Advertisment

கொடநாடு மர்மம்! வாய் திறக்கவிடாத போலீஸ்!

kk

கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் குற்றவாளியான சயானும், இரண்டாவது குற்றவாளியான மனோஜூம் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டபோது... இந்த கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் சஜீவனுக்கு முக்கிய பங்கு உண்டு.

Advertisment

dd

""அடுத்த வாய்தா 27-ந் தேதிக்கு வருகிறது. அன்னைக்கு வரும்போது சஜீவனின் ரோல் என்னவென்பதை சொல்கிறேன்'' என்றான்

கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் குற்றவாளியான சயானும், இரண்டாவது குற்றவாளியான மனோஜூம் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டபோது... இந்த கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் சஜீவனுக்கு முக்கிய பங்கு உண்டு.

Advertisment

dd

""அடுத்த வாய்தா 27-ந் தேதிக்கு வருகிறது. அன்னைக்கு வரும்போது சஜீவனின் ரோல் என்னவென்பதை சொல்கிறேன்'' என்றான் மனோஜ். அதற்குப் பிறகு கொடநாடு விவகாரம் சூடு பிடிக்க... 27ந் தேதியை நோக்கி இருந்தன அத்தனை ஊடகங்களும்.

Advertisment

27- ந் தேதி 11 மணிக்கு சயான், மனோஜ் மட்டுமல்ல... பிணையில் வெளியே இருந்து கொண்டு கோர்ட்டில் ஆஜராகாத 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அனைத்து குற்றவாளிகளும் ஆஜர்படுத்த வேண்டும் என கோர்ட் போலீசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கேரளாவைச் சேர்ந்த மனோஜ் சாமி என்பவனையும், கேரளாவில் இன்னொரு வழக்கில் சிறையிலிருக்கும் சம்சீர் அலியை மட்டுமே கைது செய்து தாமதமாய் கூட்டி வந்தனர் போலீசார். இதனால் வழக்கு விசாரணை மதியம் 3 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கோவை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த சயானும், மனோஜூம் அதே நேரத்திற்கு கூட்டி வரப்பட்டனர். மீடியாக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தன. ஆனால், போலீசார் சயானையும், மனோஜையும் பேசவிடக் கூடாது என்பதில் தீவிரமாய் இருந்தார்கள். அவர்கள் வந்த வேனைச் சுற்றியும் போலீஸ் நின்றுகொள்ள, கோர்ட்டிற்குள் 4 பேரும் அழைத்து செல்லப்பட்டார்கள்.

பின்னர் நீதிபதி, ஆஜராகாத 6 பேரையும், இப்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் செப்டம்பர் 3-ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

அதற்கு பின்னால் கோர்ட்டை விட்டு வெளியே வந்த சயானுடனும், மனோஜ் உடனும் பேச முயன்ற மீடியாக்களை நெருங்க விடவில்லை போலீசார்.

போலீஸ் உங்களுக்கு டார்ச்சர் செய்கிறதா? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்ட போது... மைக் வாங்க வந்த சயானையும், மனோஜையும் தள்ளிக் கொண்டு போய் வேனில் ஏற்றி வேகமாய் பறந்தது போலீஸ் வேன்.

பத்திரிகையாளர்களை நெருங்க விடாமல்,போலீசார் இந்த கடும் எதிர்ப்பு காட்டியது சஜீவனுக்காகத்தான் என்கிறது நாமறிந்த கறைபடியாத ஒரு காக்கி சட்டை.

-அ.அருள்குமார்

nkn020920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe