அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு யார் காரணம்?

எடப்பாடியும் பா.ஜ.க. மா.தலைவரும்தான்.

கூட்டணி முறிவை பா.ஜ.க. டெல்லி தலைமை விரும்பியதா?

கூட்டணி முறிவை பா.ஜ.க. டெல்லி தலைமை விரும்பவில்லை. சென்னை மாநாடு ஒன்றிற்கு வந்த மோடியை சந்திக்க நள்ளிரவு ஒரு மணிக்கு எடப்பாடிக்கு அப்பாயின்ட்மெண்ட். 12.45 வரைக்கும் எடப்பாடி வருவார் என மோடி காத்திருந்தார். எடப்பாடி போக மறுத்தார்.

Advertisment

siva

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் சண்டை சச்சரவு இருந்தால் குடும்பத்தில் மூத்தவர்கள் தாத்தா, அப்பா என இருப்பார்கள். நா கூப்புடுறேன் வா எனச் சொன்னால், பெரியவர்கள் பேச்சை மதித்து போவோம்ல. அதை ஏன் எடப்பாடி செய்யலைங்கிறதுதான் மோடிக்கு கோபம். நீங்க ஏத்துக்குறீங்களோ, ஏத்துக்கவில்லையோ அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஆகிவிட்டார். அவர்தான் இரட்டை இலைக்கு ஓனர். அவர்தான் அ.தி.மு.க.வுக்கு அடையாளம். நீங்க (மா.தலைவர்) அவரைப் போய் சொறிஞ்சிக்கிட்டே இருந்தீங்கன்னா...

அ.தி.மு.க. கூட்டணி முறிந்துவிட்டது என்றதும் பா.ஜ.க. தமிழ்நாட் டில் வெற்றி பெறும் என்பதை டெல்லி பா.ஜ.க. தலைமை நம்பியதா?

நம்பவில்லை. ஆனால் வெற்றிபெறும் என இவர் (மா.தலைவர்) ஒரு பிம்பத்தை கட்டமைத்துவிட்டார். டி.டி.வி., ஆர்.கே.நகர் வெற்றி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர் எடுத்த வாக்கு சதவீதம், அன்புமணிக்கு ஏற்கனவே சமுதாய ரீதியாக ஒரு பார்வை டெல்லியில் இருக்கு, ஐ.ஜே.கே.வால் உடையார் சமுதாய வாக்குகள் வந்துவிடும், ஏ.சி.சண்முகத்தால் முதலியார் சமுதாய வாக்குகள் வந்துவிடும், ஜான்பாண்டியன், ஓ.பி.எஸ், தேவேந்திரன் யாதவ், கவுண்டர் சமுதாயம் என எல்லா சமுதாயத்தையும் நான் கவர் பண்ணியிருக்கிறேன் என்று பேசி நம்பவைத்துவிட்டார்.

அ.தி.மு.க.வையும் ஓங்கி அடித்தால் அந்த கூட்டணியும் சாத்தியம்தான். ஆனால் மா.தலைவர் எதிர்க்கிறார். தி.மு.க. ஊழல் செய்கிறது, ஒவ்வொரு அமைச்சரும் என்ன செய்கிறார்கள் என நான் சொல்லிவருகிறேன். நீங்கள் அவர்களுடன் சேர்ந்தால் நான் எப்படி அரசியல் செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறார். இந்தப் பக்கம் பா.ஜ.க. கூட்டணிக்கு வர்றேன், மோடி மேலே கோபம் இல்ல, பா.ஜ.க. மா.தலைவர் இருந்தா ஒத்துவராது என்கிறார் எடப்பாடி. வேறு வழியில்லாமல் மா.தலைவர் சொன்னதை டெல்லி பா.ஜ.க. கேட்க வேண்டிய நிலை வந்தது.

பா.ஜ.க. அமைத்த கூட்டணியில் தருமபுரியில் சௌமியா அன்புமணி வெற்றிபெறும் நிலை வந்து வாய்ப்பை இழந்திருக்கிறாரே...

அதாவது (மா.தலைவர்) முதலில் 3 பேர்தான் வெற்றி பெறவேண்டும் என்று நினைத்தார். டி.டி.வி., சௌமியா அன்புமணி மற்றும் தான் (மா.தலைவர்). தனக்கு வாய்ப்பு வராது என தெரிஞ்சவுடன் டி.டி.வி., சௌமியா அன்புமணி வெற்றி பெறுவதை அவர் விரும்பவில்லை. ஏனென்றால் சௌமியா வெற்றி பெற்றால் தலைவராக நிரூபித்துக்காட்டி விடுவார்கள். 39 தொகுதியும் தோற்றால் அது வேற. டி.டி. வி.யோ, சௌமியா அன்பு மணியோ வெற்றி பெற்றால், அவர்களால் முடியுது, உன்னால ஏன் முடியல என டெல்லி பா.ஜ.க. கேள்வி கேட்கும். அதனால்தான் கடைசியில் ஒரு சில வேலைகள் நடந்தது. விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கே நடந்தது.

பா.ஜ.க. என்றாலே ஆடியோ, வீடியோ கட்சி... பாலியல் கட்சி என்று சொல்கிறார்களே...

இருக்குது. இங்க இருக்கிறவன் எவனும் யோக்கியவன் இல்ல. நான் பயணித்த கட்சியில, அங்கேயும் இந்த விசயங்கள் நடக்கும். ஆனால் அங்கு இரண்டு பேரும் வெளியில் சொல் லிக்க மாட்டாங்க. இங்க என்னவென்றால் எல்லையை மீறிய செயல்பாடுகள். பொம்பளன்னாதான் கேசவ விநாயகம் நின்னு பேசுவார். ஆம்பளைங்கன்னா பேசமாட்டார். சென்சார் போர்டு முதல் மகளிர் அணிவரை பொறுப்பு போடுவது அவர்தான். ஒரு உறையில் இரண்டு கத்தி இருந்தது, இப்போது 3 கத்தி இருக்கிறது. மாநிலத் தலைவர், தமிழிசை, கேசவ விநாயகம். நான்கு மாநிலத் தலைவரை பார்த்தவர் கேசவவிநாய கம். தமிழிசை மாநிலத் தலைவராக இருந்து ஆளுநராக சென்றவுடன், ஒரு வருடம் மாநிலத் தலைவர் பதவி போடவே இல்லை. தனிக்காட்டு ராஜா. தலைவன் விட்டு விளை யாடித் தள்ளிவிட்டார். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிட்டார். அவருக்கு கீழே பினாமிகள் இருக்கிறார்கள். அவர்கள் கல்லூரிகள் வைத்திருக் கிறார்கள். பணத்துக்கு குறைவே இல்லை.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம், நேர்மை, யாரையும் ஏமாற்றக்கூடாது, பெண்கள் விசயத்தில் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும் என அவர்கள் சொல்வார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்த பின்னர்தான் நான் இருந்த கட்சியை கோயில் கட்டி கும்பிடலாம்போல. அப்படி இருக்கு. கேந்திரிய வித்யாலயாவில் படுத்தாதான் சீட்டு என்கிறார்கள். எக்ஸ் பக்கத்துல போட்டிருக்கேன்ல, அவர்தான் ஒரு லேடி கிட்ட பேசுறாரு. ஓப்பனா கேட்குறாரு.

ஆண்: சீட்டு மட்டும் வேணும்ங்குற... வீட்டுக்கு கூப்பிட மாட்டியா...

பெண்: நீங்க எப்ப வேணாலும் வாங்க... உங்களுக்கு என்ன இருக்குது...

ஆண்: நான் சும்மான்னா வரமாட்டேன். மீன் ஆக்கி வைச்சாதான் வருவேன்.

பெண்: வாங்க விரால் மீன் ஆக்கி வைக்கிறேன். வாங்க.

ஆண்: நான் வந்தா, உன் புருஷன்காரன் இருப்பானே

பெண்: அவர என்ன செய்யுறது

ஆண்: நான் இருக்குறப்ப அவன் எதுக்கு அனுப்பிவுடு.

உனக்கு சீட்டு வேணுமா. என்கிட்ட படுக்குறியா என்கிறார். இந்த ஆடியோக்கள் மாநிலத் தலைவரிடமும் இருக்கிறது. நிறைய பெண்கள் புகார்கள் கொடுக்கும்போது ஆடியோக்களையும் சேர்த்துதானே கொடுக்கிறார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா...

எடுக்கவில்லை. இங்கதான் பொம்பள வச்சிக்கிட்டா தப்பு இல்லை என்கிறார்களே. அப்புறம் ஏன் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். கமலாலயமா? அந்தப்புரமா? என்கிற மாதிரி இருக்கு. கேசவவிநாயகத்துக்கு அங்கேயே வீடு. கேட்டா தரையில பெட்ஷீட்டை விரிச்சி படுத்துக்குவாங்க ஆர்.எஸ்.எஸ்.காரங்க. குடுக்கிற கூழு, கஞ்சியை குடிச்சிட்டு இருந்துக்குவோம். ஆனா கேசவவிநாயகத்துக்கு 3 வேளையும் கறி சோறுதான். அவர் படுக்கிற கட்டிலை அமுக்கிப் பார்த்தா அரைகிலோ மீட்டருக்கு உள்ளே போகுது. எந்த ஓட்டல்லேயும் அந்த அளவுக்கு சுகவாசியாக இருக்க முடியாது. அவருக்கு பார்ச்சுனர் காரு கட்சிக் காசுல. தலைவன சும்மா சொல்லக்கூடாது. காசு வேணுமா காசு. பிகர் வேணுமா பிகரு. எல்லாத்துலேயும் விட்டு ஆட்டிட்டிருக் காரு. என்னா வயசு... என்னா பொறுப்புல இருக்கிற. இந்த வேலை பார்க்கலாமா. இந்தப் பதவியை விட்டு காலிபண்ணு என்றால் துணை குடியரசுத்தலைவர் பதவி அல்லது கவர்னர் பதவி வேண்டும் என்கிறார். ஏன்னு கேட்டால் தமிழ்நாட்டில் வளராத கட்சியை இத்தனை வருசமா தாங்கிப்பிடிச்சிருக்கேன். இதுகூட செய்யமாட்டீங்களா என்கிறார். ஏற்கனவே ஒரு கவர்னரை இங்கிருந்து போட்டு விரட்டிவிட்டாங்க. இவரை கவர்னரா போட்டோம்னா அங்க இருக்கிற மகளிர் பாதுகாப்பு நிலைமையை யோசிச்சோம் என்றால்...

நிச்சயமா எதிர்காலத்துல அவர் கவர்னர்தான்...

என்கிட்ட ஒருத்தர், அண்ணே கட்சி மோசமான கட்சி தான். கவலைப்படாதீங்க. என்னைக்கு இருந்தாலும் நீங்க கவர்னர். அது உறுதி என்றார். நான் சொன்னேன், யப்பா சாமி இந்த கவர்னர் பதவியை இவ்வளவு கேவலமா ஆக்கிட்டீங்களே. ஏதோ ஒரு மூலையில நின்னு கவுன்சிலர் ஆனாகூட மரியாதையா நடக் கலாம். அந்த கவர்னர் பதவி மட்டும் வேணாம் என்கிற அளவுக்கு அந்தப் பதவியை பா.ஜ.க.வுல கேவலமா ஆக்கிட்டாங்க.

டி.எம்.கே. பைல்ஸ் டெல்லி தலைமையின் ஒப்புதலோடுதான் வெளியிடப்பட்டதா...

ஆமாம்.

அந்த தயாரிப்பில் உங்கள் பங்கும் இருந்ததா?

திருச்சியில போய் நேருவோட சொத்து எதுன்னு கேட்டீங்கன்னா, அங்க இருக்குற கட்சிக்காரர்களே சொல்லிவிடுவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். அதனை இவர் (மாநிலத் தலைவர்) எப்படி கொண்டுவருகிறார் என்றால், தன்னை ஒரு கக்கன், காமராஜர் போல காண்பிக்க நினைத்தார். தான் மற்ற அரசியல்வாதிகள் போல கிடையாது. அதிகாரியாக இருந்தபோது கூட என் கையில் கறை இல்லை என காண்பிக்க நினைத்தார். அது எடுபடவில்லை.

(தொடரும்)

நேர்காணல்: வே.ராஜவேல்

தொகுப்பு: தாஸ்