தென்மேற்குப் பருவ மழை தொடங்கியிருப்பதால் தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நாளுக்குநாள் அதிகரித்துவருவதின் மூலம் அணையின் நீர்மட்டம் 140 அடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதைக்கண்ட கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, "அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகபட்சமாகத் தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடுங்கள்" என்று கடிதம் எழுதினார்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிரபல தென்னிந்தியப்பட நடிகரான பிருத்விராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், (125 ஆண்டுகளுக்கு மேலாகப் பழமையானதாக முல்லைப் பெரியாறு அணை இருந்துவருவதால் அதை இடிக்க வேண்டுமே தவிர, ஆய்வு பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள விரும்பவில்லை) என்று ஒரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். அவரது கருத்துக்கு கேரள நடிகர்களான துல்கரும், திலீப்பும் ஆதரவு தெரிவிக்க, மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம் ரசிகர் மன்றத்தினரும் அப்பதிவுக்கு ஆதரவாகப் பதிவிட்டுவந்தனர். அதேபோல், கேரளாவைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்திய அளவில் இவ்விவகாரம் வைரலாகி, முல்லைப் பெரியாறுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் அனல் காற்றாக வீசத் தொடங்கியது. இப்படி முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகக் கேரள நடிகர்கள் கொளுத்திப்போட்ட வெடி யைக்கண்டு, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்பட தென்மாவட்ட மக்க ளும், விவசாயிகளும் கொதித்து எழுந்துவிட்டனர். அதுபோல் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்த நிலையில் தான், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தேனி மாவட்டப் பொதுச்செய லாளர் சக்கரவர்த்தி தலைமை யில் தேனியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக் கும் மேற்பட்டோர், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகக் கருத்து தெரிவித்த நடிகர் பிரித்விராஜ் உருவ பொம்மை யையும், படத்தையும் எரித்துக் கண்டனக்குரல் கொடுத்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவும் அளித்தனர். அதுபோல் விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தேனி மாவட்ட நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளர் தமிழ்வாணன் தலைமை யிலும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். கேரளாவிலுள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர் பெரியாறு அணைக்கு எதிராகக் குரல் கொடுத்ததைக்கண்டு தேனி மாவட்டத்திலுள்ள விஜய் ரசிகர்கள், பெரியாறு அணைக்கு ஆதரவாகத் தங்களது கருத்துக்களைப் பதிவுசெய்து வருகிறார்கள். கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளும் கேரள நடிகர்களைக் கண்டித்துப் போராட்டத்தில் குதிக்கத் தயாராகிவருகிறார்கள்.
"முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. அதோடு அணையில் உள்ள பேபி அணையைப் பலப்படுத் தியபின் 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம், அந்த அளவுக்கு அணை பலமாக இருக்கிறதென்றும் கூறியிருக்கிறது. அப்படி இருக்கும்போது, முல்லைப் பெரியாறு அணைக்கு 130 அடிக்கு மேல் தண்ணீர் வந்தாலே மலையாளிகள் போர்க்கொடி தூக்குவதும், அணை உடையப்போகிறது என்று பீதி கிளப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ள னர். இதுவரை கேரள அரசியல்வாதிகளும், அங்குள்ள பல அமைப்புகளும் தான் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று பழைய புரளியைக் கிளப்பிவந்தார்கள். தற்போது முதன்முறையாக கேரள நடிகர்கள் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டு பேஸ்புக்கிலும் பதிவுசெய்து வருவது வேதனையாக இருக்கிறது.
அணைக்கு தமிழக அல்லது மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும். அப்போதுதான் அணையைத் தொடர்ந்து பாதுகாக்க முடியும். அவதூறு கிளப்பும் கேரள நடிகர்களின் படங்கள் தமிழகத்திலுள்ள தியேட்டர்களில் ஓட அனுமதிக்கமாட்டோம். அதைமீறி வெளியிட்டால் போராட்டம் வெடிக்கும்" என்றார் அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தேனி மாவட்டப் பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி.
இது சம்பந்தமாக தேனி மாவட்டவிஜய் ரசிகர் மன்ற இளைஞரணித் தலைவர் பிரகாஷிடம் கேட்டபோது, "கேரளாவில் உள்ள எங்க தலைவரின் ரசிகர்கள் இப்படி பதிவிட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளோம். அதுகுறித்த உண்மையை விசாரித்துவருகிறோம். கர்னல் பென்னிகுயிக் கட்டிய அணை பலமாக இருப்பதை சுப்ரீம் கோர்ட்டே சொன்னபிறகும் விஷமத்தன மான கருத்துக்களைப் பகிர்பவர்களுக்கு பதிலடி கொடுக்க எங்கள் ரசிகர் மன்றத்தினர் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடாது என்று கூறிய கேரள முதல்வர், புதிய அணை கட்டப்போகிறோம் என்றும், அதற்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கி, மத்திய நீர்வளத் துறை அனுமதிக்காகக் காத்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டு புதுப்பிரச்சனையைக் கிளப்பியுள்ளார். இத்தகைய நிலைப்பாடுகளுக்கு எதிராகப் போராட, அந்த அணைக்கட்டுப் பாசனத்தால் பயன்பெறும் தென்மாவட்ட விவசாயிகள் கொந்தளிப்புடன் போராடத் தயாராகிவருகிறார்கள்.