"ஹலோ தலைவரே.. அந்த மாஜி மீது பா.ஜ.க. தலைவர் நாகேந்திரன் கடுப்பில் இருக்காராமே?''’
"அப்படியா சொல்ற, அ..மலையைப் பின்னுக்குத் தள்ளி தலைவர் பதவிக்கே வந்துட்டாரே, இன்னும் என்ன கடுப்பு?”
"ஆமாங்க தலைவரே.. திருப்பரங்குன்ற கார்த்திகை தீப விவகாரத்தில் எப்படியும் தலைமையின் குட்புக்கில் நாம் இடம் பிடித்துவிட வேண்டும் என ஆளுங்கட்சிக்கு எதிராக கத்திக் கூப்பாடு போட்டார் பா.ஜ.க. தமிழகத் தலைவரான நயினார் நாகேந்திரன். அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக, நாகேந்திரன் தலைமையிலான பா.ஜ.க. டீம் போலீஸிடம் கைதானதைத் தவிர வேறெதுவும் நடக்கலை. தன் கைதுக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் எதிர்வினையை எதிர்பார்த்து நயினார் நாகேந்திரன் காத்திருந்த நிலையில், கமலாலயத்தில் அவசர அவசரமாக திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் குறித்து பேட்டி கொடுத்தார் மாஜி தலைவர் அ..மலை. இது அனைத்துப் பக்கத்திலும் பரவ, மாநிலத் தலைவர் நானிருக்கையில், இந்த ஆள் யாரு பிரஸ் மீட் கொடுப்பது..? எனக் கோபம்கொண்டு தேசியத் தலைமையை நாடியிருக்காராம் நயினார். அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லாத நிலையில் கட்சியின் மீது மனப்புழுக்கத்தில் இருக்கின்றாராம் அவர்.''
"அதுசரி, கமல்ஹாசன் சொத்தை விற்கிறாராமே, அவருக்கு என்ன நெருக்கடி?''”
"நடிகரும் தயாரிப்பாளருமா இருப்பவருக்கு பண நெருக் கடிக்கு கேட்கணுமா? கமல்ஹாசனுக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் ஏறக்குறைய 300 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. நாயுடுபுரத்திற்கு மேல், சின்னப்பள்ளம் ஏரியாவிலிருக்கும் இந்த நிலம் 650, 677, 678, 679, 680, 682, 726, 735 , 733 மற்றும் 733/1 ஆகிய சர்வே எண்களில் உள்ளது. இதில் சுமார் 60 ஏக்கருக்கு மேல் நிலங்களுக்கு பட்டா எண் இல்லை. இதனுடைய மதிப்பு சுமார் ரூ.300 கோடி. இந்த நில விற்பனை தொடர்பாக சமீபத்தில் கொடைக்கானலுக்கு வந்த கமலஹாசன் நிலத்தை வாங்குபவர்களுக்கு சுற்றிக் காண்பித்தார். இந்நிலையில் இந்த சொத்தை வாங்குவது சென்னையில் பணியாற்றும் குறிப்பிட்ட சில ஐ.ஏ.எஸ்.கள் என தகவல் வருகின்றது. இவ்வளவு பெரிய சொத்தை வாங்கும் அளவிற்கு பணமிருக்கும் ஐ.ஏ.எஸ்.கள் யார்? என்கின்ற விவாதம், சென்னை தலைமைச் செயலகத்தை ஆட்டிப்படைக்கிறதாம்.''”’
"கோத்தகிரி நகராட்சி துணைத் தலைவர் மீது சாதிய வன் கொடுமை தடுப்பு பதிவாகியிருக் கிறதாமே என்ன விவகாரம்?''”
“"ஆமாங்க தலைவரே.. கோத்தகிரி நகராட்சித் தலைவராகப் பணியாற்றிவரும் ஜெயக்குமாரி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதில், ‘நக ராட்சி துணைத்தலைவர் உமாநாத் கடந்த 4 ஆண்டு களாக தன்னை ஒரு பெண் என்று பாராமலும், தான் பட்டியலினத்தைச் சார்ந்தவர் என்பதாலும், தொடர்ந்து தன்னை ஒருமையில் தரக்குறைவாக பேசுவதாகவும், டிசம்பர் 5-ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு கோத்தகிரி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மன்றக்கூட்டத்தில் உமாநாத், "எஸ்.சி. ஒருத்தி தலைவராயிட்டா .........' என்று 3 முறைக்கு மேல் உமாநாத் இனவெறியை தூண்டும் விதமாக தன்னை சாதிப்பெயரைக் கூறி திட்டியுள்ளதாக வும், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கவுன்சிலர் களுக்கும் இது தெரியும் எனவும்,’ தெரிவித்துள்ளார். 4 வருடங்களாக இந்த பிரச்சனை உள்ளது, சரிசெய்யுங்கள் என தி.மு.க. மா.செ. கே.எம்.ராஜுவிடம் நகராட்சித் தலைவி ஜெயக்குமாரி பலமுறை வேண்டுகோள் வைத் திருக்கிறார். பிரச்சனையை பேசித் தீர்க்கலாம் எனக் கூறியே டபாய்த்திருக்கின்றார் மா.செ. நகராட்சித் துணைத் தலைவரும், மா.செ.வும் ஒரே சமூகத்தினர் என்பதால் நமக்கு நியாயம் கிடைக்காது என்றே வேறு வழியில்லாமல் போலீஸை நாடியுள்ளார் ஜெயக்குமாரி. இந்த விவகாரம் தலைமைவரை சென்றுள்ளதால் மா.செ. மாற்றப்பட வாய்ப்புண்டு என்கின்றது நீலகிரி மாவட்ட தி.மு.க.''”
"
மாநில காவல்துறை தலைமையகம் வரை வந்து காவல்துறையினர் கோரிக்கை வைத்திருக்கிறார்களாமே... என்ன விவகாரம்?''”
"ஆமாங்க தலைவரே... எல்லாம் விடுமுறை விவகாரம்தான். தேர்தல் வருகின்றது. சட்டம் ஒழுங்கை கட்டிக் காக்க வேண்டுமென காவல்துறை தலைமை அறிவுறுத்தியதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் எங்க ளுக்கும் தனியாக குடும்பம் இருக்கின்றது. குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களுக்காக மாதத்தில் ஒருநாளா வது விடுப்பளிக்கலாமே..? மெடிக்கல் லீவைத் தவிர கடந்த எட்டு மாதங்களாக எந்தவொரு விடுமுறையும் தலைமை தரவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்ச லுக்கு ஆளாகின்றோம். அது பணியைப் பாதிக்கின்றது என எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரிகள் மாநில காவல் துறை தலைமையகத்திடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.''
"கோவை வட்டார காவல் உயரதிகாரிகள் மீது வரும் குற்றச்சாட்டு உண்மையா?''”
“"என் காதுக்கும் அந்தத் தகவல் வந்துச்சு தலைவரே, கோவை மாநகர போலீசில் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த போலீஸ் உயரதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சமுதாயத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைமைக்க வேண்டும் என கூட்டுமுயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர்களைக் கண்காணித்து விவரங்களை மேலதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வந்துருக்கு.''”
"அப்படியே அந்த கேண்டீன் விவகாரத்தோட சர்ச்சை பின்னணியையும் சொல்லிடுப்பா''”
"கோவை மாநகர ஆயுதப்படையி லுள்ள கேண்டீனில் பொறுப்பாளராக இருந்து வருபவர் கல்பனா. கடந்த ஆறு வரு டங்களுக்கு முன்பு ஆயுதப்படை போலீஸாக இருக்கும்பொழுது பொறுப்பாளராகப் பணிக்கு வந்தவர், எஸ்.ஐ. தேர்வெழுதி எஸ்.ஐ.யாக பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னரும் கேண்டீனை விட்டுக்கொடுக்கா மல் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து தலைமை வரை தபால் அனுப்பி பார்த்திருக்கின்றனர் அங்குள்ள ஆயுதப்படை போலீஸார். இருப்பினும் நடவடிக்கை இல்லை. "எஸ்.ஐ-க்கு வரும் வரும்படியைக் காட்டிலும், கேண்டீனில் அதிக வரும்படி இருப்பதாலேயே கேண்டீனை விட்டுத்தர மறுக்கிறார் கல்பனா' என பலரும் குற்றம்சாட்ட ஆரம்பித்திருக்கின்றனர்.''”
"தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல பொதுக்கூட்டத்தை நடத்த துணைமுதல்வர் உதயநிதி மும்முரமா யிருக்கார்போல..?''
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/08/rang1-2025-12-08-16-20-00.jpg)
"ஆமாங்க தலைவரே, வன்னியந் தாங்கல் பகுதியில் இந்தக் கூட்டத்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கொடுத்திருக்கிறார் உதயநிதி. பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருப்பதால், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளைக் கவனிப்பதற்காக கடந்த 5-ஆம் தேதி வன்னியந்தாங்கல் பகுதிக்கு விசிட்டடித்தார் உதயநிதி. அமைச்சர் வேலு, மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர் உதயநிதியை வரவேற்று அழைத்துச் சென்றனர். பொதுக்கூட்டப் பணிகளை ஆய்வுசெய்த உதயநிதியிடம், ஸ்பாட்டின் வரைபடத்தை வைத்து விவரித்தார் வேலு. அப்போது, சில ஆலோசனை களையும் வழங்கியுள்ளார் உதயநிதி. 13 மாவட்டங் களைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் அதிகமான இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொள்ளவிருப்ப தால், இந்த மண்டல பொதுக்கூட்டம் அரசிய லிலும், வரவிருக்கும் தேர்தலிலும் பெரும்தாக்கத் தை ஏற்படுத்தும் என்கிறார்கள் இளைஞரணியினர்.''
"அன்புமணிக்கு எதிரா ஸ்ட்ரிக்ட்டான ஆக்ஷன்களை தொடர்ச்சியா மேற்கொண்டு வருகிறாரே டாக்டர் ராமதாஸ்?''
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/08/rang3-2025-12-08-16-20-19.jpg)
"ஆமாம் தலைவரே.. டாக்டர் அன்புமணி தலைமையிலான பா.ம.க.வை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து, டெல்லி உயர்நீதி மன்றத் தில் வழக்குத் தொடுத்தார் டாக்டர் ராமதாஸ். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிமையியல் (சிவில்) நீதிமன்றத்தை அணுக உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து சிவில் வழக்கு தொடர ராமதாஸ் தரப்பில் சீரியஸ் டிஸ்கசன் நடந்துவரும் நிலை யில், அன்புமணிக்கு எதிராக டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராமதாஸ் சார்பில் குற்றவியல் புகாரும் கொடுத்துள்ளார் ஜி.கே.மணி. தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை தாக்கல்செய்து தனக்கு சாதகமான அங்கீகாரத்தை அன்புமணி பெற்றுள் ளார். இது, ஒரு கிரிமினல் குற்றம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் புகாரால் தன்மீது வழக்குப் பதிவுசெய்து ஆக்சன் எடுத்தால் என்ன செய்வது என பதட்டத்தில் இருந்துவரும் அன்புமணி, கமிஷனர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தனது டெல்லி சோர்ஸ் மூலம் விசாரித்தபடி இருக்கிறாராம். இது ஒருபுறமிருக்க, பெண்களின் நலன்களுக்காக 10 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி மகளிர் உரிமை மீட்புப் பயணத்தைத் துவக்கியிருக்கிறார் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி.''
"பென் அமைப்பு முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாமே... என்ன விவரம்?''
"முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தலைமையில் இயங்கும் தி.மு.க.வின் தேர்தல் வியூகம் வகுக்கும் பென் நிறுவனத்தின் சார்பில், ஒரு ரிப்போர்ட் சமீபத்தில் ஸ்டாலினிடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதில், தி.மு.க.வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்கட்சி மோதல்கள் அதிகமாக உள்ளன. அமைச்சர்கள், மா.செ.க்கள் பலர் அ.தி. மு.க.வுடன் அண்டர் டீலிங்கில் இருக்கிறார்கள். அதாவது, நான் போட்டியிடும் தொகுதியில் எனக்கு எதிராக வலுவான கேண்டிடேட்டை அ.தி.மு.க. நிறுத்தக்கூடாது அல்லது கூட்டணிக் கட்சிக்கு அந்த தொகுதியை கொடுத்து விடவேண்டும். அதற்குப் பதிலாக, அ.தி.மு.க.வின் முக்கிய தலைகள் போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் வலுவான கேண்டிடேட்டை நிறுத்தாமல் பார்த்துக் கொள்கிறோம் என்பதுதான் அந்த அண்டர்டீலிங்காம். இதுகுறித்து, மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களிடம் தீவிரமாக விசாரித்திருக்கிறார் ஸ்டாலின்.''
"மதுரை விமான நிலையத்தில் இளைஞரொருவர் சர்ச்சைக்குரிய வகையில் கோஷமெழுப்பியிருக்கிறாராமே''”
"மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முதல்வரை பயணிகள் புறப்பாடு இடத்தில் தி.மு.க. தொண்டர்கள் கோஷம் எழுப்பி வரவேற்றனர் அப்போது தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த அக்சயா மார்க்கண்டேயன் என்ற இளைஞர் திடீரென முதல்வர் முன்பு சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பியிருக்கிறாராம். உடனே போலீசார் அந்த இளைஞரின் வாயைப்பொத்தி காவல்துறை வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் தூத்துக்குடி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க் கண்டேயன் மகன் அக்சய் மார்க்கண்டேயன் என்பதும், விளாத்திக்குளம் தி.மு.க புதூர் கிழக்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் என்பதும் தெரியவந்துள்ளது. காற்றாலை, இட விவகாரங்களில் மார்க்கண்டேயனின் சமீபத்திய பின்னணி தி.மு.க. தலைமைக்கு கவலையளித்திருக் கின்றது. இதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்வெளியானது. அதனை சரிசெய்யவும், தனக்கு சீட் மறுக்கப்பட்டால் பா.ஜ.க.விற்கு செல்வேன் என்பதனையும் மறைமுகமாகக் கூறுவதற்காக மகனை வைத்து தலைமையை மிரட்டிப் பார்க்கின்றார் என மாநில உளவுத்துறை குறிப்பு அளித்துள்ளதாம். இந்த நிலையில், எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் நடந்த "வெற்றியாளர்களை நோக்கி உலகம் ஒரு நாள் வரும்' என்ற நிகழ்வில் கலந்துகொண்ட அக்சய் மார்க்கண்டேயனோ, "திருப்பரங்குன்ற தீபத்திருவிழாவில் நீதிபதியின் கருத்து பாசிச கருத்தாக இருக்கின்றது. ஆனால் முதல்வரின் அறிக்கை புரட்சிகரமாக இருப்பதால் அதனுடைய உத்வேகத்தால் நீதிபதிக்கு எதிராக ஒழிக! ஒழிக! என கோஷம் போட்டேன். ஆனால் இதனை வேறொரு ஒரு பார்வையாக பார்க்கின்றார்கள்' என்றார் அவர். எனினும் அவரின் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தை நோக்கியே அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.''”
"அ.தி.மு.க. பொதுக்குழுவில் இதுவரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் இணைக்கக்கூடிய தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறதாமே..?''”
"“ஆமாம் தலைவரே, நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும் என சொல்பவர் ஒருவர் இத்தீர்மானத்தைக் கொண்டுவருகிறாராம். அந்தத் தீர்மானம் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸை இணைப் பதற்கான முன்னோட்ட தீர்மானம். அதோடு வைத்திலிங்கமும் கட்சியில் சேர்க்கப்படவிருக்கிறா ராம். இதன்மூலம் முக்கியமான 10 பேர் அ.தி.மு.க.வில் சேர்கிறார்கள். இவர்களுக்கு எம்.எல்.ஏ. சீட்டும் கொடுக்கப்படுமாம். இது பா.ஜ.க. நிர்பந்தத்தால் நிறைவேற்றப்படும் தீர்மானமாம். ஓ.பி.எஸ். அமித்ஷா சந்திப்புக்குப் பின் தனிக்கட்சி இல்லையென்றதன் பொருள் இதுதானாம். பொதுக்குழு முடிந்த 10 நாளில் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் சேருவாருன்னு அ.தி.மு.க. வட்டாரத்திலேயே சொல்றாங்க.''”
"சி.வி. சண்முகம், தங்கமணி ஆகியோர் அ.தி.மு.க.விலிருந்து விலகுகிறார்கள் என ஒரு பேச்சு ஓடுகிறதே''…”
"சமீபத்தில் ஜெயலலிதா நினைவுநாளில் சி.வி. சண்முகம் தனியாகச் சென்று தன் ஆதரவாளர்களு டன் ஜெ. சமாதியில் அஞ்சலி செலுத்திவந்தார் எனச் சொல்லப்பட்டது. அதனால இப்படி பேச்சு வந்திருக்கலாம். அவர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கள் சென்னைக்குத் தாமதமாக வந்ததால், தனியா கப் போய் அஞ்சலி செலுத்திவந்தார் அவ்வளவு தான் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். மின்வாரியத் தில் தங்கமணிக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. நிலக் கரியைக் கையாள்வதில் ஊழல் செய்திருக்கிறார் என அறப்போர் இயக்கம் உட்பட பலர் விமர்சிக் கிறார்கள். அதனால் தி.மு.க.வுடன் அன்டர்ஸ்டேண் டிங்கில் இருக்கிறார். வாய்ப்புக் கிடைத்தால் தி.மு.க.வுக்கு செல்வார் என்ற யூகத்தில் சொல்லப்பட்டது. ஆனால் சி.வி.சண்முகம், தங்கமணி, வைத்திலிங்கம் மூணு பேருமே அதி.மு.க.வை விட்டு விலகும் மனநிலையில் இல்லையாம்.''”
"சென்னைக்கு வரும் அமித்ஷாவிடம் அ..மலை அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கிறாராமே''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/08/rang2-2025-12-08-16-20-36.jpg)
“"தனது சென்னை விஜயத்தில் பல்வேறு திட்டங்களை வைத்தி ருக்கிறார் அமித்ஷா. அன்புமணி -ராம தாஸ் சமாதானப் பேச்சுவார்த்தையும் அதில் ஒன்று. பா.ஜ.க.வில் தேசிய அளவில் பதவியை எதிர் பார்க்கிறார் அ..மலை. அதுபற்றி பேசுவதற்காக சென்னைக்கு வரும் அமித்ஷாவிடம் ஒரு அப்பாயின்ட் மெண்ட் கேட்டிருக்கிறார். குருமூர்த்தி மூலம் இந்த அப்பாயின்ட்மெண்ட்டைப் பெற முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அமித்ஷா அ..மலைக்கு அப்பாயின்ட்மெண்ட் தரவில்லை என சொல்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.''”
"திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் களுக்கான அனுமதிச் சீட்டை வேறு பலரும் அணிந்து கொண்டு வந்தது சர்ச்சையாகியிருக்கிறதே''”
"திருவண்ணாமலை கோவில் வளாகத்துக்குள்ளிருந்து மகாதீபத்தை காண இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பாஸ் வழங்கப்படுவது வழக்கம். இதில் சட்டமன்ற உறுப் பினர்களின் பாஸ் அணிந்துக்கொண்டு பிரபல பைனான் ஸியர் கஜ்ஜி என்கிற கஜேந்திரனும், அவரது மகனும் வந்தது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கு 60 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கான பாஸ்களை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி யிடம் தந்துள்ளது இந்து சமய அறநிலையத்துறை அலு வலகம். சிலர் மட்டும் பாஸ் வாங்கிக்கொண்டார்கள், பலரும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்களாம். தன்னிடமிருந்த பாஸ்களை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி எம்.எல்.ஏ முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம் தரச்சொல்லி இ.பி.எஸ் சொன்னதால், அவ ரிடம் தரப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி யின் நெருங்கிய ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகளுமான டிஸ்கோ குணசேகரன், பர்குனகுமார் வாங்கி, முக்கிய பிரமுகர் களுக்கு தந்துள்ளனர். அதை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவ காரங்களை முழுவதும் விசாரித்து அறிந்து கொண்ட அறநிலையத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தலைமைக்கு தகவல் தெரி வித்துள்ளனர். இந்த பைனான்ஸியர் களுக்கு ஆளும்கட்சி பிரமுகர்களுடனும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் இதனை கண்டுகொள்ளாமல் இருங்கள் எனச்சொல்ல, அறநிலையத்துறையும் அமைதியாகிவிட்டதாம்.''”
"சரி நானும் ஒரு தகவல் சொல்றேன் கேட்டுக்க. தி.மு.க.வில் மதுரைக்காரர் கரம் வலுப்பெற்றிருந்த நிலையில், அவருடன் இருந்த அவரது ஆதரவாளர்கள் மட்டுமே கட்சியிலும், பதவியிலும் கோலோச்சினர். அதில் அரசனான ஒருவர் ஒருகட்டத்தில் மதுரைக்காரரின் நிழலாகவே வலம் வந்தார். அதற்கு பின் நடந்த களேபரத்தில் மதுரைக் காரர் ஒதுக்கி வைக்கப்பட, அவருடைய ஆதரவாளர்களும் கட்சியை விட்டே ஒதுக்கிவைக்கப்பட்டனர். இதில் தி.மு.க. தலைவர் கலைஞர் உயிரோடு இருக்கும் போதே இருவர் மட்டும் மு.க. ஸ்டாலினைப் பின்பற்றத் தொடங்கினர். முதலமைச்சர் கடந்த மே மாதம் இறுதியில் மதுரை வந்த பொழுது ஒரு நம்பிக்கை துளிர்த்திருக்கின்றது அந்த நிழலான அரசனுக்கு. ஆனால் தி.மு.க. தலைமை அவருக்கு கதவை திறந்த தாகத் தெரியவில்லை. இந்த சூழலில் அவரின் வாட்டமறிந்த த.வெ.க.வினர் அவருக்கு வலையை வீசி, "இந்த பக்கம் வந்தால் மிகப்பெரிய பதவி காத்திருக் கின்றது' என உறுதிமொழியும் கொடுக்க... ஊச லாட்டத்தில் இருக் கிறாராம் அந்த அரசன்.''”
______________
இறுதிச் சுற்று!
விடுதலை!
பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப் பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப்பை விடுவித்தது கேரள நீதிமன்றம். கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி, எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்குச் சென்றபோது, நடிகையை கடத்திய கும்பல், ஓடும் காரிலேயே பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. இவ் வழக்கில், நடிகர் திலீப் உட்பட 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, திலீப் 85 நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். 8 ஆண்டுகள் நடை பெற்ற இந்த வழக்கில் டிசம்பர் 8ஆம் தேதி, திங்களன்று, எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் அளித்த தீர்ப்பில், ஏ1 முதல் ஏ6 வரையிலான குற்றம்சாட்டப்பட்ட வர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, 8வது நபரான நடிகர் திலீப்பை விடுவித்து தீர்ப்பளித்தார்.
-மணிகண்டன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/rang-2025-12-08-16-19-23.jpg)