Advertisment

கரூர் பலி!  சி.பி.ஐ. விசாரணை தீவிரம்!

karur-CBI

ரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தை தற்போது சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.

Advertisment

கடந்த அக்டோபர் 18-ல், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்ட த.வெ.க.வினர் பலர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். பின்னர், தீபாவளிக்காக, ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீண்குமார், ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் உள்ளிட்டோர் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்ற நிலையில், சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்ட 3 பேர், கரூர் சுற்றுலா மாளிகையில் இருந்தபட

ரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தை தற்போது சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.

Advertisment

கடந்த அக்டோபர் 18-ல், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்ட த.வெ.க.வினர் பலர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். பின்னர், தீபாவளிக்காக, ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீண்குமார், ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் உள்ளிட்டோர் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்ற நிலையில், சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்ட 3 பேர், கரூர் சுற்றுலா மாளிகையில் இருந்தபடி எஸ்.ஐ.டி. அளித்த ஆவணங்களை ஆய்வுசெய்தனர்.

Advertisment

தொடர்ந்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மாஜிஸ்ட்ரேட் சார்லஸ் ஆல்பர்ட்டிடம், சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் மனோகரன், அக்டோபர் 22-ல் சி.பி.ஐ. எப்ஃ.ஐ.ஆர். அடங்கிய சீலிடப்பட்ட உறையை ஒப்படைத்தார். குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் விடுப்பில் இருந்ததால் நீதிமன்றம் 2-ல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல், அக்டோபர் 25-ம் தேதி, சி.பி.ஐ. எஃப்.ஐ.ஆர். நகலைக் கேட்டு த.வெ.க. விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கு நகல் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் திரும்பிவரவும், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஆவணங்களுடன் சி.பி.ஐ. அதிகாரிகளைச் சந்தித்தார். அவரிடம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 41 பேர் உயிரிழந்த வேலுச்சாமிபுரம், கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ண னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி காலை சுமார் 10.30 மணிக்கு கரூர் சுற்றுலா மாளிகையிலிருந்து புறப்பட்ட சி.பி.ஐ. அதி காரிகள், சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டனர். 

மேலும், சம்பவத்தை நேரில் பார்த்தவர் களிடம் விசாரணை நடைபெற்றது. சி.பி.ஐ. விசாரணை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. விசாரணையின்போது போட்டோ கேமரா, வீடியோ கேமரா, ட்ரைபாடுகள், சி.டி. ஸ்கேனர் கருவி ஆகியவை பயன்படுத்தப்பட்டன. முன்னதாக, சம்பவம் நடந்த இடத்திலிருந்த போட்டோ, வீடியோ கிராபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோ ரிடம் கரூர் சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ.யினர் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர், நவம்பர் 1ஆம் தேதி, இரண்டாவது நாளாக சம்பவம் நடந்த பகுதியில் சி.பி.ஐ. அதி காரிகள் ஆய்வு நடத்தினர். 3உ லேசர் ஸ்கேனர் மூலமாகவும் நூதன முறையில் சி.பி.ஐ. அதிகாரி கள் ஆய்வு நடத்தினர். ஆய்வுகள் தொடர்ந்தபடி யிருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

nkn051125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe