"ஹலோ தலைவரே, கர்நாடக முதல்வரின் பதவி ஏற்பு விழாவை காங்கிரஸ் கட்சி தடபுடலாக நடத்தி முடிச்சிருக்கு.''”

"ஆமாம்பா, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட அதில் கலந்துக்கிட்டாரே?”

cc

Advertisment

"ஆமாங்க தலைவரே, கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, இந்திய அரசியலில் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கு. வருகிற நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்ட முடிவாக இதைப் பலரும் கணிப்பதால், இந்த பதவி ஏற்புவிழாவை சிறப்பாகவே நடத்த காங்கிரஸ் திட்டமிட்டது. பா.ஜ.க. அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைமை அழைத்திருந்தது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் சோனியா அழைத்திருந்தார். அதேபோல் காங்கிரஸுடன் தோழமை பாராட்டும் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த லிஸ்ட்டின் படி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். எல்லோருடைய உற்சாகமான வாழ்த்துக்களுக்கும் நடுவில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.''”

"இந்த நிகழ்ச்சியில் கமலுக்கு உரிய வரவேற்பு தரப்படலைன்னு அவர் தரப்பு குறைபட்டிருக்குதே?''”

cc

Advertisment

"நிகழ்ச்சியில் பெரும் எதிர்பார்ப்போடு கலந்துகொண்ட கமலை, கர்நாடக காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா, சிவக்குமார், பரமேஸ்வர் உள்ளிட்ட எவரும் கண்டு கொள்ளவில்லை. அவர் பக்கம் பார்வையைத் திருப்பு வதைக் கூட அவர்கள் அனைவரும் தவிர்த்துவிட்ட னர். இதில் கமல் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். அவருக்கு அங்கு கிடைத்த ஒரே ஆறுதல், மு.க.ஸ்டா லின் அவர் அருகே அமர்ந்தபடி, அவருடன் பேசிக்கொண்டிருந்தது மட்டும்தான். கமல் மீது காங்கிரஸ் தலைவர்களுக்கு என்ன வருத்தம்னு விசாரித்தபோது, பிரச்சாரத்துக்கு வருவதாக ஒத்துக்கொண்டு, கடைசி நேரத்தில் கமல் நழுவியதை அவர்களால் எளிதில் மறக்க முடியவில்லை என்ற பதிலே கிடைக்கிறது.''”

"இந்த விழாவில் தி.மு.க.வினரை சங்கடப்படுத்தும் நிகழ்வும் நடந்திருக்குதே?''”

’"பதவி ஏற்பு விழாவிற்காக பெங்களூர் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தரப்பில் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. அதில் எந்தக் குறைவும் இல்லை. பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும், மேடையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பா.ஜ.க.வுக்கு எதிரணித் தலைவர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து, தங்கள் கைகளை உயர்த்தும் வைபவம் அரங்கேறி யது. அதில், ராகுல் காந்தியின் கைகளைப் பற்றியிருந்தார் ஸ்டாலின். அப்போது திடீரென அந்த இடத்துக்கு வந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் துணை முதல்வருமான சிவக்குமார், "பிரியங்கா, உங்கள் பின்னால் இருக்கிறார். அவர் முன்னால் வரட்டும். நீங்கள் பின் வரிசைக்குச் செல்லுங்கள்' என்று ஸ்டாலினிடம் சொல்ல, ஸ்டாலின் உடனே பின் வரிசைக் குச் செல்ல நேர்ந்தது. இதை கண்ட தி.மு.க.வினர், காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்தார்கள். இந்த சம்பவம் சோசியல் மீடியாக்களிலும் சர்ச்சையானது. இருந்தும், அந்த நேரத்து நெருக்கடி என்று நினைத்து, ஸ்டாலின் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.''”

"கர்நாடகம் கொடுத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து பா.ஜ.க.வின் தேசியத் தலைமை இன்னும் எழவில்லையேப்பா?.''”

vv

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. தலைமை இந்தத் தோல்விக்கு ஒரு விளக்க அறிக்கை கூட கொடுக்கும் மன நிலைக்கு இன்னும் வரவில்லை. கடைசி நேர பிரச்சாரக் களத்தில், தானே ஆஜராகி, கர்நாடக மாநிலம் முழுக்கச் சுற்றிச் சுற்றி வந்தும் கூட இப்படியொரு தோல்வி ஏற்பட்டதை, பிரதமர் மோடி, தனக்குக் கிடைத்த அவமானமாகவும் சங்கடமாகவும் உணர்கிறாராம். அதே மாதிரி, யாராலும் வெற்றிகொள்ள முடியாத தலைவராக மோடி யைப் பார்த்து வந்த பெரும்பாலான பா.ஜ.க.வினர், இந்த ரிசல்ட் டால் திகைத்துப் போயிருக்கிறார்களாம். இதே எதிர்ப்பலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்தியா முழுக்கப் பரவினால் என்ன செய்வது என்று, ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் இப்போது மிரண்டு போயிருக்கிறதாம். அதனால்தான் இதிலிருந்து அனை வரின் கவனத்தையும் திசை திருப்ப, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கள் செல்லாது என்கிற அறிவிப்பை திடீர்னு வெளியிட்டு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு.''”

"தேர்தல் தோல்வியால், கர்நாடக மாநில பா.ஜ.க.வில் விரிசல் ஏற்படலாம் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, கர்நாடக மாநிலத்தைப் பொறுத்த வரை அங்கே இப்போதே கோஷ்டி யுத்தத்தால் பலவீனமாகி இருக்கிறது. குறிப்பாக, அங்கிருக்கும் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க.வின் சீனியர் தலைவர்களை, அம்மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக இருந்த பி.எல்.சந்தோஷும் அண்ணாமலையும் மதிக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டு அங்கே இருந்து வந்தது. இந்த நிலை யில் தேர்தல் நேரத்தில் இந்த இருவரும் தன்னை அவமானப்படுத்தும் விதத்திலேயே அலட்சிய மாக செயல்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டை எடியூரப்பா எழுப்பி வரு கிறார். பா.ஜ.க.வில் களம் கண்ட தங்கள் ஆதரவாளர் களில் 30 பேருக்கு மேல், வெற்றி பெற்றிருப்பதால், தன் மகன் விஜயேந்திரா வைத்தான் அங்கே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை இப்போது பா.ஜ.க. மேலிடத்திற்கு வைத்திருக் கிறாராம் எடியூரப்பா. இதற்கு பா.ஜ.க. மேலிடம் சம்மதிக்காத பட்சத்தில், தனிக்கட்சி தொடங்கும் முடிவிலும் இவர் தரப்பு இருக் கிறது என்கிறார்கள், நிலவரம் அறிந்தவர்கள். கர்நாடக முடிவுகள் தேசிய அளவில் பா.ஜ.க. தரப்பில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதால், தேசிய அளவிலேயே பா.ஜ.க. பிளவைச் சந்தித்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்கிறார்கள்.''”

"தமிழக பா.ஜ.க.விலும் சலசலப்பு தெரியுதே?''”

"தமிழக கள்ளச் சாராய சாவுகளை கண்டித்து பா.ஜ.க.வின் மகளிர் அணியினர் 20 ஆம் தேதி மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அண்ணாமலை தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் பேரையாவது திரட்டும்படி கட்சி நிர் வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார். எனினும் 300 பேர் கூடத் திரளவில்லை. ஆர்ப் பாட்டம் மதியம் 3 மணிக்கு என்று அறிவிக்கப் பட்டதால், வந்தவர்களை அந்தக் கடும் வெயிலில் நிறுத்தி வைக்கவே நிர்வாகிகள் படாதபாடு பட்டனர். ஆனால் தலைமை ஏற்கவேண்டிய அண் ணாமலையோ, அருகில் இருந்த ஐந்து நட்சத்திர விடுதியான அடையாறு கிரவுன் ப்ளாசாவில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். கூட்டம் கலைவது குறித்து அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே, ஐந்து மணி வாக்கில் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார் அண்ணாமலை. இதில் ஐந்து மகளிர் அணி மாவட்டத் தலைவர்களே, தலையைக் காட்டவில்லை என்பதை அறிந்த அண்ணாமலை, அவர்களை நீக்கவேண்டும் என்று எகிறி இருக்கிறார். ஆனால் கேசவ விநாகமோ, அப்படியெல்லாம் உங்கள் இஷ்டத் துக்கு யாரையும் நீக்க முடியாது என்று சொல்லி, அண்ணாமலையை டென்ஷன் ஆக்கிவிட்டாராம்.''

"அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அமலாக்கத் துறை குறி வைத்திருப்பதாகத் தகவல் வருதே?''”

dd

“"அதுபற்றியும் சொல்றேங்க தலைவரே, அண்மையில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் அது தொடர்புடைய 8 இடங் களில் அதிரடி ரெய்டை நடத்தியது வருமான வரித்துறை. காரணம், லைக்கா தயாரித்த பொன்னியின் செல்வன் 2லின் தமிழகத்துக்கான விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருந்தது. இந்த நிறுவனத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி வெளியேறிவிட்டது போல் காட்டப்பட்டாலும், அன் அஃபிஷியலாக அது அவரது கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறதாம். இந்த நிலையில், வரி ஏய்ப்பு விவகாரம் குறித்து கிடைத்த புகார்களின் அடிப்படையில், லைக்கா மீது ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது லைக்காவுக்கும், ரெட்ஜெயன்ட்டுக்கு மான பணப் பரிவர்த்தனைத் தொடர்புகள் குறித்த முழு ஆவணங்களை யும் அதிகாரிகள் கைப் பற்றினர். இதன் அடிப் படையில், ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான தி.நகர் தொழிலதிபரின் மகனான அர்ஜுன் துரைக்கும் ரெட் ஜெயண்ட்டுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகளையும் ஆதாரங் களோடு அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலமும் புதிய சிக்கல்கள் உதயநிதியை நோக்கி நகர்ந்து வருகின்றன.''”

"இந்த விவகாரத்தில் பா.ம.க.வின் சீனியரான ஜி.கே.மணியின் மகன் பெயரும் பரபரப்பாக அடிபடுகிறதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, லைக்கா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பா.,ம.க. சீனியர் தலைவரான ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் இருக்கிறார். இவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியபோது, ரெட்ஜெயண்ட் மற்றும் லைகா நிறுவனம் ஆகியவற்றுக்கான தொடர்புகள் குறித்தும், இன்னும் சில முக்கிய விபரங்கள் குறித் தும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக் கிறாராம். தமிழ்க்குமரனின் வாக்குமூலம் உதய நிதிக்கு மறைமுக நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, இந்த லைகா, ரெட்ஜெயண்ட் இடையே நடந்த சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குறித்த விவரங்களும் அவற்றில் உதயநிதிக்கான தொடர்பு களும் கண்டறியப்பட்டுள்ளனவாம். இந்த விபரங்கள், அமலாக்கத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் இதுகுறித்த ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டி ருக்கின்றன. அதனால் அமலாக்கத்துறை, ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்புவதற் கான திட்டத்தில் இருக்கிறது. லைக்கா மீதான ரெய்டு என்பதே உதயநிதிக்கு செக் வைக்கத்தான் என்கிறார்கள் டெல்லி அதிகாரிகள். ஆனாலும் ரெட் ஜெயண்ட் தரப்போ, ’எங்கள் கணக்கு வழக்குகள் எல்லாம் முறையாகவும் சரியாகவும் இருக்கின்றன’ என்று சொல்லிவருகிறது.''”

"நாடாளுமன்றத் தேர்தலில் தென்மாவட்டங் களின் மீது அதிக கவனத்தை எடப்பாடி குவிக்கிறார் என்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, ஓ.பி.எஸ், தினகரன், சசிகலா ஆகியோர் தனக்கு எதிராக அரசியல் செய்துவரும் நிலை யில், அவர்களுக்கு செக் வைக்கும் விதத்தில், அவர்களின் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகம் உள்ள தென் மாவட்டங் களில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்கிற வியூகத்தில் எடப்பாடி இருக் கிறார். இதற்காக புதிய மா.செ.க் களை அங்கே நிய மிக்கவும் முடிவு செய்திருக்கிறார். குறிப்பாக, தென் காசி மாவட் டத்தை, சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டமாகவும், மீதமுள்ள கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை தெற்கு மாவட்டமாகவும் பிரித்து, இதில் வடக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச் சர் ராஜலெட்சுமியையும், தெற்கு மாவட்டத்திற்கு கடையநல்லூர் எம்.எல்.ஏ. கிருஷ்ணமுரளியையும் மா.செ.க்களாக அமரவைக்கப் போகிறாராம். தேவேந்திர வேளாளர் சமூகத்தினரின் வாக்குகளை யும் கணிசமாகப் பெறவேண்டும் என்பதற்காகத் தான் அவர் ராஜலட்சுமிக்கு மா.செ. பொறுப்பைத் தர இருக்கிறாராம். இப்படி கவனமாக தென் மாவட்டங்களில் தன் காய்களை எடப்பாடி நகர்த்த இருக்கிறாராம்.''”

"இந்த தி.மு.க. ஆட்சியிலும் மன்னார்குடித் தரப்பு காவல்துறையில் கோலோச்சுகிறதே?''”

ff

"உண்மைதாங்க தலைவரே, அதற்கு ஒரு உதா ரணம் சொல்கிறேன். சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெய் திவாகரன், கடந்த 25 ஆம் தேதி சென்னையிலுள்ள புகழ் பெற்ற பப் ஒன்றிற்குச் சென்று மது அருந்தி இருக்கிறார். அங்கே மதுரை ஜல்லிக்கட்டு அமைப்பை சார்ந்த பிரேமும் அவர் நண்பர்களுக்கும் மது அருந்த வந்திருக்கிறார்கள். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இரண்டு இளம் பெண்களை மையப்படுத்தி, ஜெய் திவாகரனுக் கும், பிரேம் தரப் பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட, பிரேம் தரப்பு, அங்கே கேமரா இல்லாத இடத்திற்கு ஜெய்யை இழுத்துச் சென்று, அடித்துத் துவைத்து உடம்பெங் கும் ரத்தக்கோடு போட்டுவிட்டு, எஸ் கேப் ஆனது. இந்தத் தகவல் தெரிந்து கொ தித்துப்போன திவாகரன், மதுரை கூலிப்படை நப ரான பாய்ஸ் மணிக்கு தகவல் கொடுக்க, அவரது டீம் , சென்னையிலிருந்து மதுரை வந்து கொண்டிருந்த பிரேமை விரகனூர் பைபாஸிலேயே மடக்கியது.'' ”

"பிறகு?''”

"அங்கேயே பிரேமை பதிலுக்கு அடித்துத் துவைத்து அவர் உடம்பிலும் ரத்தக் கோடுகளைப் போட்டு, உடைகளையும் உருவியது. மேலும் இதை வீடியோ காலில் திவாகரனுக்குக் காட்டி, அதற்கான கூலியையும் அவரிடம் இருந்து அந்த கும்பல் பெற்றுக்கொண்டது. மேலும் அந்த கும்பல், பிரேம் அணிந்திருந்த 34 சவரன் நகையைப் பறித்துக்கொண்டதோடு, அவர் தந்தையைத் தொடர்புகொண்டு, 10 லட்ச ரூபாய் கொடுத்தால்தான் உங்கல் மகனை உயிரோடு விடுவோம் என்றும் மிரட்டியதாம். இதற்கிடையே அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடிய பிரேம், மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்துக்குச் சென்று, எஸ்.ஐ. வெள்ளத்துரையிடம் சகலத்தையும் சொல்லி முறையிட, திவாகரன் தரப்பு மீது புகார் என்றதும் அதை வாங்க மறுத்திருக்கிறார் வெள்ளத்துரை. இதனால் பிரேம் தரப்பு அங்கே இங்கே என முட்டிமோதிய பிறகே, திவாகரன் மற்றும் பெண் விவகாரத்தை மறைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திவாகரனுக்கு அவ்வளவு செல்வாக்கா?''

"மன்னார்குடித் தரப்பு இந்த தி.மு.க. ஆட்சியிலும் முக்குலத் தோர் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் துணையோடு, தனி சாம் ராஜ்யத்தை நடத்தி வருகிறதாம். தமிழக அரசின் அனைத்துத் துறை யிலும் அவர்களுக்கு ஆட்கள் இருக்கிறார்களாம். அதனால் மன் னார்குடித் தரப்பு, தற்போதும் நினைத்ததையெல்லாம் சாதித்துவரு கிறது என்கிறார்கள். அந்த வகையில்தான் மதுரை மாட்டுத்தாவணி எஸ்.ஐ,யான வெள்ளத்துரை, திவாகரன் தரப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த மதுரை பாய்ஸ் மணி தரப்புக்கு ஜாமீன் கிடைப்பதற்கு வசதியாக, அவர்கள் மீது இதற்கு முன் வழக்குகள் எதுவும் இல்லை என்று பொய் ரிப்போர்ட் கொடுத்தாராம்.''”

"முதல்வரின் மகனான அமைச்சர் உதயநிதியின் பரிந்துரைகள், காவல்துறையில் எடுபடவில்லை என்கிறார்களே?''”

"அப்படிச் சொல்லவிட முடியாதுங்க தலைவரே. காவல்துறை யைப் பொறுத்தவரை, அத்துமீறிய சிலரை டிரான்ஸ்பர் செய்யவேண் டும் என்பது அமைச்சர் உதயநிதியின் விருப்பமாக இருக்கிறதாம். குறிப்பாக ஜெ.விடம் செக்யூரிட்டி அதிகாரியாக இருந்த, இப்போ தைய திருவாரூர் எஸ்.பி. சுரேஷ், ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது அவருக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கர், லஞ்ச ஒழிப்புத்துறையில் எடப்பாடிக்கு மிகவும் சாதகமாக நடந்துகொண்ட, இப்போதைய மதுவிலக்குத்துறை ஐ.ஜி. ராதிகா, எடப்பாடியின் மற்றொரு விசுவாசியான, தாம்பரம் சி.சி.பி.யில் இருக் கும் சுப்புலட்சுமி, அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் பவர்ஃபுல்லாக இருந்த, இப்போதைய சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. சங்கர் உள்ளிட்ட வர்களை மாற்றவேண்டும் என்பது உதயநிதியின் எண்ணமாம். ஆனால் இதை உடனடியாக செய்யத் தயங்கிய முதல்வர் ஸ்டாலின், ஜூனில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். அதேபோல் இப்போதைய சாராயச் சாவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய மதுவிலக்கு அதிகாரிகள் பலரையும் விட்டுவிட்டு, அந்தத் துறையில் உளவுப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த மஞ்சுளா வைப் பலிகடாவாக மாற்றி இருப் பது, காவல்துறையிலேயே சல சலப்பை ஏற்படுத்திவருகிறது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கொடநாடு விவகாரத்தில் திடீர்த் திருப்பமாக, ஒரு காலத் தில் மணல் பிசினசில் கொடி கட்டிப்பறந்த ஆறுமுகசாமியின் மகன் செந்திலை அதிரடியாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது ஸ்பெ ஷல் டீம். இது பலத்த அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. போயஸ் கார்டனோடு நெருக்கமான நட்பில் இருந்த இந்த ஆறுமுக சாமிதான், கொடநாடு பங்களா வுக்கான செலவையே ஜெ.வுக் காகச் செய்தவர் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.''