ரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தி லிருந்து திருச்சி தலைமை குற்ற வியல் நீதிமன் றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள் ளது. வழக்கு தொடர்பான ஆவ ணங்கள் மற்றும் ஒரு காரை கரூர் நீதிமன்ற ஊழியர்கள், சி.பி.ஐ. அதி காரிகள் நவம்பர் 12-ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Advertisment

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் கடந்த செப்.27-ம் தேதி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

Advertisment

இதற்கிடையே, உச்சநீதிமன்றம் அக்.13-ஆம் தேதி இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள உத்தரவிட் டது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அக்.18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கரூர் குற்றவியல் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப் பட்டிருந்தது.

இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் தொடர் பான ஆவணங்கள் மற்றும் ஒரு காரை கரூர் குற்றவியல் நீதிமன்ற ஊழியர்கள், சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சி தலைமை குற்றவியல் நீதிபதி ஏ.பி. நசீர்அலி முன்னிலையில் நவ.12-ஆம் தேதி ஒப் படைத்தனர். சி.பி.ஐ. விசாரணை நடத் தும் வழக்குகளை கரூர் நீதிமன்றம் விசாரிக்க அதி காரமில்லாததால், திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன் றத்துக்கு மாற்றப் பட்டு வழக்கு தொடர்பான ஆவ ணங்கள் ஒப்படைக் கப்பட்டதாக சி.பி.ஐ. தரப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

அதேபோல தஞ்சா வூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சி.பி.ஐ. விசாரிக்கும் வழக்குகளையும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும் என மற்றொரு அறிவிப்பில் உள்ளது. அதன்படி, சி.பி.ஐ. விசாரிக்கும் கரூர் துயரச் சம்பவ வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், சி.பி.ஐ. வழக்குகளைப் பொறுத்த வரை, தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும் வரம்புக்குட்பட்ட வழக்குகள், அமர்வு நீதிமன்றம் அல்லது மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரிக்கும் வரம்புக்குட்பட்ட வழக்குகள் என பிரிக்கப்பட்டுள்ளது. கரூர் வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் அந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலேயே தொடருமா அல்லது திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அல்லது மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு மாற்றப்படுமா என்பதை நீதிமன்றம் தெரிவிக்கும்’ என்றனர்.