியான ஆண்ட்டிபயாடிக் உருவாகிக் குணமாகியிருக் கினறனர்.

இந்த ப்ளாஸ்மா தெரபிமூலம் நேற்று வரை 60 பேர் குணமாகியுள்ளனராம். இப்படி குணமானவர்களைப் பற்றி தனது முகநூலில் அமைச்சரான கனகம்பள்ளி சுரேந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். அது தொடர்பான வீடியோவும் வைரலாகியிருக்கிறது.

டாக்டர் ஷின்ட்டோ பிரான்சிஸ், “இதுபோன்ற ப்ளாஸ்மா முறை சிகிச்சை சார்ஸ், மெர்ஸ் ஸ்ரீர்ஸ்2, மற்றும் 2009 ஐ1ச1 போன்ற நோய்த் தொற்று கண்ட வர்களுக்கும் செலுத்தப்பட்டு சிகிச்சையளித்ததில் அவர்கள் குணமானதையடுத்தே தற்போது கொரோனா கோவிட்-19-க்கும் பயன்படுத்துவது நல்ல பலனைத் தந்துள்ளது. தவிர, மத்திய சுகாதார மற்றும் நல்வாழ்வுத்துறையின் விதிகளுக்கேற்ப கோவிட்-19 குணமானவர்களின் உடலின் எடையைப் பொறுத்தே ப்ளாஸ்மா எடுக்கப்பட்டு ஆன்ட்டிபாடியாக்கி கோவிட்-19 பாஸிட்டிவ் நோயாளிகளின் உடலில் செலுத்தி சிகிச்சை மேற்கொள்வதால் அவர்களின் உடலில் உடனடியாக எதிர்ப்பு சக்தியும் உருவாகிறது’’ என்று தெரிவித்திருக்கிறார் டாக்டர் ஷின்ட்டோ பிரான்சிஸ்.

இந்தப் ப்ளாஸ்மா தெரபி.இன்.கோவிட்-19 சிகிச்சை முறைக்கு மத்திய அரசு இன்றளவும் அங்கீகாரம் வழங்கவில்லையாம். இருப்பினும் மக்களைக் காப்பாற்ற இதேமுறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும் வருகிறதாம்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்