லோ தலைவரே, பொங்கல் திருநாளை திராவிடப் பொங்கலாகக் கொண்டாட  தி.மு.க. தயாராகிவருகிறது.''”

Advertisment

"ஆமாம்பா, இன உணர்வும் மொழி உணர்வும் மங்காமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று எண்ணுகிற தி.மு.க.  அரசு, வீர விளையாட்டுகளையும் தமிழ்நாட்டின் கிராமியக் கலைகளையும் இதன்மூலம் கட்டிக்காக்க நினைக்கிறதோ?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை திராவிடப் பொங்கலாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது தி.மு.க.  ஜனவரி 3ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை இதற்காக நடத்துகிறது. ஒன்றியம் -நகரம் -பகுதி அளவிலான முதற்கட்ட போட்டிகளும், மாவட்ட அளவில் இரண்டாம்கட்ட போட்டிகளும், மாநில அளவில் மூன்றாம்கட்ட போட்டிகளும் என திராவிடப் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை 3 கட்டங்களாக நடத்தி பரிசுகள் வழங்கி பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று உடன்பிறப்புகளுக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வரின் கட்டளைக்கு ஏற்ப இந்த விளையாட்டுப் போட்டிகளை பிரமாண்டமாக நடத்தும் பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர் தி.மு.க.வினர். விளையாட்டுப் போட்டிகளுடன், சமத்துவப் பொங்கல் வைத்தல், கோலமிடுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கொண் டாட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றும் உடன்பிறப்புகளுக்கு அவர் அறி வுறுத்தியுள்ளார். "சமத்துவம் பொங்கட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்!' என்கிற தலைப்பில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னெடுக்கிறது தி.மு.க.''” 

rang

"புதிய ஆண்டிற்கான தமிழக சட்டமன்றக் கூட்டம் கூடுவதற்கான ஏற்பாடுகள் பலவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறதே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, தமிழக சட்டமன்றத்தின் 2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம், கவர்னர் உரையுடன் 20ஆம் தேதி கூடுகிறது. கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அரசின் செயல்பாடுகள் குறித்த தயாரிப்புகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. காலவரையறை அற்ற ஸ்ட்ரைக்கை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் 6ஆம் தேதி முதல் முன்னெடுக்கவிருப்பதாக அறிவித்திருப்பதால், இதை எப்படி முதல்வர்  ஸ்டாலின் சமாளிக்கப் போகிறார்? இதில் அவர் பாஸாவாரா? என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது. இந்த  நிலையில் அரசு ஊழியர்கள் தரப்பின் பிரதான கோரிக்கையான பழையமுறை ஓய்வூதியம் குறித்து ஆய்வறிக்கையை, ககன்தீப்சிங் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழு முதல்வரிடம் கொடுத்திருப்பதால், அரசு ஊழியர்களுக்கு சாதகமான அறிவிப்பு, கவர்னர் உரையில் இருக்கலாம் என்கிற நம்பிக்கை பரவலாக வலுத்திருக்கிறது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை 6ஆம் தேதி கூடுகிறது. பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட, சில புதிய திட்டங்களுக்கான ஒப்புதல்கள் வழங்குவது குறித்து முடிவுகள் எடுக்கப் படவிருக்கின்றன என்கிறது கோட்டை வட்டாரம்.''”    

"மெஹா பதவி உயர்வுப் பட்டியலும், பணியிட மாற்றப் பட்டியலும் காவல்துறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 30 பேருக்கு பதவி உயர்வும், 70 அதிகாரிகளுக்கு பணியிட மாற்றமும் ஒரே நாளில் அளித்து அதிகாரிகள் தரப்பைத் திகைக்க வைத்திருக்கிறது தி.மு.க. அரசு. இந்த பணியிட மாற்றத்தில் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவஆசிர்வாதத்திற்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வளித்து, அவரை ஆயுதப்படைக்கு மாற்றியிருக்கிறார்கள். டிசம்பர் மாத இறுதியில் டேவிட்சன் தேவஆசிர்வாதம் உட்பட ஏ.டி.ஜி.பி.க்கள் அனைவருக்கும் டி.ஜி.பி. பதவி உயர்வு வரவிருக்கிறது என்பது தெரிந்த விசயம்தான். அப்படி, பதவி உயர்வு வழங்கப் பட்டு தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையின் டி.ஜி.பி.யாக டேவிட்சன் நியமிக்கப்படுவார் என்று ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சமீபகாலமாக செய்தி பரவிவந்தது. ஆனால், அது  நடக்கவில்லை. பொதுவாக ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, ஆயுதப்படைக்கு அனுப்பப்படுகிறார் என்றால், அது பனிஷ்மெண்ட் பதவி அல்லது மேலிடத்துக்கு அவர் உகந்தவராக இல்லை என்பதாகவே விமர்சனம் எழும். அப்படிதான் டேவிட்சனின் இந்த இடமாற்றமும் பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக உயரதிகாரிகள் சிலருடன் பல்வேறு விசயங்களில் இவர் முரண்பட்டதாலேயே இவரை ஆயுதப்படைக்கு அனுப்பி யிருக்கிறார்கள் என்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க. தரப்போடு அண்மைக்காலமாக இவர் நெருக்கத்தை வளர்த்துக்கொண்டிருந்தார் என்றும் கூறுகிறார்கள்.''”

’"மத்திய பாதுகாப்புத் துறையில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு, அங்கேயே பதவி உயர்வு தரப்பட்டிருக்கிறதே?''”

rang2

"ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வில் முக்கியமாக ஒரு விசயம் கவனிக்கப்பட்டிருக்கிறது. மத்திய தொழில் பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி. இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி பொன்னி, ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று அதே துறையில் நியமிக்கப்பட்டுள்ளார். இரு வாரங்களுக்கு முன்புதான் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் பொன்னி. பொதுவாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உயரதிகாரியாக தமிழக ஐ.பி.எஸ்.களை நியமிப்பது குதிரைக்கொம்பாகத்தான் இருந்து வந்தது. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயரதிகாரியாக நியமிக்கப்பட்டதை ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் வியந்து பார்க்கப்பட்டது. இந்த சூழலில், அவருக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கி அதே துறையில் நியமிக்கப்பட்டதை ஆச்சரியமாக கவனிக்கிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.''” 

"த.வெ.க.வுக்குச் சென்ற செங் கோட்டையன் இப்போது பலத்த அப்செட்டில் இருப்பதாகக் கூறுகிறார்களே?''”

rang4

"அ.தி.மு.க.வில் உள்ள வி.ஐ.பி.க்களை எல்லாம் த.வெ.க.வுக்குக் கொண்டுவருகிறேன் என்று  நடிகர் விஜய்க்கு வாக்குறுதி கொடுத்திருந்தாராம்  செங்ஸ். இதற்காக அ.தி.மு.க. பிரமுகர்கள் பலருடனும் பேசி அவர்களை சரிக்கட்டி வைத்திருந்தாராம்.  இதன் அடிப்படையில் விஜய் தலைமையில் தனது முன்னிலையில் 31ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பிரமுகர்களை த.வெ.க.வில் இணைக்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார் செங்ஸ். ஆனால், 30ஆம் தேதி இரவு இந்த நிகழ்ச்சியை திடீரென்று விஜய் ரத்து செய்துவிட்டார். அதற்குக் காரணம், கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யின் விசாரணைக்காக த.வெ.க.வின் புஸ்ஸிஆனந்த், ஆதவ்அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் டெல்லியில் உள்ள அவர்கள் அலுவலகத்தில் ஆஜரானார்கள். சி.பி.ஐ. விசாரணை முடித்து 31ஆம் தேதி காலையில் அவர் கள் சென்னை திரும்புவதாக திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், 31ஆம் தேதியும் சி.பி.ஐ. முன்பாக இவர்கள் ஆஜராக வேண் டும் என உத்தரவு போடப்பட்டி ருக்கிறது. அத  னால் அவர்கள் சென்னை திரும்ப முடியவில்லை. எனவே அவர்கள் சென்னைக்கு திரும்பிய பிறகு இணைப்பு விழாவை வைத்துக்கொள்ளலாம் என விஜய் சொல்லிவிட்டதால்தான் இந்த நிகழ்ச்சி  ரத்து செய்யப்பட்டது என்கிறார்கள். இதனால் செங்ஸ் அப்-செட்டில் இருக்கிறாராம்.''” 

rang3

"காவல்துறை அதிகாரி குடும்பத்தினருடன் அடாவடி செய்யும் பா.ஜ.க. பிரமுகர் உலா வந்தது பற்றி திருச்சியில் இருந்து தகவல் கிளம்புச்சே?''”

"திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்  கடந்த 30ஆம் தேதி நடந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழா வழக்கம்போல் விமரிசையாக நடைபெற்றது. அப்போது தெய்வ தரிசனம் செய்வதற்காக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்தின் தாயார், எஸ்.பி.யின் அரசாங்க வாகனத்தில் வந்திருந்தார். அதேபோல் வயலூர் கோயில் ஏகாதசியையும் அதே வாகனத்தில் சென்று கண்டுகளித்தார். அவருடன், சுங்கக் கட்டண சாவடியை அடித்து உடைத்தது உட்பட, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பா.ஜ.க. பிரமுகர்  ஆக்ஸினா கருணா முன்னிருக்கையில் அமர்ந்து வந்ததைப் பார்த்து, பொதுமக்கள் மட்டுமல்லாது காவல்துறையினரும்  அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.பி.யின் ஆல் இன் ஆல் ஆன எஸ்.ஐ. செந்தில்  செய்து கொடுத்தாராம். இது எப்படி இருக்கு?''

"என்னப்பா கைலாஸாவில் புத்தாண்டுக் கொண்டாட்டம் சுரத்தில்லைனு தகவல் வருதே?''”

"நிஜம்தான் தலைவரே, இதுவரை இருந்த புத்தாண்டுகள் போலிலில்லாமல் பெரிய அளவுக்குக் கொண்டாட்டங்கள் இல்லாமல், கைலாஸாவில் நித்யாவுக்கு புத்தாண்டு பிறந்திருக்கிறது. இப்போதைய நித்யானந்தாவின் வீடியோக்கள் எல்லாம் ஏ.ஐ. துணையுடன்தான் உருவாக்கப்பட்டு வருகிறதாம். தவிரவும், பணவரவு போதுமான அளவு இல்லாத தால், தமிழ்நாடு முழுக்க இருக்கும் சொத்துக்களை பெரியஅளவில் விற்றுக்கொண்டிருக்கிறார். ரஞ்சிதா அவருடன்தான் இருந்துகொண்டி ருக்கிறார். அவரிடமும் பழைய உற்சாகம் இல்லையாம். அனைத்து சொத்துக்களுக்கும், நித்தியானந்தா தனது தாயாரைத்தான் டிரஸ்ட்டியாகப் போட்டிருக்கிறார். நித்யானந்தாவுக்கு பழைய பொற்காலம் திரும்ப வருமா என்பது சந்தேகம்தான். வழக்குகள் துரத்துவதால், இந்தியாவுக்கு வரும் எண்ணமும் அவருக்கு இல்லையாம். கைலாஸா என்ற கற்பனை தேசத்தில் இருப்பதாகக் காட்டிக்கொண்டு அவர் போலி வாழ்க்கை நடத்திக்கொண்டி ருக்கிறார்.''”

"ஓ.பி.எஸ்.ஸை தி.மு.க.வுக்கு வராமல் தடுப்பது வைத்திலிங்கம்தான் என்ற பேச்சு அடிபடுகிறதே?''”

"உங்க காதுக்கு செய்தி எட்டாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஓ.பி.எஸ். விஷயத்தில் அவர் த.வெ.க.வுக்குச் செல்வதா,… இல்லை தி.மு.க.வுக்கு போவதா என்பதில் பெரிய தள்ளாட்டம் இருக்கிறது. என்ன ஆனாலும் ஓ.பி.எஸ். தி.மு.க.வுக்கு போகக்கூடாது, த.வெ.க.வுக்கு போகவேண்டும் என வைத்தி லிங்கம்தான் முட்டுக்கட்டை போடுகிறாராம். சட்டமன்றத்தில் ஜெ. ஆட்சிக்காலத்தில், எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, ஒரு சட்டமன்ற விவாதத்தில் ஸ்டாலினை அடிக்கப் பாய்ந்திருக்கிறார் வைத்திலிங்கம். அப்போது நத்தம் விஸ்வ நாதன்தான் அவரைத் தடுத்திருக்கிறார். இதையடுத்து வைத்திலிங்கம் வீட்டின் அருகே மீட்டிங் போட்டு, “"தைரியமிருந்தால் வெளியே வாடா'’என சவால்விட்டதாம் தி.மு.க. அதை வைத்திலிங்கம் இன்னும் மறக்கவில்லை. இதனால் தி.மு.க.வுக்குப் போனால் தனக்கு எதிர்காலம் இல்லையென முடிந்தளவு ஓ.பி.எஸ். ஸை தடுத்து டி.டி.வி. தினகரன், அண்ணாமலை மூலம் பேசி, த.வெ.க.வுக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் இருக்கிறார். ஓ.பி.எஸ். அணியி லுள்ள மற்ற அனைவரும் இதை எதிர்த்து ஓ.பி.எஸ்., தி.மு.க.விடம் செல்லாவிட்டால் நாங்கள் அனைவரும் தி.மு.க.வுக்குச் செல்வோ மென மிரட்டிவருகிறார்கள். அமித்ஷா வோடான ஒரு உரையாடலின்போது, உங்களை எடப்பாடி சேர்த்தாலும் சேர்க்கவில்லை என்றாலும் தி.மு.க.தான் ஜெயிக்கும். ஆனால் சேர்க்காத பட்சத்தில் தி.மு.க. எளிதாக ஜெயிக்கும் எனச் சொல்லியிருக்கிறார். இதனால் ஜெயிக்கும் பக்கத்தில் சேர்வதா, ஜெயிக்காத பக்கத்தில் சேர்வதா, புதிய கட்சியில் சேர்வதா என இறுதி முடிவை எடுப்பதில் தடுமாற்றத்தில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ்.''

"சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் விஜய்யும் சிக்கப்போகிறாராமே?''

"ஆமாங்க தலைவரே, கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில், த.வெ.க. முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸிஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரை டெல்லிக்கே வரவைத்து சி.பி.ஐ. விசாரணை பண்ணுச்சு. 3 நாட்களாக விசாரணை நடத்தி முடிச்சத்துல, நடிகர் விஜய், கரூர் கூட்டத் துக்கு தாமத மாக வந்தது, தன்னோட கேரவனோட நூற்றுக்கணக் கான ரசிகர் களையும் திரட்டிகிட்டு வந்தது, கரூரில் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சரிவர செய்யா ததுன்னு த.வெ.க. தலைவர் என்ற முறையில் விஜய் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கு. அதனால அடுத்தகட்டமா விஜய்க்கும் சம்மன் அனுப்ப சி.பி.ஐ. முடிவெடுத்திருக்குதாம்... விரைவில் விஜய் டெல்லிக்கு விசிட் அடிக்க வேண்டியிருக்குமாம்.''

"என் காதுக்கு வந்த ஒரு தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். போதைப் பொருளாகப் பார்க்கப்பட்டு வந்த கள்ளை, உணவின் ஒரு பகுதி என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இது தமிழகத்திலுள்ள நாடார் சமூகத்தினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், கள் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளையும், தமிழக மக்களோடு கள் எப்படி உணவின் ஒரு பகுதியாக இருக்          கிறது என்பதையும் பிரதமர் மோடிக்கு தொடர்ச்சியாக கடிதம் மூலமாக தெரிவித்து வந்தவர் அர சியல் விமர்சகரும் ஆலோசகருமான வழக்கறிஞர் ரவீந் திரன் துரைசாமி. அவரின் தொடர் முயற்சி யால்தான் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் உலா வருகிறது.''