Advertisment

உதயநிதி அணிவித்த கணையாழி! உற்சாகத்தில் உ.பி.க்கள்!

ss

வெள்ளம்போல் திரண்ட தொண்டர்கள், டிரோன் கேமரா ஜாலங்கள், பிரமாண்ட பைக் பேரணி என எதிர்பார்த் ததைப்போல் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடந்து முடிந்த தில் நெகிழ்ந்து போன உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. ஒ.செ.க் களுக்கு கணையாழி அணி வித்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

Advertisment

தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில், ஜனவரி 21ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த போது, கடந்த 2007ல் நெல்லையில் இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு, 17 ஆண்டுகள் கழித்து நடக்கும் மாநாடு என்பதோடு, உதயநிதியை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதால் கழக உ.பி.க்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. இதற்கான ஏற்பாடுகளை, மாநாடுகளை நடத்துவதில் கெட்டிக்காரரான அமைச்சர் கே.என். நேருவிடமே கட்சித் தலைமை ஒப்படைத்திருந்தது.

Advertisment

uu

இதற்காக, சேலத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலு

வெள்ளம்போல் திரண்ட தொண்டர்கள், டிரோன் கேமரா ஜாலங்கள், பிரமாண்ட பைக் பேரணி என எதிர்பார்த் ததைப்போல் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடந்து முடிந்த தில் நெகிழ்ந்து போன உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. ஒ.செ.க் களுக்கு கணையாழி அணி வித்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

Advertisment

தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில், ஜனவரி 21ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த போது, கடந்த 2007ல் நெல்லையில் இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு, 17 ஆண்டுகள் கழித்து நடக்கும் மாநாடு என்பதோடு, உதயநிதியை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதால் கழக உ.பி.க்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. இதற்கான ஏற்பாடுகளை, மாநாடுகளை நடத்துவதில் கெட்டிக்காரரான அமைச்சர் கே.என். நேருவிடமே கட்சித் தலைமை ஒப்படைத்திருந்தது.

Advertisment

uu

இதற்காக, சேலத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் 100 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்தனர். பந்தல் ஸ்பெஷலிஸ்ட்டான தஞ்சை சிவா, 9 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல் அமைத்திருந்தார். இந்த பிரமாண்ட பந்தலை, 'யுனிக் வேர்ல்டு ரெக்கார்டு' என்ற அமைப்பு, உலக சாதனையாகப் பதிவு செய்து சிவாவுக்கு சான்றிதழ் அளித்துள்ளது. மாநாட்டுப் பந்தலுக்குள் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் பொருத்தப்பட்டன. சைவ உணவுகளை சமைக்கும் ஆர்டர் அஷ்வின் நிறுவனத்திடமும், பிரியாணி உணவு வகைகள் சமைக்கும் பொறுப்பு திருச்சி ஹக்கிமிடமும் வழங்கப்பட்டது. தொண் டர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, தயிர் சாதம், சால்னா, ஸ்வீட் ஆகியவை ஒரு கண்டெய் னரில் போட்டு நேர்த்தியாக விநியோகிக்கப்பட்டன. பந்தலின் உள்ளே ஒவ்வொரு இருக்கையிலும் மஞ்சள் பையில் மிக்சர் பொட்டலம், ஜாம், சிலைஸ் பிரெட், கிரீம் பன், பிஸ்கட் பொட்டலம், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் போட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பணிகளை சேலம் மத்திய மா.செ. ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். மாநாட்டுக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் தங்கி ஓய் வெடுப்பதற்கு வசதியாக பெத்தநாயக்கன்பாளை யத்தில் ஆண்டவர் என்பவருக்குச் சொந்தமான பங்களாவை கேட்டு வாங்கியிருந்தனர். பொதுச்செயலாளர் துரை முருகன், அமைச்சர் களுக்கு அதே பகுதியில் தனித்தனி வீடுகளும், உதயநிதிக்கு மாநாட்டு மேடை அருகே தனியாக ஒரு வீடும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநாட்டில் மொத் தம் 25 தீர்மானங்களை வாசித்தார் உதயநிதி. அவற்றில் 13 தீர்மானங்கள் ஆளுநர் பதவியை அகற்றுதல், மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசு, ஈ.டி., சி.பி.ஐ., ஐ.டி.யை வைத்து மிரட்டும் பா.ஜ.க. என ஒன்றிய பா.ஜ.க.வுக்கு எதிரானவை.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியான இளை ஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்க. கடினமாக உழைத்து வெற்றியைச் சமர்ப்பிப்பார்கள்'' என்று கோரிக்கை வைத்ததற்கு பலத்த கைத்தட்டல் கிடைத்தது.

மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் குறித்து சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோரிடம் கேட்டபோது, "மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்த 300 ஏக்கர் பரப்பளவில் பல இடங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தோம். மாநாட்டு அரங்கத்திற்குள் ஒரு லட்சம் பேர் வரை அமர்ந்திருந்தனர். அரங்கத்திற்கு வெளியிலும், சாலையிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். இன்றைய காலகட்டத்தில் இத்தனை லட்சம் இளைஞர்களை வெற்றிகரமாகத் திரட்டியதே சாதனைதான்'' என்றனர்.

uu

மாநாடு முடிந்த மறுநாள், சேலம் ரேடிஸன் ஹோட்டலில் தங்கியிருந்த உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒ.செ.க்கள், பேரூர் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்பட 105 பேருக்கு தலா ஒரு பவுன் கணையாழி அணிவித்து கவுரவித்தார். கணையாழியில் மு.க.ஸ்டாலின் உருவப்படம் பொறிக்கப்பட்டி ருந்தது. எல்லோருடனும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். உதயநிதியின் இந்த அப்ரோச் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், "சேலத்தில் இளைஞரணி மாநில மாநாடு நடத்த வாய்ப்பு கொடுத்த தலைவ ருக்கும், அதை மிகச்சிறப்பாக நடத்திய அண்ணன் கே.என்.நேருவுக்கும் நன்றி. இந்த மாநாட்டிற்காக நான் உழைத்ததை விட கே.என்.நேருதான் அதிகமாக உழைத்தார். தலைவர் எந்த வழியில் மேடைக்கு வர வேண்டும், அவர் எங்கு தங்க வேண்டும் என எல்லாவற்றையும் அவரே முன்னின்று பம்பர மாக சுழன்று சுழன்று ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

அவரே நினைத்தாலும் இனி இப்படியொரு மாநாட்டை நடத்திவிட முடியாது. சேலம் மாவட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம். செல்வகணபதி ஆகியோரும் கடினமாக உழைத்தனர். இதற்காக அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்'' என மிகவும் நெக்குருகிப் பேசினார்.

இந்த மாநாட்டின் மூலம் கட்சியினருக்குக் கிடைத்துள்ள உத்வேகம், நாடாளு மன்றத் தேர்தல் வரை தொடரவேண்டும் என்பதே அறிவாலயத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

nkn310124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe