Advertisment

காஷ்மீர் பயங்கரம்! பா.ஜ.க.வை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!

ss

ந்திய சுற்றுலா பயணிகள் 26 பேரின் உயிரையெடுத்த பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா அவசர அவசரமாக இங்குள்ள பாகிஸ் தானியர்களை நாடுதிரும்ப உத்தரவிட்டுள்ளது. இந்திய- பாகிஸ்தான் எல்லையான அட்டாரி -வாகா சாலை மூடப்பட்டது. இந்திய விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. குஜராத் கடல் பகுதியில் சூரஜ் போர்க் கப்பல் ஆயத்தநிலை யில் நிறுத்தப்பட்டது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தூதர்கள் திருப்பியனுப்பப்பட்ட துடன், பாகிஸ்தானி லிருந்து இந்தியத் தூதர்களும் இந்தியா வுக்கு அழைக்கப்பட்டனர். சிந்து நதிநீர் ஒப் பந்தத்தை உடனடியாக இந்தியா ரத்துசெய்தது.

இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்போகிறதா என்ற கேள்வியெழுந்தது.

பதிலுக்கு பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக அறிவித்தது. பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானங்கள் பறக்கத் தடைவிதித்தது. இதனால் இரு தரப்பிலும் பதற

ந்திய சுற்றுலா பயணிகள் 26 பேரின் உயிரையெடுத்த பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா அவசர அவசரமாக இங்குள்ள பாகிஸ் தானியர்களை நாடுதிரும்ப உத்தரவிட்டுள்ளது. இந்திய- பாகிஸ்தான் எல்லையான அட்டாரி -வாகா சாலை மூடப்பட்டது. இந்திய விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. குஜராத் கடல் பகுதியில் சூரஜ் போர்க் கப்பல் ஆயத்தநிலை யில் நிறுத்தப்பட்டது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தூதர்கள் திருப்பியனுப்பப்பட்ட துடன், பாகிஸ்தானி லிருந்து இந்தியத் தூதர்களும் இந்தியா வுக்கு அழைக்கப்பட்டனர். சிந்து நதிநீர் ஒப் பந்தத்தை உடனடியாக இந்தியா ரத்துசெய்தது.

இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்போகிறதா என்ற கேள்வியெழுந்தது.

பதிலுக்கு பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக அறிவித்தது. பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானங்கள் பறக்கத் தடைவிதித்தது. இதனால் இரு தரப்பிலும் பதற்றங்கள் அதிகரித்தன.

Advertisment

kk

இந்தியா -பாகிஸ் தான் தரப்பில் நிகழும் பதற்றங்களையடுத்து ஐ.நா. இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத் துள்ளது. பிரச்சனையை அர்த்தமுள்ள, அமைதியான முறையில் தீர்க்கமுடியும் எனவும் அது தெரிவித்துள்ளது.

அதேசமயம், எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிமீது விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தன. பஹல்காம் தாக்குதலையடுத்து சவுதி அரேபியாவிலிருந்து அவசர அவசரமாக இந்தியா திரும்பிய மோடி, நாடாளுமன்றத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், அடுத்த நாளே பீஹார் தேர்தலுக்காக பிரச்சாரத்துக்குச் சென்று, மேடையில் நின்று தாக்குதல் நடத்தியவர்களை சும்மா விடப்போவதில்லை எனச் சூளுரைத்ததை திரிணாமுல் காங்கிரஸின் மஹூவா மொய்த்ரா விமர்சித்துள்ளார்.

Advertisment

பஹல்காம் சுற்றுலா பகுதி, வழக்கமாக அதிக ராணுவ வீரர்கள் நடமாடும் பகுதி. அங்கு சம்பவம் நடந்த தினத்தில் ஏன் முற்றிலுமாக ராணுவ வீரர்கள் நடமாட்டம் இருக்கவில்லை. தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்பும் ராணுவம் ஏன் உடனடியாக உதவிக்கு வரவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், “"ஏன் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதியில் ஒரேயொரு ஆயுதமேந்திய ராணுவவீரர் கூட இல்லை''’என்று கேள்வியெழுப்பினர். இது உளவுத்துறை தோல்வியா... பாதுகாப்புக் குறைபாடா என எதிர்க்கட்சிகள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டு திரும்பிய பெண்ணிடம் மேற்குவங்க பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி, “இந்து என்பதால் கொன்றார்கள் எனச் சொல்லுங்கள்’ எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி அவரிடம் கருத்தைத் திணிக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையானது.

kk

பஞ்சாப் சிரோன்மணி அகாலிதளத் தின் தலைவர்களில் ஒருவரான ஹர்சிம்ரத் கவுர் பாதல், “"இரு நாட்டு எல்லைகளை மூடுவதற்குப் பதில், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் பாகிஸ்தான் முதலாளி களோடு செய்துவரும் வர்த்தகத்தை நிறுத்துவதற்குத்தான் ஒன்றிய அரசு முன்னுரிமை தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யமாட் டார்கள். ஏனெனில் அதானிக்குச் சொந்த மான துறைமுகங்கள் பாகிஸ்தானோடு கணிசமான வர்த்தகத்தில் ஈடுபடுவதால் அதானி நட்டப்படுவதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்''’எனக் கூறியது வைரலானது.

ssஇன்னொருபுறம் காஷ்மீர் தாக்குத லுக்காக இஸ்லாமியர்கள், காஷ்மீர் மாண வர்கள் தாக்கப்படுவதும் ஆங்காங்கே நடக்கத்தொடங்கியுள்ளது. சண்டிகரின், யுனிவர்சல் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், நொய்டாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். சிலரின் உடைகள் கிழிக்கப்பட்டுள்ளன. இதுபோல மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக பல புகார்கள் வந்துள்ளன. ஹிமாச்சலபிரதேசத்தின் அர்னி பல்கலைக்கழகத்திலும் மாணவர்களை வார்த்தையால் அவமானப்படுத்தவும் அடித்துத் துன்புறுத்தவும் செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தர விரும்பினால், அதற்கு இரு நாடுகளும் பதிலடி தந்துகொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட நபர்கள், அதுவும் ஒரு கட்சியின்கீழுள்ள குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர் களை சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு தாக்குதல் நடத்துவதும், அவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் இடத்தைக் காலிசெய்யாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டுவதும் தவறான முன்னுதாரணம்.

இத்தகைய போக்குகளை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகள் மூலம் தடை செய்யவேண்டும். தீவிரவாதிகளைவிட கீழான தரத்துக்கு நாம் இறங்கிவிட்டோம் என உலகம் விமர்சிக்க இந்தியா இடம் தரக்கூடாது என மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

nkn300425
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe