முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், முன்னாள் துணைமேயர் மற்றும் மாவட்டச் செயலாளர் என கோவை தி.மு.க.வை எட்டு வருடங் களாக அதிகாரத்துடன் கட்டி ஆண்ட நா.கார்த் திக்கை நீக்கி, புதிய மா.செ.வாக துரை.செந் தமிழ்செல்வனை நியமித்து தனது ஆட்டத் தினை ஆரம்பித்துள்ளார், கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளரான செந்தில்பாலாஜி.
எ.வ.வேலுவிற்கும், செந்தில்பாலாஜிக்கும் இடையே இருந்த உரசலே மா.செ. நீக்கத்தின் பின்னணி என் கின்றனர் விவரமறிந்தவர்கள்.
செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் சிறையிலிருந்தபோது, கட்சி சம்பந்தமான நிகழ்வுகளில் செந்தில்பாலாஜியின் படங்களையும், அவரது பெயரையும் முழுமையாக புறக்கணித்தது அவரது தரப்பிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. தவிர, செந்தில்பாலாஜி தொடர்பான ஒப்பந்தங்கள், ஆதரவாளர்கள் மீது தனது எதிர் நிலைப்பாட்டைக் காண்பித்து செந்தில் பாலாஜியை தனக்கு எதிரிபோல் காண்பித்துக் கொண்டார் மாநகர மா.செ.வான நா.கார்த்திக்.
சிறையிலிருந்து வெளியில் வந்து மீண்டும் அமைச்சரான செந்தில்பாலாஜி மீண்டும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அறிவிக்கப் பட்ட பின்பும், இருவருக்குள்ளும் எதிரும் புதிருமான செயல்பாடுகள் தொடர்ந்தன. மீண்டும் அவரது அமைச்சர் பதவி பறிபோனபோது தனது நட்பு வட்டாரங்களில், அதுகுறித்து விமர்சனம் செய்ததாக சலசலப்பு ஏற்பட்டது. அதேபோல் அரசுத் துறையிலிருந்து வருகின்ற வருவாய்களை செந்தில்பாலாஜி மட்டும் பயன்படுத்திக் கொள்வதால் கட்சித் தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என தனக்கு நெருக்கமான நண்பர்களுடன் கார்த்திக் விவாதித்தத
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், முன்னாள் துணைமேயர் மற்றும் மாவட்டச் செயலாளர் என கோவை தி.மு.க.வை எட்டு வருடங் களாக அதிகாரத்துடன் கட்டி ஆண்ட நா.கார்த் திக்கை நீக்கி, புதிய மா.செ.வாக துரை.செந் தமிழ்செல்வனை நியமித்து தனது ஆட்டத் தினை ஆரம்பித்துள்ளார், கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளரான செந்தில்பாலாஜி.
எ.வ.வேலுவிற்கும், செந்தில்பாலாஜிக்கும் இடையே இருந்த உரசலே மா.செ. நீக்கத்தின் பின்னணி என் கின்றனர் விவரமறிந்தவர்கள்.
செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் சிறையிலிருந்தபோது, கட்சி சம்பந்தமான நிகழ்வுகளில் செந்தில்பாலாஜியின் படங்களையும், அவரது பெயரையும் முழுமையாக புறக்கணித்தது அவரது தரப்பிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. தவிர, செந்தில்பாலாஜி தொடர்பான ஒப்பந்தங்கள், ஆதரவாளர்கள் மீது தனது எதிர் நிலைப்பாட்டைக் காண்பித்து செந்தில் பாலாஜியை தனக்கு எதிரிபோல் காண்பித்துக் கொண்டார் மாநகர மா.செ.வான நா.கார்த்திக்.
சிறையிலிருந்து வெளியில் வந்து மீண்டும் அமைச்சரான செந்தில்பாலாஜி மீண்டும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அறிவிக்கப் பட்ட பின்பும், இருவருக்குள்ளும் எதிரும் புதிருமான செயல்பாடுகள் தொடர்ந்தன. மீண்டும் அவரது அமைச்சர் பதவி பறிபோனபோது தனது நட்பு வட்டாரங்களில், அதுகுறித்து விமர்சனம் செய்ததாக சலசலப்பு ஏற்பட்டது. அதேபோல் அரசுத் துறையிலிருந்து வருகின்ற வருவாய்களை செந்தில்பாலாஜி மட்டும் பயன்படுத்திக் கொள்வதால் கட்சித் தொண்டர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என தனக்கு நெருக்கமான நண்பர்களுடன் கார்த்திக் விவாதித்ததும் தெரியவர... இது இருவருக்குமான இடைவெளியை அதிகரித்தது. எனினும், கரூர் முப்பெரும் விழாவினை செந்தில்பாலாஜி பொறுப்பேற்று செய்துகொண்டிருந்த வேளையில், அதனை மட்டம் தட்டும் விதமாக மாநகர மாவட்ட தி.மு.க. சார்பில் முப்பெரும் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல், இரத்ததானம் விழிப்புணர்வுக்காக மாரத்தான் கோவை -பீளமேடு பகுதி மசக்காளிபாளையம் சாலையில் மாரத்தான் போட்டியை நடத்தியது அவர்களிடைய பிளவை பெரிதுபடுத்தியது'' என்கின்றார் உக்கடம் ரஜாக்.
மா.செ. பதவியிலிருந்து நா.கார்த்திக் நீக்கப்பட்டதுமே பீளமேடு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள். "இதுவரை கோவை தி.மு.க.வை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பீடை ஒழிந்துவிட்டது' என சமூக வலைத்தளங்களில் கார்த்திக் மீதான வன்மத்தை பலரும் வெளிப்படுத்தினர் .
ஹோப் கல்லூரி பகுதியைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகி ஒருவரோ, "என்ன ஆட்டம்..? அவர் வைத்ததுதான் சட்டம். கட்சியில் பதவி வேண்டுமென்றால் ஒன்று பணம் இருக்கணும், இல்லைன்னா அவரோட சாதியாக இருக்கனும். செந்தில்பாலாஜியோட வருகை எங்களுக்கு ஆதரவாக இருந்தது. நா.கார்த்திக் மருமகன் அமலாக்கத்துறை பிரிவில் அதிகாரி யாகப் பணியாற்றி வருவதை சாதகமாக்கிக் கொண்டு செந்தில்பாலாஜிக்கு எதிராக அவர் என்னவெல்லாம் வேலை செய்தார் என்பதை இங்குள்ள தி.மு.க. அறியும். தனக்குப் போட்டியாக யாரும் இல்லை என்கின்ற மமதையில், "அமைச்சர் கே.என்.நேருவுக்கு மாநகராட்சி நிர்வாகம் பற்றி தெரியவில்லை என்றும், அவருடைய பணிகள் நுனிப்புல் மேய்வதாக இருப்பதாகவும்' கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அது மட்டுமல்ல தி.மு.க. தலைமைக்கு 10 கதவுகள் இருப்பதாகவும், காரியம் சாதிக்க வேண்டுமென்றால் 10 கதவுகளிலும் கொடுக்க வேண்டியதை கொடுத்துத்தான் திறக்க வேண்டியுள்ளது என்று மிகவும் கேவலமாக விமர்சித்த ஆடியோ ஒன்று அப்பொழுது வைரலானது. தி.மு.க. தலைமை இவர் மீது நடவடிக்கை எடுக்குமென்று எதிர்பார்த்த நிலையில் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல தன்னை மீறி யாருமே கழக தலைமையை தொடர்புகொள்ளக் கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருந்தார். செந்தில்பாலாஜியை தனது போட்டியாளராகவே கருதிய இவர், முப்பெரும் விழா சமயத்தில் செந்தில்பாலாஜியை எதிர்ப்பதாக நினைத்து சொந்த கட்சித் தலைமையே பகைத்துக்கொண்டு மாரத்தான் போட்டியை நடத்தியதுதான் இவருக்கு வில்லங்கமானது'' என்றார் அவர்.
மூத்த முன்னோடிகளின் வாரிசுகள் யாரையும் மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு வராமல், மாநில நிர்வாகம் அல்லது பொதுக்குழு, செயற்குழுவில் எதாவது ஒரு பதவி கொடுத்து அமைதியாக்கிவிடுவார். இதற்கு உதாரணம், கழகத்தின் மூத்த உறுப்பினர்களான நந்தகுமார், பி.வி.சுப்பிரமணியம், லோகு உள்ளிட்ட பலர் கழகப் பணியாற்றாமல் இன்றுவரை கழகத்தை விட்டு ஒதுங்கியே இருக்கிறார்கள்.
இதேபோல், கோவை மாநகராட்சியில் பல நிலைக் குழுக்கள் இருந்தபோதும் அதில் எந்த பதவியும் தராமல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பதவியை தி.மு.க.வின் மூத்த உறுப்பினரான கார்த்திக் செல்வராஜிற்கு வழங்கியதும் இவரது சர்வாதிகாரத்தின் உச்சம் என்கிறார்கள் உ.பி.க்கள்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட நா.கார்த்திக்கின் ஆதரவாளர்களோ, "செந்தில்பாலாஜி இன்னும் அ.தி.மு.க. மனநிலையில் இருக்கின்றார். தனக்கு எதிராக யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்பது அவரது எண்ணம். மாரத்தான் போட்டி அவரை கேட்டுத்தான் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அவர் வரவில்லை. வேண்டாம் என்றால் நாங்கள் ஏன் மாரத்தான் போட்டியை நடத்துகிறோம்? ஒன்றிணைவோம் திட்டத்தில் மாநகரம் செய்து முடித்ததை யாரும் முடிக்கவில்லை என்பதே நிஜம். கட்சியில் அதிகாரபூர்வமான "பென்' உள்ளிட்ட அமைப்புக்கள் இருக்க... தனக்கென்று சதீஷ், கருணா எனும் தனிப்பட்ட டீமை வைத்துக்கொண்டு விசாரித்து வருகின்றார்.
அவர்கள் கட்சியில் என்ன பணி நடந்திருக்கின்றது என்பதனை ஆய்வு செய்யாமல் மா.செ. கார்த்திக்கிற்கு வேண்டாதவர்களை தேடிப்பிடித்து கருத்து வாங்கி தலைமைக்கு புகாராக அனுப்பியுள்ளனர். தன்னுடைய வழக்கிற்காக, கோவையிலுள்ள 10 தொகுதிகளையும் விட்டுத் தருகின்றேன் என முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரிடம் செந்தில்பாலாஜி பேரம் பேசியது தலைமைக்கு தெரியாமல் இருக்குமா என்ன? மேற்கு மண்டலமே என்னுடைய கட்டுப்பாட்டில் என்கிற செந்தில்பாலாஜி, எத்தனை தொகுதிகளை வென்று கொடுப்பார் என பார்ப்போம்'' என்கின்றனர்.
"தன்னை மிஞ்சி யாரும் வளரக்கூடாது என்பதுதான் இருவரின் எண்ணமும். இருவருக்கும் மாவட்டத்தில் யார் பெரியவன் என்கின்ற ஈகோ இருந்தது உண்மை. சமீபத்தில் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்', "ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான ஏற்புக்கூட்டம் சித்தாப்புதூரில் நடந்தது. இதற்கு செந்தில்பாலாஜி வரவில்லை. இதில் பேசிய மாநகர மா.செ. நா.கார்த் திக், "நீலாம்பூர் வரை நீட்டிக்கப்பட்ட அவிநாசி மேம்பாலம், நஞ்சப்பா சாலை பெரியார் நூலகம், செம்மொழிப் பூங்கா, சிங்காநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் ஆகியவற்றிற்காக அமைச்சர் எ.வ.வேலு போராடி வருகின்றார். மாவட்டம், தொகுதி வேறாக இருந்தாலும் கோவை மீது கரிசனம்காட்டி வளர்ச்சிப் பணியினை அறிய மாதம் இருமுறை இங்கு வருகின்றார்'' என எ.வ.வேலுவிற்கு புகழாரம் சூட்டியது செந்தில்பாலாஜிக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அதுதான் நீக்கம்வரை சென்றுள்ளது'' என்றனர் விவரமறிந்த சில மூத்த நிர்வாகிகள்.
உளவுத்துறையோ, "உப்பிலிபாளையத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் எடுப்பதற்காக நிதி ஒதுக்கியுள்ளார் உள்ளூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமன். சுற்றுச்சுவர் எடுத்தால் தன்னுடைய மாமியார் வீடு பாதிக்கப்படும், கார் நிறுத்த முடியாது என அதற்கு தடை போட்டுள்ளார் நா.கார்த்திக். இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், ரேஷன்கடை கட்டிடம் ஒன்றிற்கு நிதி ஒதுக்கியுள்ளார் எம்.எல்.ஏ. இதற்கும் கார்த்திக் முட்டுக்கட்டை போட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும் அது குறித்து பேசியுள்ளார். அது துணை முதல்வரின் பார்வைக்குச் சென்ற நிலையில்... "மக்களின் திட்டங்களுக்கு தடை போட இவர் யார்?' என்ற ரீதியில் செந்தில் பாலாஜியின் புகார்களும் சேர்ந்துகொள்ள, தேர்தல் நேரத்தில் கடின முடிவை எடுத்துள்ளது தி.மு.க. தலைமை.
"மேற்கு மண்டலத்தில் இவரைப்போல் இன்னும் ஓரிரு மா.செக்களின் நீக்கல் படலம் நடைபெறலாம்' என்கின்றது மாநில உளவுத்துறை.