தீவிரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் டி.எஸ்.பி. நாடாளுமன்றத் தாக்குதல் மர்மம்?

oo

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலிருந்து ஜம்முவுக்குச் செல்லும் வழியில் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளான நவீத் பாபா, அல்டாஃப் ஹூசைன் இருவரும் பிடிபட்டிருக்கின்றனர்.

இது வழக்கமாக நடப்பது தானே!

ஆமாம், இந்த முறை அவர் கள் தப்பிச்சென்ற காரில், காஷ்மீர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிர வாதிகளை எதிர்கொள்ளும் டி.எஸ்.பி. ரேஞ்சிலான தேவீந்தர் சிங்கும் உடனிருந்திருக்கிறார். அவர்கள் தப்பிச்செல்ல டி.எஸ்.பி. உதவினாரா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

pp

நிச்சயம் இது பெரிய செய்திதான். அதைவ

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலிருந்து ஜம்முவுக்குச் செல்லும் வழியில் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளான நவீத் பாபா, அல்டாஃப் ஹூசைன் இருவரும் பிடிபட்டிருக்கின்றனர்.

இது வழக்கமாக நடப்பது தானே!

ஆமாம், இந்த முறை அவர் கள் தப்பிச்சென்ற காரில், காஷ்மீர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிர வாதிகளை எதிர்கொள்ளும் டி.எஸ்.பி. ரேஞ்சிலான தேவீந்தர் சிங்கும் உடனிருந்திருக்கிறார். அவர்கள் தப்பிச்செல்ல டி.எஸ்.பி. உதவினாரா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

pp

நிச்சயம் இது பெரிய செய்திதான். அதைவிட அதிர்ச்சி, 2001-ல் நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லி, தேசத்தின் மனசாட்சியை சாந்தப்படுத்த உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்த அப்சல் குரு, தன் வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில் தன்னை இந்த வழக்கில் தேவையின்றி இழுத்துவிட்டது இந்த தேவீந்தர்சிங்தான் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பிய அப்சல்குருவை, தேவீந்தர் விடவில்லை. சின்னச் சின்னதாக சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடவைத்து தொந்தரவுபடுத்தியிருக்கிறார். நாடாளுமன்றத் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளில் ஒருவனான மொகம்மதுக்கு டில்லியில் வாடகைக்கு வீடு எடுத்துத்தரவும், வாடகைக்கு கார்பிடித்து தரவும் நிர்பந்தித்திருக்கிறார். அப்சல் குரு மறுக்க, அவரது மனைவி, மகன் உள்ளிட்டவர்களை சும்மா விடப் போவதில்லை என மிரட்டி காரியம் சாதித்திருக்கிறார்.

pp

அன்றைக்கே இந்தச் செய்திகளெல்லாம் வெளிவந்தன. ஆனால் தேவீந்தர்சிங் உயரதிகாரி என்பதால் அப்சலின் வாக்குமூலத்தை யாரும் பொருட்படுத்தவில்லை.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் நக்கீரன் இதழில் எழுதிய "எதிர்க் குரல்' தொடரில் அப்சல் குரு குறித்தும், அவருக்கான மரண தண்டனையின் பொருத்தப்பாடின்மை குறித்தும் அன்றே எழுதி யிருந்தார். இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு உதவியதில் மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்திலும் தேவீந்தர்சிங்குக்குத் தொடர்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2018-ல் இவருக்கு அளிக்கப்பட்ட பதக்கத்தைத் திரும்பப் பெற மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

""தேவீந்தரின் செயல்பாடுகள்தான் அவரை இந்த நிலைக்கு இழுத்துவந்துள்ளது. இந்த முறை யாரும் அவரைக் காப்பாற்றப்போவதில்லை'' என்கிறார் உயர் அதிகாரி ஒருவர்.

தன்னை இக்கட்டுக்கு ஆளாக்கியதாக இரண்டு அதிகாரி களை தனது வாக்குமூலத்தில் அப்சல் குரு குறிப்பிட்டிருந்தார். அதில் ஒருவரான தேவீந்தர்சிங் சிக்கிவிட்டார். மற்றொருவர் சாந்திசிங். முகமது அயுப் என்பவரை விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றவர் என காஷ்மீர் மனித உரிமைக் கழகத்தால் குற்றம்சாட்டப்பட்டவர். இவ ரையும் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரவேண்டும் என்கிறார்கள், நாடாளுமன்றத் தாக்குதலில் இந்திய கைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என சந்தேகிக்கிறவர்கள்.

-க.சுப்பிரமணியன்

nkn180120
இதையும் படியுங்கள்
Subscribe