இந்தியாவின் முதல்முறையாக நோயறிதல் வைரலாஜி துறை யை தொடங் கியது வேலூர் சி.எம்.சி மருத் துவக்கல்லூரி. அந்த மைக்ரோ பயாலஜி துறை யின் தலைவராக இருந்தவர் ஜேக் கப் ஜான். அமெ ரிக்கா சென்று வைரலாஜி பிரி வில் ஆய்வு பட் டம் பெற்றவர். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வைராலஜி பிரிவின் தலைவராக, இந்திய அரசின் போலியோ ஒழிப்பு ஆலோசனை குழு தலைவராக, இந்தியாவின் நோய் தொற்று தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோ சனை குழு தலைவராக, லான்சென்டின் சர்வதேச ஆலோசனைக்குழு உறுப்பினர், உலக சுகாதார நிறுவனத் தின் தென்கிழக்காசிய நோய்தடுப்பு தொழில்நுட்பக் குழு உறுப்பினர் என பல பதவிகள் இருந்தவர். தற் போது வேலூரில் வசிக்கிறார். கொரோனா வைரஸ் குறித் தான நேர்காண லுக்கு அரசு கட்டுப்பாடுகளை மதித்து, மின்னஞ்சலில் பதில் அளித்தார்.
நக்கீரன் : கொரோனா வைரஸ் சீனா வால் உருவாக் கப்பட்டது என்று அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. அமெரிக்கா பரப்பிய வைரஸ் என சீனா குற்றம்சாட்டுகிறது. வைரஸ் உருவாக்கி, அதனை பரப்பி மனிதகுலத்தை அழிக்க முடியுமா?
டாக்டர் ஜான் : சீனா வில் வுஹானில் உள்ள புதிய வைராலஜி நிறுவனம் பல வைரஸ்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறது. வவ்வால்கள் வழியாக பரவியது எனச்சொல்வது தவறானது. வுஹான் விலங்கு சந்தை வௌவால்களை விற்க வில்லை. பிறகு எப்படி வவ்வால்கள்மீது குற்றம்சாட்ட முடியும். அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் முழு பாதுகாப்பு பின்பற்
இந்தியாவின் முதல்முறையாக நோயறிதல் வைரலாஜி துறை யை தொடங் கியது வேலூர் சி.எம்.சி மருத் துவக்கல்லூரி. அந்த மைக்ரோ பயாலஜி துறை யின் தலைவராக இருந்தவர் ஜேக் கப் ஜான். அமெ ரிக்கா சென்று வைரலாஜி பிரி வில் ஆய்வு பட் டம் பெற்றவர். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வைராலஜி பிரிவின் தலைவராக, இந்திய அரசின் போலியோ ஒழிப்பு ஆலோசனை குழு தலைவராக, இந்தியாவின் நோய் தொற்று தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோ சனை குழு தலைவராக, லான்சென்டின் சர்வதேச ஆலோசனைக்குழு உறுப்பினர், உலக சுகாதார நிறுவனத் தின் தென்கிழக்காசிய நோய்தடுப்பு தொழில்நுட்பக் குழு உறுப்பினர் என பல பதவிகள் இருந்தவர். தற் போது வேலூரில் வசிக்கிறார். கொரோனா வைரஸ் குறித் தான நேர்காண லுக்கு அரசு கட்டுப்பாடுகளை மதித்து, மின்னஞ்சலில் பதில் அளித்தார்.
நக்கீரன் : கொரோனா வைரஸ் சீனா வால் உருவாக் கப்பட்டது என்று அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. அமெரிக்கா பரப்பிய வைரஸ் என சீனா குற்றம்சாட்டுகிறது. வைரஸ் உருவாக்கி, அதனை பரப்பி மனிதகுலத்தை அழிக்க முடியுமா?
டாக்டர் ஜான் : சீனா வில் வுஹானில் உள்ள புதிய வைராலஜி நிறுவனம் பல வைரஸ்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறது. வவ்வால்கள் வழியாக பரவியது எனச்சொல்வது தவறானது. வுஹான் விலங்கு சந்தை வௌவால்களை விற்க வில்லை. பிறகு எப்படி வவ்வால்கள்மீது குற்றம்சாட்ட முடியும். அந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் முழு பாதுகாப்பு பின்பற்றப் படவில்லை என வேண்டுமானால் குற்றம் சாட்டலாம். இது எப்படி உருவானது, எப்படி பரவியது என்பது இன்னும் கண்டறியப் படவில்லை. ஒரு வைரஸால் மனிதகுலத்தை அழிக்க முடியாது.
நக்கீரன் : 2 லட்சம் மக்கள் பலியாகியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் உருவாக்கும் நோயை தடுக்கும் தடுப்பு மருந்து, தடுப்பூசி போன்றவை கண்டறிவதில் ஏன் தாமதம்?
டாக்டர் ஜான் : தடுப்பூசி பகிர்வு ஒரு செய்முறையைப் பின்பற்றாது. முதலில் முக்கியத்துவம் வாய்ந்த வைரஸ் ஆன்டிஜென்கள் கண்டறியப்பட வேண்டும். ஆன்டிஜெனுடன் பொருந்தக்கூடிய ஆன்டிபாடியைத் தூண்டு கிறதா என்பதைப் பார்க்க ஆய்வக விலங்குகளில் சோதிக்கப்பட வேண்டும். பின்னர் அது நோயைப் பெறுவதிலிருந்து தனிநபரைப் பாதுகாக்கும் என்பதை நிரூபிக்க வேண்டும். இவை அனைத்தும் முடிய நேரம் எடுக்கும். முதலில் அது பாதுகாப்பான மருந்து என்பதை நிரூபிக்க ஒரு சில நபர்களுக்கு வழங்கப்படுகிறது. பின்னர் நோயெதிர்ப்பு சக்தியை கண்காணிக்க / அளவிட அதிக நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இறுதியாக அந்த தடுப்பூசி மக்களை பாதுகாக்கிறதா என்பதைப் பார்க்க வைரஸ் பரவியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதெல்லாம் நடக்க நேரம் எடுக்கும். பல்வேறு மருத்துவ அறிவியல் குழுக்கள் வெவ்வேறு ஆன்டிஜென்கள் அல்லது அணுகுமுறைகளை முயற்சிக்கின்றன.
தற்போதைய நிலையில், எச்.ஐ.வி நோய்க்கு தரப்படும் எதிர்ப்பு மருந்தான ரெமெடிசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு தரப்படுகிறது. இது ஓரளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வழி பல்வேறு மூலக்கூறுகளை உருவாக்கி கொரோனா வைரஸ்சை அழிக்க, எதிர்த்து போராடுவதற்கான மருந்தை உரு வாக்கி சோதிப்பது. இதற்கு பெரும் தொகை செலவாகும் மற்றும் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. எனவே நிறுவனங்கள் வெற்றி வரும் என தெரிந்தால் மட்டுமே மருந்து கண்டுபிடிக்க செலவு செய்யும், நம்பிக்கையின்றி முதலீடு செய்யாது.
நக்கீரன் : அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகமாகவுள்ளது, இந்தியாவில் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது, பரவும் தன்மையும் மிக குறைவாக உள்ளதாக தெரிகிறது, இதை எப்படி எடுத்துக்கொள்வது?
டாக்டர் ஜான் : இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக இல்லை. மற்ற நாடுகளைப் போல சரியாக எண்ணும் முறையும் இங்கு இல்லை. இந்தியாவில் இளம் வயதினர் அதிகம், அவர்களுக்கு நோயை தாங்கும் சக்தி அதிகம், இங்கு மூத்த குடிமக்கள் 10 சதவிதம் மட்டுமே. மற்ற நாடுகளில் நமது நாட்டைவிட சராசரி ஆயுட்காலம் சுமார் 10 ஆண்டுகள் அதிகம் மற்றும் மூத்த குடிமக்கள் 20 சதவிதத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதனால் அந்த நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக வுள்ளது. அந்த நாட்டு மக்கள் தொகையோடு நம் மக்கள் தொகையை கணக்கிடும் போது குறைவாக இருப்பது போல் தோன்றும், ஆனால் அப்படியல்ல.
நக்கீரன் : கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பற்றிய பயத்தை, விழிப்புணர்வை மக்களிடம் அதிகமாக உருவாக்கி யது அரசுகள். இப்போது பல மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அரசாங்கம் ஊரடங்கை தளர்த்தி யுள்ளது. மக்களிடமும் கொரோ னா பற்றி பயம் வெகுவாக குறைந் துள்ளது. இந்த அணுகுமுறை சரியா?
டாக்டர் ஜான் : நோயை காட்டி மக்களை பயமுறுத்துவதற்கு பதிலாக சரியான தகவல்களை மக்களுக்கு வழங்கியிருக்க வேண் டும். தொற்று இன்னும் 2-3 மாதங் களுக்கு தொடரும், அதன் பிறகு பரவுதல் வேகம் குறையும்.
நக்கீரன் : பிறந்து சில தினங் களே ஆன பச்சிளம் குழந்தைகள் கூட கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு குணமாகிறார்கள். ஆனால் நடுத்தர வயதுடைய சிலர் கொரோனா வந்து இறந்து போகிறார்கள். எதனால் இப்படி?
டாக்டர் ஜான் : பெரும் பாலான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அறிகுறிகள் இல்லா மல் அல்லது மிகவும் லேசான அறி குறிகளுடன் மட்டுமே உள்ளனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களுக்கு அறிகுறி வெளியே தெரியாமல் இருக்கலாம் என்பது என் அனுமானிப்பு. 65 வயதிற்கு மேல் உள்ளவர்களையே நோய் கடுமையாக தாக்குகிறது. நீண்ட நாள் இதயம், நுரையீரல், சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு கொரோனா வரும்போது, அவர்களின் நிலையை மோசமாக்குகின்றன, அதிக இறப்பு ஏற்படுகின்றன. இந்த வைரஸ் வித்தியாசமாக நடந்து கொள்கிறது.
நக்கீரன் : கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்கிறது அரசுகள். இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இதுபற்றி மருத்துவ ஆராய்ச்சி யாளராக எப்படி பார்க்கிறீர்கள்?
டாக்டர் ஜான் : இந்த வகை யான தொற்று நோய்களுக்கு இரண்டு கட்டங்கள் உள்ளன. முதல் தொற் றுக்கும், இரண்டாம் தொற்றுக்கும் இடையே கால இடைவெளி உண்டு. பலருக்கு தொற்று ஏற்பட்டு பரவும். நமக்கு அநேகமாக செப்டம்பர் மாதத்திற்குள் இரண்டாவது தொற்று பரவும். இரண்டாவது தொற்று பரவும்போது அது சாதாரண காய்ச்சலாக மாறியிருக்கும். காரணம், முதல் தொற்று உருவாகும்போதே பலருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். அதனால் இரண்டாவது தொற்று ஏற்படும் போது அது சாதாரண தொற்றாக மாறிவிடும். இதனால் அவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகமாட்டார்கள். நாம் பருவகால காய்ச்சலுடன் வாழ் கிறவர்கள். இதனால் கொரோனா வைரஸ் உள்வாங்கிக்கொண்டால் அது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்பதாலே கொரோனாவுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்பதே அதன் பொருள்.
நக்கீரன் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
டாக்டர் ஜான் : அனைத்து மக்களும் கையுறை, முகத்துக்கான மாஸ்க் அணிவதன் மூலமாக கொரோனா பரவுவதை வெகுவாக குறைக்கும். இது ஊரடங்குதலைவிட அதிகமாக வோ அல்லது சிறப்பாகவோ செயல்படும். யாரோ ஒருவரால் மாசுபடுத்தப்பட்ட எந்த வொரு பொருளையும் நாம் தொட்டபின்பு உடனடியாக கை கழுவுதல், முகத்தை கழுவுதல் வேண்டும். இப்படி செய்தாலும் 100 சதவிதம் நோயை தடுக்காது. தடுப்பூசி கண்டறியப் பட்டபின்பே இந்த நோயை முற்றிலும் தடுக்க முடியும்.
-து. ராஜா