டந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. 

Advertisment

அதாவது, தமிழக அரசு நியமித்த விசா ரணை ஆணையம், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. தரப்பு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து இரண்டு விசாரணைக்கும் தடைவிதித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி தலைமையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. 

Advertisment

இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணையை ரத்துசெய்யக் கோரி, டிசம்பர் 2-ஆம் தேதி தமிழக அரசு தரப்பு மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் பதில் மனுவில், "காவல்துறையைப் பொறுத்தவரை சரியாக நடந்துகொண்டார்கள். கரூர் கூட்ட நெரிசலில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு மட்டுமின்றி, காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், குறிப்பாக காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஹோம் கார்ட்ஸ் உள்ளிட்டோருக்கும் நிறைய காயங்கள் ஏற்பட்டன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு சரியான வகையில் செயல்பட்டது. எந்தவகையிலும் காவல்துறையை குறை சொல்லவே முடியாது.

இந்த பிரச்சினையில் முக்கியமான காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான். எங்களின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாகப் பின்பற்ற வில்லை. மெத்தனமாக நடந்துகொண்டனர். அருணா ஜெகதீசன் ஆணையம் தனது விசாரணையைத் தொடர்வதற்கு உத்தரவிட வேண்டும். ரத்துசெய்யப்பட்ட எஸ்.ஐ.டி விசாரணை தொடர அனுமதிக்கவேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது'’’என்று தெரிவித்துள்ளது.

Advertisment

கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவரின் பெயரை ஜோசப் விஜய் என்று முதல்முறை தமிழக அரசு குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் அம்மனுவில், "விஜய் தரப்பு விசாரணையைக் கோருவது நியாயமல்ல. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து மாமல்லபுரத்திலுள்ள தனியார் விடுதியில் விஜய் சந்தித்திருந்தார். இதுமாதிரியான சந்திப்புகள் கூடாது' என்று தமிழக அரசு சுட்டிக்காட்டி யுள்ளது. இப்படிச் செய்தால் உண்மை எப்படி வெளியே வரும் என்ற கேள்வியை முன்வைத் துள்ளனர். த.வெ.க. தரப்பில் தொடரப்பட்ட மனு அரசியல் ஆதாயம் தேடும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த சம்பவத்தில் விஜய்யும் சம்பந்தப்பட்டிருப்பதால் தங்களுக்கு இப்படியான விசாரணைதான் வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்பது சரியான அணுகுமுறை யாக இருக்காது’’ என்று சுட்டிக்காட்டு       கின்றனர். 

இந்நிலையில் இவ்வளவு நாட்கள் கழித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது ஏன்? என்ற கேள்வியெழுகிறது. அதாவது, கரூரில் சி.பி.ஐ. நடத்திவரும் விசாரணையில் புதிதாக ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். இதை கருத்தில்கொண்டு சரியான நேரத்தில் பதில் மனு தாக்கல்செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருக்க லாம். அதனால்தான் திடீர் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.