மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில், கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு தீபம் ஏற்றுவதை விவகாரமாக்கி, இந்துத்வா அமைப்புகள் நீதிமன்றத் தீர்ப்பின் துணையோடு களமிறங்க, அதை தமிழக அரசு, மேல்முறையீட்டு மனு மற்றும் போலீசாரை வைத்து தடுத்து நிறுத்தியிருப்பது அங்கே மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
தமிழக தென் மாவட்டங்களை குறிவைத்த இந்து முன்னணியினர், திருப்பரங்குன்றம் மலையி லிருக்கும் சிக்கந்தர் தர்காவை மையப்படுத்தி, "கந்தர் மலையா? சிக்கந்தர் மலையா? இந்துக்களே சிந்திப்பீர்! நம் கந்தர் மலையை மீட்க வா!' என்று ஜனவரி 4ஆம்தேதி மிகப்பெரிய போராட்டத்தை கையிலெடுத்தது பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் புலிகள் உள்ளிட்ட அமைப்பினர், மதநல்லிணக்க அமைதிப் பேரணியை நடத்தினர்.
அதையடுத்து அமைதி திரும்பிய நிலையில். தற்போது புதிய பிரச்சனையாக, "திருப்பரங்குன்றம் தர்காவுக்கு அருகிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம். முருகன் கோயிலுக்கு மேலேயுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீபத்தூணில் ஏற்றுவதைவிட இதுவே சிறந்தது'' என மதுரை உயர் நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் வழக்கு தொடுத்தார். அதனைத் தொடர்ந்து "கந்தர் மலையா? சிக்கந்தர் மலையா?' என்ற போஸ்டர்கள் மீண்டும் முளைக்க, திருப்பரங்குன்றத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டது.
இந்து தமிழர் கட்சியை சேர்ந்த ராம ரவிக் குமார் சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவிற்கு அருகிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என்று வழக்கு போட, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவிற்கும், அதனை சுற்றியுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு, "திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தர்காவிற்கு அருகிலுள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர், புதன்கிழமையன்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனுத் தாக்கல் செய்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/tkundram1-2025-12-05-10-36-15.jpg)
இதற்கிடையே தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் அளித்த உத்தரவுப்படி அடிப்படையில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என இந்து அமைப்புகள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்து அறநிலையத் துறை கோயில் நிர்வாகம், வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் மட்டும் கார்த்திகை தீபத்தை ஏற்றியது. இது, பா.ஜ.க., இந்துமுன்னணி போன்ற இந்து அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் ஹைகோர்ட் மதுரைக் கிளை உத்தரவை நிறைவேற்றவில்லை என இந்துமுன்னணியை சேர்ந்த வழக்கறிஞர் அருண், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், "நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பர் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையெனில் மாலை 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்தும், கார்த்திகை தீபம் ஏற்றப்படாத நிலையில், 'மனுதாரர் மற்றும் 10 பேர் உடன் சென்று தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். உடன் சி.ஐ.எஸ்.எப். போலீசார் பாதுகாப்புக்காகச் செல்ல வேண்டும்'' என நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் மீண்டும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கு தொடர்ந்த இந்து தமிழர் கட்சியை சேர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோயில் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்த நிலையில், திடீரென ஆவேசத்துடன் தர்கா முன் இருக்கும் தூணை நோக்கி மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். இதனைத் தடுத்த போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கமிஷனர் "இங்கு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அரசு சார்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டுள்ளது. எனவே இங்கு தீபமேற்ற அனுமதியில்லை. மீறிச் சென்றால் கைது செய்வோம்'' என்றார். இதை ஏற்காத ராம ரவிக்குமார், "இன்று தான் நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. நாங்கள் ஏன் நாளை வரை காத்திருக்க வேண்டும்?'' என்றார். இத னிடையே இந்து முன்னணியினர் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்தபடி, தடுப்புக்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளை தள்ளிவிட்டு முன்னேறினர். அதில் இரண்டு போலீசா ருக்கு காயம் ஏற்பட, தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்து அமைப்புகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை தீரும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் அறிவித்தார். இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து ஹைகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/tkundram2-2025-12-05-10-36-25.jpg)
வியாழனன்று (4-12-2025) முதல் வழக்காக நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிபதியின் உத்தரவு குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை. தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக மத நல்லிணக்க சட்டம் -ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பத்துப்பேரோடு மட்டுமே மனுதாரர் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர் ஒரு படையோடு சென்றார். போலீசாரின் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டு போலீசார் தாக்கப்பட்டுள்ளனர். மதப் பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/tkundram3-2025-12-05-10-37-25.jpg)
சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் உயர் நீதிமன்ற வளாகப் பாதுகாப்புக்காக மட்டுமே நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் சட்டம் -ஒழுங்கு பணி மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. மனுதாரருக்கு தீபம் ஏற்றுவதைத் தாண்டி மறைமுக உள்நோக்கம் உள்ளது. அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை தேவை. அதேபோன்று திருப் பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஒரு இடத்தில் தான் கடந்த 100 வருடமாக ஏற்றப்படு கிறது, இரண்டு இடத்தில் அல்ல. இப்படி செய்வது வேண்டு மென்றே மத நல்லிணக்கதை கெடுப்பது போன்ற தாகும்' என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதேபோல மனுதாரர் ராம.ரவிக்குமார் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாமல் அரசு அதனை தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் 144 தடை உத்தரவை சுட்டிக்காட்டி, நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றவிடவில்லை எனவும் வாதங்களை முன்வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது குறித்து உத்தரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
__________________
பபாஸி தேர்தல்! சாதித்த ஆர்.எஸ். சண்முகம் அணி!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/tkundram4-2025-12-05-10-37-37.jpg)
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி பபாஸி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல், நீதியரசர்கள் வள்ளிநாயகம், அரிபரிந்தாமன் முன்னிலையில், தேர்தல் அலுவலர்கள் ராமநாதன், ஷாஜகான், புகழேந்தி ஒருங்கிணைக்க நடைபெற்றது. ஆர்.எஸ்.சண்முகம் தலைமையிலான அணியும், ஆர். நல்லதம்பி தலைமையிலான அணியும் தனித்தனியாக ஆட்களை நிறுத்தினர். இந்தத் தேர்தலில் ஆர்.எஸ். சண்முகம் தலைமையிலான அணி பெரும்பான்மை யுடன் வெற்றிபெற்றது. ஆர்.எஸ். சண்முகம் தலைமையிலான அணியில் மொத்தமுள்ள 20 நிர்வாகிகளுக்கான தேர்வில் 19 நிர்வாகிகளும், எதிரணியில் 1 நிர்வாகியும் வெற்றிபெற்றனர்.
கடந்த மூன்றாண்டுகளாக செயலாளராகத் தொடர்ந்துவந்த எஸ்.கே. முருகன் பபாஸி மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும், கணக்குவழக்குகளில் முறைகேடுகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டி பிரச்சாரம் மேற்கொண்டது. ஆர்.எஸ்.சண்முகம் அணி வெற்றிபெற்றிருப்பதன் மூலம், பபாஸி நிர்வாக நடைமுறையில் சிறப்பான மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.எஸ்.சண்முகம் அணியில் தலைவராக ஆர்.எஸ்.சண்முகம், துணைத்தலைவராக நக்கீரன் கோபால், செயலாளராக வயிரவன், இணைச்செய லாளராக நந்தன், பொருளாளராக வெங்கடாச்சலம், துணை இணைச் செயலாளர்களாக ஆர்.ஆடம் சாக்ரட்டீஸ், ராமு மற்றும் செயற்குழு உறுப்பினர் களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
-கீரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/05/tkundram-2025-12-05-10-36-06.jpg)