"1991க்கு பிறகு இது வரை கூட்டணிக் கட்சியினரை இங்கு போட்டியிட வைத்து நாம்தான் வெற்றிபெற வைக்கின்றோம். கூட்டணி தர்மத் திற்காக நாம் ஆதரித்தது காங் கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க. வாக இருந்தாலும், அவர்களை வெற்றிபெற வைத்திருக்கின்றோம். நம்முடைய தயவால் வெற்றி பெற்று வந்தவர்கள் நம்மைச் சீண்டுவதில்லை. மாறாக நமக்கு எதிராக செயல்படுகின்றார்கள். தி.மு.க. மாநகராட்சியில் உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் தலை யீடு என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தமுறை இந்த தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக் குங்கள், வென்று காட்டுகின் றோம்'' என தி.மு.க. தலைமைக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகின்றனர் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலுள்ள தி.மு.க.வினர்.
ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி, இரண்டு பேரூராட்சி கள் மற்றும் காரைக்குடி, தேவகோட்டை தாலுகா பகுதி களில் 345 பூத்களைக் கொண்டது காரைக்குடி சட்டமன்றத் தொகுதி. இதில் முத்தரையர், பட்டியலினத்தோர், முக்குலத் தோர், யாதவர், உடையார், வல்லம்பர், பிள்ளைமார் வாக்கு களும் தொகுதியில் விரவிக்கிடக்க, நகரத்தார்களின் வாக்குகள் ஆங் காங்கே சிதறியுள்ளது குறிப்பிடத் தக்கது. 2001ஆம் ஆண்டில் நடை பெற்ற சட்டமன்ற தேர்தல் தவிர, அனைத்துத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. போட்டியிட்டு இங்கு வலுவான கட்சியாக இருக்கின்றது. இதேவேளையில், 1991க்கு பிறகு கூட்டணிக் கட்சியினருக்கு மட்டும் தொகுதியை தாரை வார்த்துவிட்டு, அவர்களை ஏற்றி வைத்த ஏணியாய் இன்றுவரை அமைதிகாத்து வருகின்றது தி.மு.க. என்பது கடந்த கால வரலாறு.
"தி.மு.க.விற்கு சாதகமான தொகுதி இது. இங்கு தி.மு.க.விற்கு என்னென்ன சாதகம்?, தி.மு.க. ஆட்சியில் பயனடைந்தவர் களின் பட்டியல், மாநகராட்சியின் சாதனைகள் மற்றும் புதிய வாக்காளர்களின் மனநிலை உள்ளிட்டவற்றை கணக்கிட்டு, இந்த தொகுதி தி.மு.க.விற்குத்தான் வேண்டும். தி.மு.க. இங்கு எளிதாக வெற்றி பெற்றுவிடும். அது போக, கூட்டணிக் கட்சியினருக்காக நாம்தான் மெனக்கெடுகிறோம். போட்டியிடுபவர்கள் மெனக்கெடுவதில்லை. எங்களை ஜெயிக்க வைப்பது உங்களின் வேலை என பொறுப்பு துறப்பை எடுக்கின்றார்கள். கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்பதைத் தாண்டியும், பணத்தையும் நாம்தான் செலவழிக்கின்றோம். வெற்றி பெற்று வந்தவர்கள் அவர்கள் சார்ந்த கட்சிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றார்கள். "தொகுதிக்கு இது தேவை, சட்டமன்றத்தில் பேசுங்களேன்' என்றால் மௌனியாகிவிடுகின்றார்கள். போதாக்குறைக்கு தி.மு.க. உட்கட்சி விவகாரத்திலும் தலையிடுகின்றார்கள். மாநகர மேயர் தி.மு.க.வின் முத்துதுரை யை மாற்ற தீர்மானம் போடப்பட்ட பின்னணியில், தி.மு.க.வால் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியும் இருந்தது இந்த தொகுதி அறிந்ததே. நம் தயவில் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நமக்கு எதிராக செயல்படுவதை ரசிக்க முடியவில்லை. நம்முடன் கூட்டணியிட்ட அனைவருமே தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கின்றனர். அந்தளவிற்கு தி.மு.க. இங்கு பலம். நாம் ஏன் இந்த தொகுதியில் போட்டியிடக்கூடாது. தயைசெய்து கூட்டணிக்கு ஒதுக்குவதை தவிர்த்துவிட்டு, தி.மு.க.விற்கே காரைக்குடி தொகுதியை ஒதுக்குங்கள்'' என தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் காரைக்குடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தி.மு.க.வினர். இது மனுவாகவும் தலைமைக்கு அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க ஒன்று.
இது இப்படியிருக்க, காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டால், சிவகங்கை மாவட்ட தி.மு.க.வின் துணைச் செயலாளரான ஜோன்ஸ் ரூஸோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான நாகனி செந்தில்குமார், காரைக்குடி கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரான செந்தில்குமார், தற்பொழுதைய மாநகர மேயர் முத்துதுரை மற்றும் மறைந்த எஸ்.எஸ்.தென்னரசுவின் உறவினரான வல்லபாய் ஆகியோர் வேட்பாளர் களத்தில் இருப்பது காணக் கூடிய ஒன்று.
-வேகா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/19/karaikudi-2025-12-19-11-13-36.jpg)