Advertisment

காஞ்சிபுரம் (தனி)! புழுதி பறக்கும் நான்குமுனைப் போட்டி!

ss

காஞ்சிபுரம் நாடாளு மன்றத் தொகுதியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர்(தனி), செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. கடந்த 2019-ன் கணக்குப்படி இங்கே ஆண் வாக்காளர்கள் 7,94,839 பேர், பெண் வாக்காளர்கள் 8.,24,316 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 163 பேர் என மொத்தம் 16,19,318 வாக்காளர்கள் தீர்ப்பெழுத இருக்கின்றனர்.

Advertisment

பெரும்பான்மையாக இங்கே வன்னியர்கள் மற்றும் தலித் சமூக

காஞ்சிபுரம் நாடாளு மன்றத் தொகுதியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர்(தனி), செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. கடந்த 2019-ன் கணக்குப்படி இங்கே ஆண் வாக்காளர்கள் 7,94,839 பேர், பெண் வாக்காளர்கள் 8.,24,316 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 163 பேர் என மொத்தம் 16,19,318 வாக்காளர்கள் தீர்ப்பெழுத இருக்கின்றனர்.

Advertisment

பெரும்பான்மையாக இங்கே வன்னியர்கள் மற்றும் தலித் சமூகத்தினர் இருப்பதால், வெற்றி தோல்வியை இவ்விரு சமூக வாக்குகளே தீர்மானிக்கும் நிலையில் இருக்கின்றன. இவர்களையடுத்து கணிசமான முதலியார் சமூக வாக்குகளும், இதர சமூக வாக்குகளும் இங்கே உள்ளன. விவசாயிகளின் வாக்கு வங்கிகளை கணிச மாகக் கொண்ட இந்தத் தொகுதியில் பன்னாட்டு தொழிற்சாலைகளும் ஐ.டி. நிறுவனங்களும் தறிக்கூடங் களும் அதிகமாக உள்ளன.

Advertisment

dd

இங்கு சிட்டிங் எம்.பி.யான செல்வம் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு காஞ்சிபுரம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில் அதிக ஆதரவு தெரிகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் முழு ஒத்துழைப்பும் கிடைத்தால் இவரது பலம் மேலும் அதிகமாகும். மேலும் மா.செ.க்களான அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சுந்தர் ஆகியோரின் பலமும் செல்வத்துக்கு பெரும் தெம்பைத் தருவதாக இருக்கின்றது.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பசை பார்ட்டி யான பெரும்பாக்கம் ராஜசேகரன், நம்பிக்கையோடு சுழன்றுகொண்டிருகிறார். அ.தி.மு.கவைப் பொறுத்தவரை இங்கே முக்கிய புள்ளிகள் போட்டியிட முன்வராத நிலையில், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவரான ராஜசேகரை களமிறக்கி யிருக்கிறது இலைத் தரப்பு.

அதேபோல் பா.ம.க.வில் உள்ள அதிருப்தி வாக்குகளையும் தன்பக்கம் இழுக்கமுடியும் என்று இவர் நம்புகிறார். திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் உள்ள மீனவ வாக்குகளையும் தனது பலமாக இவர் எண்ணு கிறாராம்.

பா.ம.க. சார்பில் இங்கே களமிறங்கியிருக்கும் ஜோதி வெங்கடேசன், தொகுதியில் உள்ள வன்னிய சமூக வாக்குகள் தனக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறார். ஆனால் அவர்கள் தரப்போ, பா.ஜ.க. கூட்டணியில் நிற்பதால் எங்களால் மனப்பூர்வ மாக ஆத ரிக்க முடியாது என்று கூறி வருகிறார்களாம்.

கடந்த முறை இந்தத் தொகுதியில் 62 ஆயிரம் வாக்குகளை வாங்கி மூன்றாம் இடத்தைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, தன் வேட்பாளராக சந்தோஷ்குமாரை இறக்கி யிருக்கிறது.

புராதனச் சிறப்பு மிக்க காஞ்சிபுரம் தொகுதியில், புழுதி பறக்க நான்கு முனைப் போட்டி நடந்து வருகிறது.

nkn030424
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe