"ஆம்ஆத்மியை அழிக்க "ஜாது' எனும் ஆபரேஷனை தொடங்கியிருக்கும் மோடியின் சர்வாதிகாரத்தை வீழ்த்துவேன்'' என சூளுரைத் திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால். இவரது நம்பிக்கைக்குரிய ஆம் ஆத்மியின் பெண் எம்.பி. ஸ்வாதிமால்வாலியை வைத்தே கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ்குமாரை பா.ஜ.க. போலீஸ் கைதுசெய்த சம்பவத்தை அடுத்தே இப்படி கொந்தளித்திருக்கிறார் கெஜ்ரிவால்.

பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடச் செல்வதாக 18-ந் தேதி அறிவித்த கெஜ்ரிவால், 19-ந் தேதி முற்றுகையிட பேரணியாக செல்வதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடம் பேசிய போது, ’ஆம் ஆத்மி வேகமாக வளர்ந்து வருகிறது. தேசிய அளவில் பா.ஜ.க.வை ஒழிக்கும் சக்தியாக வலிமையடைந்து வருகிறது ஆம் ஆத்மி. எதிர் காலத்தில் பா.ஜ.க.வுக்கு நாம் சவாலாக மாறுவ தற்கு முன்பு அழிக்கத் துடிக்கிறார்கள். இதற்காகத் தான் "ஜாது' என்கிற ஆபரேசனை மோடி தொடங்கியிருக்கிறார்.

kk

கடந்த 2 ஆண்டுகளாக நம் கட்சி பிரமுகர் களை பா.ஜ.க. கைது செய்து வருகிறது. மணீஷ் சிசோடியா, சத்யேந்தர்ஜெயின் தொடங்கி தற் போது என்னுடைய தனிச் செயலாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார், பயப்படப் போவதில்லை. ஒரு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால், ஆயிரம் கெஜ்ரிவால்கள் பிறப்பார் கள் என்பதை பிரதமர் மோடிக்கு சொல்லிக் கொள்கிறேன். அவரது சர்வாதிகாரத்தை வீழ்த்துவேன்''” என்று ஆவேசப்பட்டார் கெஜ்ரிவால். ஜாமீனில் விடுதலையானதி லிருந்தே மோடிக்கு பலத்த அடியைக் கொடுத்து வருகிறார் அரவிந்த்கெஜ்ரிவால். குறிப்பாக, 75 வயதை கடந்தவர்கள் பா.ஜ.க. கட்சி விதியின்படி பிரதமர் பதவியில் இருக்கமுடியாது. அதனால் அமித்ஷாதான் அடுத்த பிரதமர். இன்றைக்கு மோடி கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவது யார்? என்று கெஜ்ரிவால் வீசிய முதல் குண்டே மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை பயம்கொள்ள வைத்தது.

இதனாலேயே, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களை தாக்குவதைத் தவிர்த்து, கெஜ்ரிவாலை தாக்குவதும், அவரது கேள்விக்கு பதிலை சொல்வதுமாக இருந்தனர் பா.ஜ.க. தலைவர்கள். இதில், பா.ஜ.க. கட்சியில் 75 வயதை கடந்தவர்கள் பதவியில் இருக்க முடியாது என்கிற விதி எதுவும் இல்லை என அவசரம் அவசரமாக கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்துப் பேசினார் அமீத்சா.

அப்படியானால், வயதை சுட்டிக்காட்டி அத்வானி, ஜோஷி தொடங்கி பலரை யும் பா.ஜ.க.விலிருந்து அப்புறப்படுத் தினீர்களே, அது எதற்காக? என்று கெஜ்ரிவால் கேட்ட கேள்விகளுக்கு பதிலேதும் இப்போது வரை பாஜக தலை வர்களிடம் இல்லை. இந்த நிலையில், கெஜ்ரிவாலின் கேள்விகளை மடைமாற்ற, மீண்டும் இந்தியா கூட்டணியையும் ராகுலையும் தாக்கும் பிரச்சார பாணிக்கு தாவியிருக்கிறார்கள்.

அதேசமயம், கெஜ்ரிவா லின் குரலை ஒடுக்க அவரது கட்சி பெண் எம்.பி.யை வைத்தே கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி கொடுத் திருக்கிறது பா.ஜ.க. தலைமை. அதாவது, 2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக அன்னாஹசாரே ஆரம்பித்த போராட்ட காலத்திலிருந்தே கெஜ்ரிவாலுடன் பயனித் தவர் ஸ்வாதிமால்வாலி. அவர் நடத்திய போராட்டங்களில் அவருடன் இணைந்து முன்னணியில் இருந்தார் ஸ்வாதி. கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்வாதிக்கு கொடுக்கப்பட்டது. டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் அவரை நியமித்த கெஜ்ரிவால், எம்.பி.யாகவும் வெற்றிபெற வைத்தார்.

அப்படிப்பட்ட ஸ்வாதிமால்வாலி, "கெஜ்ரி வாலை சந்திக்க நான் சென்றபோது, அவரது தனிச்செயலாளர் பிபவ்குமார், எனது கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்; வயிற்றில் எட்டி உதைத் தார்'' என்று காவல்துறையில் புகார் கொடுக்க, பிபவ்குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியில் மட்டுமல்ல; தேசிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆத் ஆத்மி கட்சியினர், ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவாலிடம், "பா.ஜ.க.வின் பிடிக்குள் ஸ்வாதி சென்றுவிட்டார்; அவரை வைத்து உங்களுக்கு எதிரான காய்களை பா.ஜ.க. நகர்த்துகிறது' என்கிற தகவல்கள் கிடைக்கிறது. அதனால், அவரை சந்திக்க ஸ்வாதி அப்பாயின்ட்மெண்ட் கேட்டபோதெல் லாம், அவரை சந்திப்பதைத் தவிர்த்தே வந்தார் கெஜ்ரிவால்.

இதனையறிந்த ஸ்வாதி, ஒரு பிரச்சனையை உருவாக்கும் திட்டத்துடனேயே கெஜ்ரிவாலை சந்திக்க அவரது இல்லத்துக்கு வந்தார். அவர் வீட்டில் இல்லை என பிபவ்குமார் தெரிவித்தும் அங்கிருந்து கிளம்பாமல் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டு அடம்பிடித்தபடி இருந்தார் ஸ்வாதி. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் அவரை வெளியே போக வைத்தது. இதனையடுத்தே, பிபவ்குமாருக்கு எதிராக ஸ்வாதி புகார் கொடுக்க, பிபவ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் வீட்டில் இல்லை என்பதை தெரிந்துகொண்டே பிறகும் அவரை சந்திக்க வீட்டுக்கு வருகிறாரெனில் ஏதோ திட்டம் இருப்பதாகத்தானே சந்தேகப்பட வைக்கிறது. மகளிர் ஆணைய நிர்வாக ஊழல் களைச் சுட்டிக்காட்டியே ஸ்வாதியை பா.ஜ.க. தரப்பு வளைத்திருக்கிறது.

ஒருவேளை ஸ்வாதியை கெஜ்ரிவால் சந்தித் திருந்தால் அவர் மீது ஸ்வாதி புகார் கொடுத்து அவரை சிறைக்கு அனுப்பி வைத்திருப்பார். ஆக, பெண்களை வைத்து தலைவர்களை முடக்கும் மலிவான அரசியல் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது''’என்கிறார்கள்.

"கடந்த இரண்டு வாரங்களாக கெஜ்ரிவா லின் அதிரடி தேர்தல் பிரச்சாரம், வட இந்தியாவில் பேசுபொருளாக மாறி, பலவீனமான கூட் டணியாக இருந்த இந்தியா கூட்டணிக்கு வலிமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு நெருக்கடிகளை பா.ஜ.க. ஏற்படுத்துகிறது' என்கிறார்கள் தேர்தல் அரசியல் விமர்சகர்கள்.

Advertisment