Advertisment

பாலியல் புகாரில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.! வரிந்துகட்டும் கம்யூனிஸ்ட், பா.ஜ.க.!

kerala

 

கேரளாவில் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற  தீவிரத்தில் மா.கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக களத்திலிருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. மீது பல இளம்பெண்கள்  பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Advertisment

கேரள சட்டமன்றத்தில் மிகவும் வயதுகுறைந்த 32 வயதான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாங்கூடத்தில். 2024 அக்டோ பரில் நடந்த  இடைத்தேர்தலில் பாலக்காடு தொகுதியில்  பா.ஜ.க. கிருஷ்ணகுமாரை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார். ஏற்கனவே அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாஜி பறம்பில் கடந்த பாராளு மன்றத் தேர்தலில் வடகரை எம்.பி.யாக வெற்றி பெற்றதை யடுத்து, கட்சியானது ராகுல் மாங்கூடத்திற்கு இளை ஞர் காங்கிரஸ் தலைவர் பதவியைக் கொடுத்ததோடு, இடைத்தேர்தலிலும் நிற்கவைத்து எம்.எல்.ஏ. ஆக்கியது.

காங்கிரசில் அடூர் வட்டாரச் செயலாளராக இருந்து பின்னர் காங்கிரஸ் மாநில செயலாளர், மாநில பொ.செ, இளைஞர் காங்கிரஸ் பொ.செ., இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர், எம்.எல்.ஏ. என உச்சத்துக்குவந்த ராகுல் மாங்கூடத்தில் ஒரு நல்ல பேச்சாளர். தொலைக்காட்சிகளில் தினமும் நேரடி விவாதங்களில் கலந்துகொள்பவர். இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த இளைஞர்களும் இளம்பெண்களும் தங்களுடைய வாட்ஸ்ஆப் புரொபைலில் இவருடைய போட்டோவைத்தான் வைத்துள்ளனர். அந்தளவு இளைஞர் காங்கிரசில் செல்வாக்காக இருந்துவருகிறார்.

காங்கிரஸ் அனுதாபியான நடிகை ரினி ஜார்ஜை,  வயநாடு எம்.பி. ஆன பிரியங்காவிடம் அறிமுகம்செய்து கட்சியில் பொறுப்பு வாங்கித் த

 

கேரளாவில் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற  தீவிரத்தில் மா.கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக களத்திலிருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. மீது பல இளம்பெண்கள்  பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Advertisment

கேரள சட்டமன்றத்தில் மிகவும் வயதுகுறைந்த 32 வயதான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாங்கூடத்தில். 2024 அக்டோ பரில் நடந்த  இடைத்தேர்தலில் பாலக்காடு தொகுதியில்  பா.ஜ.க. கிருஷ்ணகுமாரை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார். ஏற்கனவே அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாஜி பறம்பில் கடந்த பாராளு மன்றத் தேர்தலில் வடகரை எம்.பி.யாக வெற்றி பெற்றதை யடுத்து, கட்சியானது ராகுல் மாங்கூடத்திற்கு இளை ஞர் காங்கிரஸ் தலைவர் பதவியைக் கொடுத்ததோடு, இடைத்தேர்தலிலும் நிற்கவைத்து எம்.எல்.ஏ. ஆக்கியது.

காங்கிரசில் அடூர் வட்டாரச் செயலாளராக இருந்து பின்னர் காங்கிரஸ் மாநில செயலாளர், மாநில பொ.செ, இளைஞர் காங்கிரஸ் பொ.செ., இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர், எம்.எல்.ஏ. என உச்சத்துக்குவந்த ராகுல் மாங்கூடத்தில் ஒரு நல்ல பேச்சாளர். தொலைக்காட்சிகளில் தினமும் நேரடி விவாதங்களில் கலந்துகொள்பவர். இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த இளைஞர்களும் இளம்பெண்களும் தங்களுடைய வாட்ஸ்ஆப் புரொபைலில் இவருடைய போட்டோவைத்தான் வைத்துள்ளனர். அந்தளவு இளைஞர் காங்கிரசில் செல்வாக்காக இருந்துவருகிறார்.

காங்கிரஸ் அனுதாபியான நடிகை ரினி ஜார்ஜை,  வயநாடு எம்.பி. ஆன பிரியங்காவிடம் அறிமுகம்செய்து கட்சியில் பொறுப்பு வாங்கித் தருவதாகவும், அடுத்தது கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிதான் அப்போது நான் மந்திரியாகிவிடுவேன் என சொல்லி ஓட்டலுக்கு வா என அழைத்து தொடர்ந்து, வாட்ஸ்அப் மெசேஜ் செய்து பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார் எனவும் புகார் எழுந்துள்ளது. 

Advertisment

எழுத்தாளர் ஹனி பாஸ்கரையும் இதேபோல் டெலகிராமில் தொடர்ந்து ஆபாச சாட்டிங் தொந்தரவு செய்துவந்துள்ளார். கல்லூரித் தோழியான ரம்யா வசுதேவுடன் நெருங்கிப் பழகி அவரை கர்ப்பமாக்கியதோடு வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கலைக்க வற்புறுத்தி யுள்ளார். 

நீ கர்ப்பமாவதற்கு நான் மட்டும் காரணம் இல்லையே. நீயும்தானே காரணம். அப்படி யிருக்கும்போது நீ குழந்தையைக் கலைக்கவில்லை என்றால் அதற்கு அப்பா என்று யாரை காட்டிக் கொடுப்பாய் என்றதும், உன்னைத்தான் என ரம்யா வாசுதேவ் கூறியதாகவும், இப்படி பக்கம் பக்கமாக வாட்ஸ்அப் சாட்டிங்கை ரம்யா வாசுதேவ் வைத்துள்ளார் எனவும் சொல்லப் படுகிறது. திருநங்கை அவந்திகாவை வீடியா காலில் அழைத்து நிர்வாண நிலையில் அவளின் அழகைக் காட்டச் சொல்லி தொடர்ந்து துன்புறுத்திவந்துள்ளார். இதேபோல் நியூஸ் ரீடர் மாயாஸ்ரீயை பெங்களூர், ஹைதராபாத்தில் ஸ்டார் ஓட்டலில் அறை எடுத்து ஜாலியாக இருக்கலாம் என வாட்ஸ்அப் மெசேஜ் செய்து தொடர்ந்து பாலியல்ரீதியாக தொந்தரவு செய்துவந்துள்ளாராம்.

ராகுல் மாங்கூடத்திலால் பாதிக்கப் பட்டவர்கள் இந்த 5 பெண்கள் மட்டுமல்ல. இன்னும் 10-க்கு மேற்பட்ட மலையாள தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலைசெய்யும் இளம்பெண்களும் இருக்கிறார்கள். டி.வி.யில் நேரடி விவாதங்களில் கலந்துகொள்ளும் ராகுல் அங்கு செய்திப் பிரிவிலும் டெக்னிக்கல் மற்றும் நிருபர்களாக  பணிபுரியும் இளம்பெண்களிடம் செல்நம்பரை வாங்கிக்கொண்டு அடிக்கடி  பேசி தன்வசப்படுத்தி தொந்தரவு கொடுத்து வந்துள் ளாராம்.

இதில் முக்கிய டி.வி. சானல் ஒன்றில் நியூஸ் எடிட்டராக இருந்த பெண் ஒருவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு ஸ்டார் ஓட்டலில் வைத்து தன் ஆசையை தீர்த்துக்கொண்டாராம். இதனால் ஏற்பட்ட பஞ்சாயத்தை அந்த டி.வி. சானலின் பங்கு தாரர் ஒருவர் மூலம் தீர்த்தாராம். 

தற்போது 5 பெண்களுக்கு நடந்த கொடுமைதான் வெளி வந்துள்ளது. இளைஞர் காங்கிரசை சேர்ந்த ஏராளமான இளம் பெண்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். ரம்யா வசுதேவ் கர்ப்பத்தைக் கலைக்கச்சொன்னது கொலை செய்வதற்கு சமம் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குழந்தைகள் நல பாதுகாப்பு கமிஷனர் கே.வி.மனோஜ்குமாரிடம் புகார் கொடுத்த வழக்கறிஞர் ஜிண்டோ ஜோசப்   கூறினார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த 5 பேரும் போலீசில் புகார் கொடுக்காத நிலையில் நடிகை ரினிஜார்ஜும் கல்லூரித் தோழி ரம்யா வசுதேவும் ஆரம்பத்தில் மீடியா நபர்களிடம் ராகுல் பெயரைக் குறிப்பிடாமல் காங்கிரஸ் பிரமுகர் என்றே குறிப்பிட... அது ராகுல்தான் என்று எளிதில் புரிந்துகொண்டன கட்சிகள். ராகுல் மாங்கூடத்தில் பெயரைக் குறிப்பிட்டே போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது பா.ஜ.க.

இதையடுத்து 22-ம் தேதி ராகுல் மாங்கூடத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் மா.கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கோவிந்தன், "அணை உடைந்து தண்ணீர் பாய்வதுபோல் ராகுல் மாங்கூடத்தில் மீது புகார்கள் பாய்ந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக போலீசில் புகார் கொடுக்க முன்வர வேண்டும். அதேநேரத்தில் ராகுல் மாங்கூடத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவேண்டுமா? என்று முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ்தான், கம்யூனிஸ்ட் அல்ல''” என்றார்.

பாலக்காடு காங்கிரஸ்  எம்.பி. ஸ்ரீகண்டன் கூறும்போது, "தற்போது மா.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ், அதேபோல்  தற்போது வனத்துறை மந்திரியாக இருக்           கும் மா.கம்யூனிஸ்ட் கூட்          டணி கட்சியான காங்கிரஸ் சோஷலிஸ்ட் தலைவர் சசீந்திரன் இருவர் மீதும்  இதேபோன்று இளம் பெண்களுக்கு பாலியல்  தொந்தரவு கொடுத்த புகார்கள் உள்ளன. ஆனால் அவர்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய சொல்லவில்லை கம்யூனிஸ்ட் கட்சி. பதவியை ராஜினாமா செய்தபிறகு நீதிமன்றமோ காவல்துறையோ விசாரணையின்போது அவர்கள் மீது குற்றம் நிருபிக்கப்படவில்லை என்றால் போன எம்.எல்.ஏ. பதவி திரும்பக் கிடைக்குமா?'' என்றார்.

பா.ஜ.க. மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் கூறும்போது, "ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில்  கோவளம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட், கேரளா  காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.ஜே. ஜோசப் இருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர்கள் எம்.எல்.ஏ. ஆக 5 ஆண்டுகள் நீடிக்கத்தான் செய்தார்கள். தற்போது கம்யூனிஸ்ட் ஆட்சியில் முகேஷ் எம்.எல்.ஏ., மந்திரி சசீந்திரன் இருவர் மீதும் இதேபோன்று பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை. இந்த விசயத்தில் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் ஒற்றுமை உண்டு. அதனால்தான் ராகுல் மாங்கூடத்தில் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் தயங்குகிறது''’என்றார்.

இந்த நிலையில் ராகுல் மாங்கூடத்தில் ஆதரவாளர்களோ, ’ராகுல் மாங்கூடத்தில் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் அரசியல் வரலாறு முதுநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் போது அங்கு படித்த கேரளாவைச் சேர்ந்த ரம்யா வசுதேவும் நண்பர்களாகப் பழகிவந்தனர். அந்த உறவு கல்லூரிப் படிப்போடு முடிந்துவிட்டது. அதன்பிறகு ராகுல் மாங்கூடத்தில்  அரசியலில் உச்சத்துக்கு வந்ததோடு, கேரளாவில் பரபரப்பாக பேசப்படும் இளம் தலைவராக மாறினார். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் இளம்பெண்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். 

இந்த நிலையில்... "கம்யூ னிஸ்ட் திட்டத்தின்படி ரம்யா வசுதேவ் உட்பட 5 பேர் அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை. இருந்தும் காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொள்ளாமலே இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட்  மந்திரிகளை அரைகுறை ஆடைகளுடன் நின்று கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கிற கூட்டம்தான் ராகுல் மாங்கூடத்தில் மீது பொய்யான புகாரை கொடுத்திருக்கிறார்கள். புகார் கொடுத்தவர்களின் அரசியல் பின்புலத்தை விசாரித்தால் உண்மை தெரியும்'’என்கிறார்கள்.

இந்நிலையில் 25ஆம் தேதி ராகுல் மாங்கூடத்திலை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது காங்கிரஸ் கட்சி.

கேரளாவில் இன்னும் 8 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் கம்யூனிஸ்ட்டும் பா.ஜ.க.வும் காங்கிரசுக்கு எதிராகக் கொளுத்திப் போட்டிருக்கும் இந்தத் தீ தற்போது பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

 

nkn300825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe