"அ.தி.மு.க.விற்கு ஒற் றைத் தலைமைதான் வேண்டும்' என்கிற குரல் வலுத்து வரும் நிலையில், இதே கோரிக்கையை முன்னிறுத்தி தலைமைத் தேர்தல் ஆணை யத்திலும் நீதிமன்றத்திலும் 2017-லேயே வழக்குத் தொடர்ந் திருப்பவரான அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ராஜன்செல்லப்பா எழுப்பும் உரிமைக்குரல் சரிதானா ?

llகே.சி.பழனிச்சாமி: கட்சிக்கு பொதுச்செயலாளர் வேண்டும்; கட்சியின் சட்டவிதி களைத் திருத்தி ஒருங்கிணைப் பாளர் -இணை ஒருங்கிணைப் பாளர் என்கிற புதிய பதவி களை உருவாக்கியது ஏற்புடை யதல்ல என்கிற தொண்டர் களின் உணர்வின் அடிப்படை யில்தான் நான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். தற் போது ராஜன்செல்லப்பா குரல் எழுப்பியிருக்கிறார். தேர்தல் தோல்வியை ஆய்வு செய்வதற் கான கூட்டத்தை ஏன் கூட்ட வில்லை? கட்சியில் தொண்டர் கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிற கருத்து கொள்கை அளவில் சரியானதுதான். அதேசமயம், அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட வர்கள் என சிலரை சுட்டிக் காட்டி அவர்களில் ஒருவர்தான் கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும் என்பது ஏற்புடை யதல்ல. தொண்டர்களும் இதனை ஏற்க மாட்டார்கள்.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமையேற்பது ஆரோக்கிய மானதுதானே?

Advertisment

கே.சி.பழனிச்சாமி: ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது மாற்று ஏற்பாடாக ஒரு முடிவுக்கு அவர் சம்மதம் தெரி வித்திருக்கிறாரே தவிர, தனக்குப் பின்னால் அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்கும் தகுதியான நபர் என யாரையும் ஜெயலலிதா அடையாளப்படுத்தவில்லை. உண்மை இப்படி இருக்கும் போது, அம்மாவால் அடை யாளம் காட்டப்பட்டவர் என ராஜன் செல்லப்பா கூறுவதில் உள்நோக்கம் இருக்கிறது.

கட்சியின் போக்கு குறித்த அதிருப்தியை அவர் வெளிப் படுத்தியிருப்பதில் என்ன உள்நோக்கம் இருக்க முடியும்?

கே.சி.பழனிச்சாமி: எடப்பாடி, பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், வேலுமணி என பலரும் கட்சியையும் ஆட்சியையும் பாகப்பிரிவினை செய்ய துடிக்கிறார்கள். அதா வது, துணை முதல்வர் பதவியை விட்டுகொடுத்து தன் மகனுக்கு மத்திய மந்திரி பதவியையும், தனக்கு கட்சியில் பொதுச் செயலாளர் பதவியையும் எதிர்பார்க்கிறார் ஓபிஎஸ். எடப்பாடியோ, முதல்வர் பதவியை விட்டுத்தராமல் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்கிறார். தனக்கு மந்திரி பதவியை உறுதி செய்ய வேண்டும் என அடம்பிடிக்கிறார் வைத்தி லிங்கம். தேர்தல் தோல்விக்குப் பிறகு இப்படிப்பட்ட வெறி ஆளாளுக்கு அதிகரித்துள்ளது. எனது வழக்கில், பொதுச் செயலாளரை முறைப்படி தேர்ந்தெடுங்கள் என உத்தரவு வரும் என்று இவர்கள் நம்புவ தால்தான் இப்போதே பாகப் பிரிவினைக்கு தயாராகிறார்கள். அதனை உறுதி செய்துகொள்ள வேண்டித்தான் ராஜன் செல் லப்பா தூண்டிவிடப் பட்டிருக்கிறார்.

Advertisment

ஒற்றைத் தலைமைக்கு தகுதியானவர் யார்? அவரை எப்படி கண்டறிவீர்கள்?

கே.சி.பழனிச்சாமி: தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை தனக்குப் பின்னால் புற வழியில் யாரும் ஆக்ரமித்து விடக்கூடாது என்பதற்காகவே பொதுச்செயலாளரை கட்சியின் கிளைக்கழகம் வரையுள்ள அடிமட்ட தொண்டர்கள் வாக் களித்துத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்ட விதி. அதன் படி, பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி, தகுதியானவர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுதான் ஆரோக்கியமான வழி.

ஒற்றைத் தலைமைக்கான சட்ட விதிகள் தெளிவாக இருக் கும்போது இ.பி.எஸ்.சும் ஓ.பி. எஸ்.சும் இணைந்து அதனை திருத் தியதில் சதி இருப்பதாக உங்கள் கருத்து எதிரொலிக்கிறதே ?

கே.சி.பழனிச்சாமி: நிச்சய மாக! அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமையை நிர்மூலமாக்கி இரட்டை தலைமையை உருவாக் கிய பா.ஜ.க. தலைமையின் சதிக்கு இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் உடன் பட்டனர். முதல் குற்றவாளிகள் இவர்கள்தான். அதனால்தான் இதனை எதிர்த்து வழக்குப் போட்டு இரண்டாண்டு காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன்.

ஒற்றைத் தலைமைக்கான குரல் சசிகலாவை மையப்படுத்தி நீள்கிறதா?

கே.சி.பழனிச்சாமி: சசி கலாவின் சேப்டர் முடிந்துவிட் டது. அதனால் அதற்கு வாய்ப் பில்லை. இது தற்போதைய பங் காளிகளுக்குள் நடக்கும் பாகப் பிரிவினைப் போராட்டம்தான்.

-இரா.இளையசெல்வன்