நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக சிறுநீரகம் விற்பனை பெருமளவில் நடப்பதுகுறித்து நம் நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

Advertisment

இவ்விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியதில், திருச்சி சிதார் மருத்துவமனை, மண்ணச்சநல்லூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான கெட்ட பெயரை போக்குவதற்காக, மண்ணச்சநல்லூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், தனது தொகுதி மக்களுக்கு விருந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். 

அப்போது, கிட்னி திருட்டு விவகாரம் குறித்து ஒருவர் கேள்வி கேட்பது போலவும், அதற்கு அவர் பதில் சொல்வதுபோலவும் அவராகவே ஒருவரை செட் செய்து பதிலளித்த   தில் ஏடாகூடமாகப் பேசி, மீண்டும் சர்ச்சை யாகியிருக்கிறது. அவரிடம் சிறுநீரகத் திருட்டு குறித்து தொகுதி நிர்வாகி ஒருவர் கேட்க, ""எப்போது காசு கம்மியாக இருக்கிறதோ, அப்போது கிட்னியை எடுத்துவிடுவோம்'' என்று சொல்லவும் அனைவரும் மிரள, ""கூட்டத்தில் கேள்வி கேட்டதால், ஜாலியாகத்தான் சொல்கிறேன்'' என்று சமாளித்துவிட்டு, ""கிட்னி அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், சர்ஜன் மூன்று பேர், யூராலாஜி டாக்டர் ஒருவர், ஒரு மயக்க மருந்து டாக்டர் என மொத்தம் 5 டாக்டர்கள் இருக்க வேண்டும். அறுவைச் சிகிச்சைக்கு உதவி செய்ய, 15 முதல் 20 பேர் இருப்பார்கள். தாசில்தார், ஓய்வு பெற்ற நீதிபதி, டி.ஆர்.ஓ., போலீஸ் கமிஷனர், மதுரை ஸ்ரீ மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஒப்புதல் தரவேண்டியிருக்கும். ஒரு அறுவைச் சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வாங்குவோம். அதில் எனக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். என் அப்பாவோட ரோல்ஸ்ராய்ஸ் காரின் விலை 14 கோடி ரூபாய். நாங்கள் செய்த மொத்த அறுவைச் சிகிச்சை 252. இதை நம்பி எப்போது ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்குவது? திருப் பட்டூரிலுள்ள அனைவரின் கிட்னியையும் கழட்டினால்தான் வாங்க முடியும்!'' என்றதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

Advertisment

கிட்னித்திருட்டு புகாரால் பெயர் டேமேஜான நிலையில், அதை சரி செய்வதாக நினைத்து, "எப்போது காசு கம்மியாக இருக்கிறதோ, அப்போது கிட்னியை எடுத்து விடுவோம்' என்றெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் போல கதிரவன் பேசியது... சொந்தச் செலவில் சூனியம் வைத்ததுபோல் அவருக்கே ஆப்பாகி விட்டது. 

கிட்னி திருட்டை ஒப்புக்கொண்ட கதிரவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று முன்னாள் பா.ஜ.க. மா.த. விமர்சித்துள்ளார். இதேபோல் பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.