மைச்சராக கே.டி.ராஜேந்திரபாலாஜி இருந்தபோது, அவரும் செல்வச் செழிப்பாகி, தனக்காக ஒரு படையையும் செல்வச் செழிப்புடன் உருவாக்கியிருந்தார். ராஜேந்திரபாலாஜி நின்றாலும் நடந்தாலும் அதற்கும்கூட போஸ்டர் ஒட்டி அதகளம் செய்யும் படை அது. இப்போது, ராஜேந்திரபாலாஜி மீது புகார் கொடுத்துள்ள விஜய நல்லதம்பியும் மோசடிப் பேர்வழிதான் என ஊரறிந்த நிலையில்... ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவாகவோ, தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்தோ போஸ்டர் ஒட்ட ஆளில்லை. அதே நேரத்தில், 8 தனிப்படைகள் அமைத்தும் தண்ணி காட்டிய ராஜேந்திரபாலாஜியால், வதந்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன.

oo

பலிகடாவாக்கிய பழனிசாமி!

நல்லதம்பியிடம் ஏமாந்த தரப்பினர் ஒருவரையும் விடாமல், ‘"நீ வா... நீ வா...'’ என புகார்களை வாங்கி, அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு, ரூ.3 கோடி வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றத்தில் ஒருவேளை முன்ஜாமீன் கிடைத்தாலும், வேறு வழக்குகளில் கைது செய்வதற்கான திட்டங்களோடு, தயார் நிலையில் காத்திருக்கிறது காவல் துறை.

"பலவீனமான வழக்கு என்பதை அறிந்துதானே தி.மு.க. அரசு உச்சநீதி மன்றத்தில் கேவியட் போடவில்லை. மாறாக, விஜய நல்லதம்பியை கேவியட் போட வைத்துள்ளது. வழக்கை எதிர்கொள்ள வேண்டியதுதானே' என்கிற அ.தி.மு.க. தரப்பினர், "ராஜேந்திரபாலாஜிக்கு மு.க.ஸ்டாலினோடு முன்பகை எதுவும் இல்லையே? அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதல் இல்லாமலா, தன் இஷ்டத்துக்கு ராஜேந்திரபாலாஜி பேசினார்? ராஜேந்திரபாலாஜி பலிகடா ஆக்கப்படுகிறார்' என்று அப்போது நக்கீரனில் வந்த செய்தி உண்மையாகிவிட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமோ, ‘"நீங்க எடப்பாடி ஆள்தானே'’ என்பதை மனதில் வைத் திருந்தோ என்னவோ, "ராஜேந்திரபாலாஜி மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து கூற விரும்பவில்லை'’ என்று கூலாக ஒதுங்கிக்கொண்டார்.

"புகாரளித்த விஜய நல்லதம்பி குடும்பம், அ.தி.மு.க.வால் பலனடைந்திருக்கிறதே? அவரைக் கூப்பிட்டு விவகாரத்தை சுமுகமாக முடித்திருக்க லாமே? தி.மு.க.வின் பழிவாங்கலுக்கு துணைபோக வைத்து வேடிக்கைதானே பார்த்தார்கள்?'’என்று, தங்களது கட்சித் தலைவர்களின் செயல்பாட்டை அலசினார்கள்.

விசுவாசப்படையைச் சேர்ந்த ஒருவர், "எங்க எல்லாருடைய போனையும் வாட்ச் பண்ணுறாங்க. தி.மு.க. இம்புட்டு தீவிரமா இருக்கும்போது, எதிர்ப் புக் காட்டி மாட்டிக்கிறதுக்கு யாரும் தயாரா இல்ல. அதான், கண்டன போஸ்டர் ஒட்டல'' என்றார்.

Advertisment

rajendrabalaji

இதிலும் சாதி அரசியல்!

லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டதை, சாதி கண்ணோட்டத்துடன் விமர்சித்தார், ராஜேந்திர பாலாஜியின் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர். “"நாங்க ரொம்பவும் சிறுபான்மையான சமுதாயம். ராஜேந்திரபாலாஜி பேசிய பேச்சில் எங்களுக்கும் உடன்பாடில்லை. ஆனாலும், பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவராக ராஜேந்திரபாலாஜி இருந்திருந்தால், எத்தனை ஆயிரம் கோடி ஊழல் பண்ணி யிருந்தாலும், ஒரு மோசடி வழக்குக்காக, இந்த அளவுக்குத் தேடுதலில் தீவிரம் காட்டியிருக்க மாட்டார்கள். ஏனென்றால், ஏதோ ஒரு மூலையிலிருந்து வலுவான எதிர்ப்பு கிளம்பி விடும் அல்லது, சமாதானத் தூது போக பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியினரே முயன்று சாதித்திருப்பார்கள். இங்கே சாதி ரீதியிலான வாக்கு வங்கி அரசியலும் உள்ளது. "வாழ்க வசவாளர்கள்'’ என்று அறிஞர் அண்ணா சொன்னதைப் பின்பற்றுவதாகக் கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜேந்திரபாலாஜி விஷயத்தில் வேறு முகம்தானே காட்டுகிறார்? இதே வேகத்தை, மோசடியின் ஆணி வேரான, பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த விஜய நல்லதம்பியிடம் காட்ட வேண்டியது தானே?''’என்றார்.

தப்பிக்க வைக்கும் டெக்னாலஜி!

காவல்துறை வட்டாரத்தில், "விருதுநகர்ல ஆர்ப்பாட்டத்த முடிச்சிட்டு கிளம்பியதும், மாவட்ட ரூட் எல்லாத்தயும் பிளாக் பண்ணிருந்தா, ஈஸியா ராஜேந்திரபாலாஜிய பிடிச்சிருக்கலாம். அப்ப கோட்டை விட்டுட்டு, இப்ப வேகம் காட்டுறாங்க. அவருகூட தொடர்புல இருந்தாங்கன்னு கட்சி நிர்வாகிகள் விக்னேஸ்வரன், ஏழுமலைன்னு ரெண்டு பேரை அரெஸ்ட் பண்ணி விசாரிக்கிறாங்க. மாட்டு வாரான்னு தெரியல. ரொம்பநாளா ராஜேந்திர பாலாஜி பட்டன் போன்லதான் பேசிட்டு இருந்திருக்காரு. ஆன்ட்ராய்டு போன் யூஸ் பண்ணுறதெல்லாம் இப்பத்தானாம். கட்டணம் குறைச்சலா இன்டர்நேஷனல் கால்ஸ் பேச ஒரு ஆப் இருக்கு. அதுக்கு சிம்மும் தேவையில்ல, செல்போன் டவரும் தேவையில்ல. "வைபை'ல பேச முடியும். ஒவ்வொரு தடவை பேசும்போதும், ஒவ்வொரு நாட்டைக் காமிக்கும். டெக்னாலஜி தயவுல மாட்டிக்காம இருக்கிறதுக்கு நெறய வழியிருக்கு. வாட்ஸ்-ஆப் கால் பேசினாக்கூட ட்ரேஸ் பண்ணமுடியாது. போலீஸ் வெரி ஓல்ட் ஸ்டைல்ல தேடிக்கிட்டிருக்கு''’என்று பெருமூச்சு விட்டனர்.

Advertisment

kkssrr

இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!

ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான மனநிலை யிலுள்ள அ.தி.மு.க.வினர், "அமைச்சரா இருந்தபோது தலை, கால் தெரியாமல் ஆடினார். கட்சி நிர்வாகிகளை கெட்ட வார்த்தையால் திட்டினார். அதன் பலனைத்தான் அனுபவிக்கிறார். விருதுநகர் மாவட்டத்துல அ.தி.மு.க.ங்கிற கட்சியை ஒண்ணுமில்லாம பண்ணிட்டாரு. அவருக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்''” என்றவர்கள், ‘"சாம்பிளுக்கு மயில் சாமி'’என குறிப்பிட்டனர்.

"மயில்சாமி யார்?' “

"தி.மு.க.விலிருந்து வந்த மயில்சாமியை, ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆக்கினார் ராஜேந்திரபாலாஜி. காரணம் பணம்தான். அவரை விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் உயர்த்தினார். அ.தி.மு.க. ஆட்சியில் கோடிகளைக் குவித்த மயில்சாமி தற்போது, "அ.தி.மு.க. ஆட்டம் கண்டுவிட்டது'’ என்று தனக்கு நெருக்க மானவரிடம் குறைசொல்லி, விருதுநகரில் நடந்த மத்திய கூட்டுறவு வங்கி லோன் மேளாவில் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டாமல் கலந்து கொண்டார். மேடையில் தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவாசன் அருகில் உட்கார்ந்து ‘அரசியல்’ பண்ணியிருக்கிறார். எல்லாம், அ.தி.மு.க. ஆட்சியில் குவித்த பணத்தையும் சொத்துகளையும் காப்பாற்றுவதற்காகத்தான். தி.மு.க. அரசாங்கம் நடத்தும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோ, நிர்வாகிகளோ குஷியாகக் கலந்துகொண்டால், கட்சிக்கு என்ன மரியாதை கிடைக்கும்? இவரைப் போன்றவர்களை வளர்த்துவிட்டால், ராஜேந்திரபாலாஜியைப் போலவே கட்சியும் காணாமல்தானே போகும்''’என்று குமுறலை வெளிப்படுத்தினார்கள்.

நாம் மயில்சாமியைத் தொடர்புகொண்ட போது, "அது எங்க பேங்க்ல நடந்த பங்ஷன். ஈரோட்டுல கூட, இதேமாதிரி கலந்துக்கிட்டாங்க. தி.மு.க. மந்திரி வர்ற பங்ஷன்னா போகக்கூடாதா? நீங்க வரணும்னு சேர்மன் சொன்னதோடு, வரவேற்புரைல என் பெயரைப் போட்டதால், போய்த்தானே ஆகணும். நான், இப்பவரைக்கும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராத்தான் இருக்கேன்''’என்று தனது இருப்பை உறுதி செய்தார்.

வதந்தி பரப்பியது யார்?

rr

"விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வை கரைக்கும் வேலை நடக்கிறதா?''’என்று அமைச்சரும் தி.மு.க. தெற்கு மாவட்ட செய லாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆரை கேட்டபோது “வத்திராயிருப்பு (அ.தி.மு.க.) சேர்மன் சிந்துமுருகன், மம்சாபுரம் (அ.தி.மு.க.) சேர்மன் ஐயனார், ராஜபாளையம் (அ.தி.மு.க.) நகரச் செயலாளர் பாஸ்கர்னு ஒவ்வொருத்தரா நம்ம கட்சில சேர்த்தாச்சு. தி.மு.க.வுக்கு யாரெல்லாம் வரக்கூடாதுன்னு நினைக்கிறோமோ, அவங்கள விட்டுட்டு மிச்சத்த பூராவும் சேர்த் திருவோம்''’என்று தெம்பாகப் பேசியவரிடம், "உங்களையும் ராஜேந்திரபாலாஜி தப்பித்ததையும் தொடர்புபடுத்தி தகவல் பரப்பப்படுகிறதே? உங்களை டேமேஜ் பண்ணுவதில் யார், யாரோ குறியாக இருக்கின்றார்களே?''’என்று கேட்டோம்.

"இந்த ராஜேந்திரபாலாஜி 15 நாளு உள்ள இருந்துட்டு வெளில வரவேண்டியதுதானே? இப்ப, எத்தனை எப்.ஐ.ஆர். ஆகிப்போச்சு பாருங்க. நானும் அ.தி.மு.க. ஆட்சில 18 நாள் ஜெயில்ல இருந்துட்டுத்தான் வந்தேன். ராஜேந்திரபாலாஜிக்கு இவ்வளவு பெரிய கேடு வந்ததுக்கு காரணமே, ரெண்டு மூணு வருஷமா நல்ல ஆளுகள விட்டு விலகினதுதான். கூட இருந்தவங்க, "அண்ணே எத்தனை லைக் விழுந்திருக்கு பார்த்தீங் களா'ன்னு காட்டுவாங்களாம். லைக் போட்டவன், லைக்கை காட்டினவன் யாராச்சும் இப்ப ராஜேந்திரபாலாஜி பக்கம் நிக்கிறானா? நான் போயி, ராஜேந்திர பாலாஜிக்கு உதவுவேனா? நான் சொன்னா போலீஸ்தான் கேட்குமா? என்னை பீஸ புடுங்கிறமாட்டாங்களா? இதுகூட தெரியாமலா இருக்கேன்.

எங்க கட்சில எனக்கு ஆகாதவங்கன்னு யாருமில்ல. ஆரம்பத்துல இருந்தே எனக்கு எதிரா அரசியல் பண்ணிட்டு வர்ற அந்தக் குடும்பத்துல இருக்கிற ஒருத்தன், இந்தமாதிரி பொய்யான தகவலை பரப்பினாத்தான் உண்டு. இல்லைன்னா.. ராஜேந்திரபாலாஜி கூடவே இருந்து ஒருத்தன் கெடுத்தான்ல, அவன் பண்ணிருப்பான். நாங்க பார்க்க வேண்டிய வேலை நெறய இருக்கு. வதந்தி பரப்புறவன் யாருன்னு தேடுறதுக்கு எங்களுக்கு நேரம் இல்ல''’என்று முடித்துக்கொண்டார்.

சிக்காமலே சிதையும் எதிர்காலம்!

"எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. சரண்டர் ஆவதைத்தவிர வேறு வழியே இல்லை'’ என்று ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்தே கவலை வெளிப்பட, ‘"எங்குதான் மறைந்திருக்கிறார்?''’என்று கேட்டபோது, நேரடியாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசினார்கள்.

rr

"தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதுவும் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு, ராஜேந்திரபாலாஜி அடியோடு மாறிவிட் டார். முதலில் விஜய நல்லதம்பி மீது புகார் பதிவானபோது, "யாரையும் நான் ஏமாற்ற வில்லையே?'’என்று தெம்போடு இருந்தார். "கட்சிக்கு ஒன்றரைக் கோடி செலவழித்தேன். ராஜேந்திரபாலாஜி ஏமாற்றிவிட்டார்' என்பதெல்லாம் ஒரு வழக்கா? அப்படி பார்த்தால், பல கட்சிகளிலும் கட்சிக்காக செலவழித்து ஓட்டாண்டியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம், கட்சிப் பிரமுகர்கள் மீது புகார் தொடுத்தால், காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிரமாகத் தேடுமா? உயர்நீதிமன்றத்தில் பெயில் கிடைத்துவிடும் என்று நம்பினார். கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார். தேடப்படும் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோருக்கு, அந்த 3 கோடி ரூபாய் என்பது பெரிய விஷயமே இல்லை. ஆனாலும், எதற்காக ஓடுகிறோம், யாருக்கு பயந்து ஓடுகிறோம் என்ற தெளிவு இல்லாமல், ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ ஓட்டத்தை தொடங்கிவிட்டார்கள். எதுல போயி முடியுமோ?

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ராஜேந்திர பாலாஜி மனசுல என்ன ஓடுச்சுன்னா... அமைச்சரா இருக்கும்போது கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணியாச்சு. அடுத்து, சிவகாசி ஏரியாவுல இலவச ஆஸ்பத்திரி கட்டணும். முதியோருக்கான ஆசிரமம் கட்டணும்னு சொல்லிட்டே இருந்தாரு. நார்த்லகூட, கோயில் கோயிலா போயிட்டு வந்தாரு. அவருக்கு, நாடு முழுக்க ஆன்மிகத் தொடர்புகள் இருக்கு. பாவத்தை விட புண்ணியம்தானே நெறய சேர்த்திருக்கேன். கடவுள் கைவிட மாட்டாருன்னு ரொம்பவும் நம்பினாரு. திட்டினதுக்குத்தான் மன்னிப்பு கேட்டுட் டேன்ல. தி.மு.க. கவர்மெண்ட் என்னை எதுவும் பண்ணாதுன்னு சொல்லிட்டு இருந்தாரு. ஆனா... எல்லாம் தலைகீழா மாறிப்போச்சு. சிக்கினா, கேஸ் மேல கேஸ் போட்டு சிதைச்சிருவாங்கன்னு தெரியும். அவரு பிடிபடாமலே, அதெல்லாம் நடந்துட்டிருக்கு''’என்று ‘"உச்'’கொட்டினார்கள்.

உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும்!