"எங்க புதுவை மாநில இளைஞர்களின் சீரழிவுக்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலர்தான் காரணம்’’
இப்படிச் சொன்னவர் சாதாரண ஆள் இல்லை. புதுவை மாநிலத்தின் முதல்வரே அரசு நிகழ்ச்சியில் குற்றம்சாட்டியது திருவண்ணாமலை யில் பரபரப்பை பற்றவைத்துள்ளது.
புதுச்சேரி சமூக நலவாரியம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், பள்ளிக் கல்வித்துறை இணைந்து, பள்ளி ஆசிரியர்களுக்கு போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதற்காக இரண்டு நாள் கருத்தரங்கத்தை நடத்தியது. புதுச்சேரியில் பிப்ரவரி 19 - 20 ஆம் தேதிகளில் நடந்த இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு முதல்வர் நாராயணசாமி பேசினார்.
""புதுவையில் ஹெராயின், அபின், பிரவுன் சுகர் போன்றவை இல்லை. ஆனால், கஞ்சா அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. இளைஞர்களின் வாழ்க்கையை கஞ்சா சீரழிக்கிறது. திருவண்ணா மலையில் இருந்துதான் புதுவைக்கு கஞ்சா வருகிறது.
கார், பேருந்து மூலமாக கஞ்சாவை கொண்டு வந்தால் சோதனையில் சிக்கிவிடுவோம் என்று ரயில் மூலமாக கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
குறிப்பாக பெண்கள் மொத்தமாக கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். பள்ளிக்கூடங் களிலும், கல்லூரிகளிலும், சுற்றுலா பயணிகளிட மும் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது, இளைஞர்களை வைத்து விற்கிறார்கள். இதனால் சிறுவயது பிள்ளைகள் பெருமளவு பாதிக்கப்படு கிறார்கள். எல்லாவற்றையும் காவல்துறை கண்டறிந்துள்ளது. திருவண்ணாமலை சென்று தொடர்புடையவர்களை கைது செய்து விசாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படு கின்றன''’என்றார்.
முதல்வர் பேச்சு குறித்து புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பேசினோம்… “""திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி வர, செஞ்சி, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் வழியாக இரண்டு வழிகள் உள்ளன. இந்த இரண்டு வழிகளும் சோதனைகள் அதிகமில்லாத சாலைகள்.
எனவே, இந்த வழிகளில் தான் புதுவைக்கு கஞ்சாவை கொடுத்துவிட்டு, புதுச்சேரி மதுவை வாங்கிச் செல்கிறார்கள். இந்த வேலையில் பெண்களே பெருமளவு ஈடுபடுகிறார்கள். 6 மாதங்களுக்கு முன் சில கடத்தல் காரர்களை கைதுசெய்தோம். அவர்களை விசாரித்தபோது, புதுவையில் கஞ்சாவை ஒப்படைக் கும் நபர்களை கூறினார்கள். ஆனால் அவர்களை கைதுசெய்தும் கஞ்சா விற்பனை குறையவில்லை.
இதையடுத்து, திருவண்ணாமலை போலீஸாரிடம் கூறினோம். அவர்கள் நட வடிக்கை எடுக்கவில்லை. அந்த ஆதங்கத்தில் தான் முதல்வர் இப்படி பேசியிருக் கிறார்''’என்றார்கள்.
ஒரு முதல்வர் நேரடியாக குற்றம் சாட்டியிருப்பது, தமிழக அரசையும், காவல் துறை அதிகாரிகளையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தியிடம் விசாரிக்கப்பட்டது. உடனே, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் உள்ள டெல்டா டீம் மாஸ் ரெய்டு நடத்தியது. மாவட்ட ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. அண்ணாதுரை டீம் நடத்திய இந்த ரெய்டில் 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 50 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட்டுக்கு அனுப்பும் முன் போலிஸ் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி திருவண்ணாமலை எஸ்.பி. சிபிசக்கரவர்த்தியிடம் கேட்டபோது, ""முதலில் குட்கா ரெய்டு நடத்தினோம், தற்போது கஞ்சா விற்பனை தடுப்பு ரெய்டு நடத்திவருகிறோம். திருவண்ணாமலையில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் இருவரை கைது செய்துள்ளோம். இந்த மாவட்டத்தில் கஞ்சா உற்பத்தி கிடையாது, வெளியே இருந்து வருகிறது. அதனை தடுக்கவும், புதுவை முதல்வர் திருவண்ணாமலை குறித்து பேசியது தொடர்பாகவும் கஞ்சா விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்''’என்றார்.
இதைப்பற்றி குற்றவாளிகளை கண்காணிக்கும் பிரிவில் உள்ள ஒரு அதிகாரியிடம் பேசிய போது…""திருவண்ணாமலை என்பது கோயில் நகரம். பௌர்ணமியன்று மட்டும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆந்திராவில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வருகிறார்கள். இந்தச் சமயத்தில் பக்தர்கள் என்ற போர்வையில், மொத்த வியாபாரிகள் கஞ்சாவை சப்ளை செய்கிறார்கள். இங்கிருந்து சுலபமாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் என செக்கிங் அதிகமில்லாத சாலைகளில் ட்ராவல் ஆகிறது. ஆனால், இதுவரை கஞ்சா சப்ளை செய்யும் நபர்கள் சிக்கவில்லை'' என்றார்.
அமைதியான நகரம் என பெயர் எடுத் துள்ளதை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் உள்ள ரவுடிகள், மாபியா டீம்கள் திருவண்ணாமலையை தங்களுக்கு பாதுகாப்பான பகுதியாக பயன்படுத்தி வரு கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய திருவண்ணாமலையில் குட்டி குட்டி ரவுடி டீம்கள் உள்ளன. திருச்சி கொள்ளை யன் முருகன் மச்சான் சுரேஷ் இங்கே ஒளிந்திருந்துதான் சரணடைந்தான். சில ஆண்டு களுக்கு முன் புதுச்சேரியை சேர்ந்த ரவுடி ஒருவனை பிடித்து எச்சரித்து அனுப்பிவைத்தோம். விழுப் புரத்தைச் சேர்ந்த ரவுடி ஒருவனை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொன்றார்கள். வேலூரில் பிரபல ரவுடி ராஜாவின் கூட்டாளிகளும் இங்கேதான் தங்கியிருக்கிறார்கள்''’என்றார் கவலையோடு.
போதைப்பொருள் விற்பனை மையமாகவும், ரவுடிகளின் பாதுகாப்பு பகுதியாகவும் திருவண்ணா மலை மாறிவருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-து.ராஜா, சுந்தரபாண்டியன்