ராங்கால் : கூட்டணியில் கமல் தி.மு.க. தூது! உளவுத்துறையா? சாதி துறையா?

kamal

லோ தலைவரே, இழுத்தடிக்கப்பட்ட சட்டமன்றக் கூட்டத் தொடர் ஒரு வழியா கவர்னர் உரையோடு தொடங்கியிருக்கு...''

""ரொம்ப குறைந்த நாட்களுக்கான கூட்டத் தொடரா இருக்கே?''

""அதையும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. முழுமையாக புறக்கணிச்சிடிச்சி. ஆளுநர் உரையில் ஏழுபேர் விடுதலை குறித்த எந்தவித அறிப்பும் இல்லாததாலும், எடப்பாடி உள்ளிட்டோர்மீது தாங்கள் கொடுத்த ஊழல் புகார்களின் பேரில், கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாலும், தங்களின் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில், கவர்னர் உரையை மட்டு மில்லாமல் கூட்டத் தொடரையே புறக்கணிக்கும் முடிவை தி.மு.க. எடுத்துச்சு.''

kamal

""ஆமாம்பா, எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் 5 நிமிடம் வெளியே சென்று விட்டு, அதன்பிறகு கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதத்தை நடத்துங்கன்னு கவர்னரே கேட்டுக்கிட்டும், தி.மு.க. அதை ஏற்கலையே?''

""முழுமையான விவாதங்களை வைக்கக்கூட அவகாசம் கொடுக்காமல், கண் துடைப்புக்காக வெறும் மூன்று நாட்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்படுவதால், அதை முழுதாகவே புறக்கணிச்சிடலாங்ம்ங்கிற முடிவை தி.மு.க. எடுத்துச்சாம்.''

""சட்டமன்றத் தொடரில் கலந்துக்குறது தானே எதிர்க்கட்சியின் கடமை?''

""ஆளுங்கட்சியின் முதல்வரே அதிதீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிட்டதால, தி.மு.க.வும் தேர்தல் வியூகங்களில் கவனமா இருக்குது. கமல் எங்க கூட்டணியில் சேரனும்னு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கார்த்திக் சிதம்பரம் போன்றவர் கள் பகிரங்கமா அழைச்சாங்க. கமலின் அப்பா வழக்கறிஞர் சீனிவாசன் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். அதனால காங்கிரஸின் மன நிலையை உணர்ந்த தி.மு.க. தரப்பு, கால் ஆபரேசனால் வீட்டில் ஓய்வில் இருக்கும் கமலை சந்திச்சிப் பேசியிருக்குதாம். மக்கள் நீதி மய்யம் 25 சீட் வரை கேட்குதாம். காங்கிரசுக்கான சீட் கோட்டாவுக்குள் கமலை அட்ஜஸ்ட் செய்யலாம்னு தி.முக. நினைக்குதாம்.''

""ஏற்கனவே இருக்கிற தோழமைக் கட்சிகளுக்கும் தி.மு.க தாராளமா தொகுதிகளை ஒதுக்கணுமே?''

""தி.மு.க.வைப் பொறுத்தவரை தொகுதிகளின் பல்ஸ் என்னன்னு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பு மூலம் தெர

""தி.மு.க.வைப் பொறுத்தவரை தொகுதிகளின் பல்ஸ் என்னன்னு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பு மூலம் தெரிந்து கொள்வதில் உன்னிப்பா இருக்குது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில், ஏறத்தாழ 100-ல் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே எம்.எல்.ஏ.வாக இருக்காங்க. அதனால் இவர்களின் தொகுதி சார்ந்த குறைகளும் அதிகமாகக் கிளம்புமேங்கிற தயக்கம் தி.மு.க.வுக்குள் இப்பவும் இருக்குது. ஆனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களால் எந்த அளவுக்கு செய்யமுடியும்? அவங்க தொகுதிகளை ஆளுங்கட்சி திட்டமிட்டே புறக்கணிப்பதற்கு அண்மைக்காலத்திலேயே நிறைய உதாரணங்கள் இருக்குது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டில் ஜெயித்த கலைஞரின் திருவாரூர் தொகுதியை அ.தி.மு.க அரசு 10 வருசமா புறக்கணிச்சிக்கிட்டிருக்கு. அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தன்னோட தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா நிவாரணத்துக்குப் பயன்படுத்தலைன்னு ஓப்பனா புகார் செய்தாரு. மன்னார்குடி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி.ராஜா சட்டமன்றத்திலேயே, ’என்னையும் என் தொகுதியையும் இந்த அரசு புறக்கணிப்பது சரியா?’ன்னு உரத்த குரல் எழுப்பினாரே...''

rang

"எடப்பாடி தொகுதிக்கு கிடைக்குற கவனிப்பு மற்ற தொகுதிகளுக்கு இல்லைன்னு அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களே புலம்புறாங்க.''

"அடுத்த மேட்டருக்கு வரேங்க தலைவரே... பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் மு.க.அழகிரியை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டு வந்திடணும்னு தவிக்குறாங்க. ரஜினியின் அரசியல் துறவுக்குப் பின், அழகிரியும் அதே பாணியில் போக நினைக்கிறாராம். அவர் மகன் துரை தயாநிதியோ, உங்களையே நம்பி உங்க ஆதரவாளர்கள் ரெம்ப வருசமா காத்திருக்காங்கனும், அவங்க ஏமாந்திடக்கூடாதுன்னும் சொல்றதோடு, என் உடம்பில் ஓடுவதும் கலைஞர் வழி ரத்தம்தான். தி.மு.க தலைமை கண்டுக்கலைன்னா, தனியா அரசியல் பிரவேசத்துக்கு தயா ராவோம்னு அழுத்தம் கொடுக்கறாராம்.''

rang

""தேர்தல் காய்ச்சல் எல்லா பக்கமும் பரவத்தானே செய்யும்.''

""ஓய்வுபெற்ற முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி.யான சத்தியமூர்த்தி, இப்பவும் எடப்பாடியின் ஆத்மார்த்தமான ஆலோசகரா இருக்கார். இது சமூக பந்தம். அந்த விசுவாசத்தில், இப்ப உளவுத்துறை ஐ.ஜி.யாக இருக்கும் ஈஸ்வரமூர்த்தியைத் தொடர்புகொண்டு, ஆளும்கட்சிக்கு சாதகமாகச் செயல்படும்படி அடிக்கடி உத்தரவு போடறாராம். அதே போல் அந்தத் துறையில் இருக்கும் பல அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு, பல்வேறு டீட்டெய்ல்களைக் கேட்டும் டார்ச்சர் கொடுக் கறாராம். இதுபற்றி டி.ஜி.பி. திரிபாதிவரை புகார் போயிருக்குது.''

""ம்....''

""அதோடு, துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டிய ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, சர்வீசில் இல்லாத வெளிநபர்கள், எந்த உத்தரவு போட்டாலும் அதைக் கண்டுக்காதீங்கன்னு கறார் உத்தரவும் பிறப்பிச்சிருக்காராம். இந்த நிலையில், ஏற்கனவே உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகளான தாமரைக்கண்ணனும் சிவனாண்டியும், சசிகலா தரப்புக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கி, பழைய தொடர்புகள் மூலம் உத்தரவு பிறப்பிக்கிறாங்களாம். உளவுத்துறையா சாதித்துறையான்னு நேர்மையான அதிகாரிகள் புலம்புறாங்க.''

""கோட்டையிலே இருக்கிறவங்கதான் கவனிக்கணும். நடக்குமா?''

""தலைவரே, அங்கே வேற என்னென்னவோ நடக்குது. முதல்வர் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரி, சி.எம்.முக்கு தேர்தல் செலவுகளுக்காக 300 கோடிவரை தேவைப்படுவதாகத் தன்னிடம் சொன்னதாகவும், அதனால் முடிஞ்சவரை கொடுங்கன்னு, துறை ரீதியான காண்ட்ராக்டர்களிடம் அதிகார தொனியிலேயே கேட்கிறாராம். சந்தேகமடைந்த சிலர், நம்பகமான இடத்தில் விசாரித்தபோது, எடப்பாடிக்கே தெரியாமல் அந்த அதிகாரி செய்கிற லீலைன்னு தெரியவந்திருக்கு. அதற்கு முன்பாகவே சிலர் அந்த அதிகாரி பேச்சை நம்பி சூட்கேஸ்களைக் கொடுத்திருக்கும் நிலையில், மற்றவர்கள் எடப்பாடியின் காதுக்கே இதைக் கொண்டு போகணும்னு இருக்காங்களாம்.''’’

""அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி சீட் விஷயம் எந்தளவில் இருக்குதாம்?''

""கட்சியின் பிரபலங்களானநடிகை குஷ்பு, வானதி சீனிவாசன், மாநில தலைவர் முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்குத் தோதான தொகுதிகளை, அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. எதிர்பார்க்குது. அதற்காக யார் யாருக்கு சீட் கொடுக்க லாம்ன்னு ஒரு பட்டியலையும் அந்தக் கட்சி எடுத்திருக்கு. இதில் திருவண்ணாமலையும் அடக்கம். தி.மு.க உள்பட பல கட்சிகளிலும் பயணித்து பா.ஜ.க.வுக்கு வந்து வர்த்தக அணி மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் வெயிட்டான பார்ட்டியும் தொகுதியில் அதிகமுள்ள முதலியார் சமூகத்தவருமான தொழிலதிபர் தணிகைவேலுவை, தி.மு.க.வின் பவர்ஃபுல் பிரமுகரான நாயுடு சமூகத்து எ.வ.வேலுவை எதிர்த்துக் களமிறக்க காய் நகர்த்துது பா.ஜ.க.''

""அண்ணா நினைவு நாளில் திராவிட அரசியல் கட்சிகளின் பவர் காட்டும் நிகழ்வுக்கும் பஞ்சமில்லை போலிருக்கே?''

""ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3ந் தேதி காலை 8 மணிக்கெல்லாம் அண்ணா நினைவிடத்துக்கு அமைதி ஊர்வலம் போவது கலைஞர் காலத்திலிருந்து தி.மு.கவின் வழக்கம். அண்ணாவின் 52வது நினைவு நாளிலும் ஸ்டாலின் அதையே கடைப்பிடிச்சாரு. அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி, ஓ.பி.எஸ் தலைமையில் 10 மணிக்கு மேலே அணிவகுத்து வந்த அ.தி.மு.க.வினர் மலரஞ்சலி செய்ய, அ.ம.மு.க.வோ, அதன் துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் தலைமையில் அதிகம் பேருடன் அமைதிப் பேரணி நடத்தி, அ.தி.மு.க. தரப்பையே ஷாக் அடைய வச்சிடிச்சி. தினகரனைத் தொடர்ந்து முன்னிலைப் படுத்த வேண்டாம்னுதான் செந்தமிழனை பேரணிக்குத் தலைமை ஏற்கச் சொல்லிவிட்டாராம் சசிகலா.''

rang

""எடப்பாடி அரசு மீது அரசு மருத்துவர்கள் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்குதே?''

""அதுக்குக் காரணம், கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல், இரவுபகல் பாராமல் கடந்த ஒரு வருடமாக மருத்துவ சேவை செய்துவரும் அரசு மருத்துவர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றாமல், கடந்த 2 வருடங்களாகக் கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறாராம் எடப்பாடி. இதனால் ஏகத்துக்கும் மன உளைச்சலில் இருக்கும் அவர்கள், ஆட்சியின் கடைசி நேரமான இப்போதாவது, தங்கள் மீது அரசு இரக்கம் காட்டாதான்னு தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல், ஆசிரியர்கள் தரப்பிலும் எடப்படி அரசு மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.''

""ஆமாம்பா, ஜெயலலிதாவால் 2012-ல் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 16,500 பேர், இன்னும் நிரந்தரமாக்கப்படலையே?''

""அதேதாங்க தலைவரே, அந்தப் பகுதிநேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியமா வெறும் ரூ 7,700 மட்டுமே வழங்கப்படுதாம். அவர்களை பணி நிரந்தரம் செய்வதாக ஜெ. சொல்லியிருந்த நிலையில், அதற்கான அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பாகவே, அவர் அப்பல்லோவில் அட்மிட் டாகி, மர்ம மரணத்துக்கும் ஆளாகிவிட்டார். அவர் கொடுத்த வாக்குறுதிப்படி, தங்களைப் பணி நிரந்தரம் செய்யனும்ன்னு கடந்த 4 வருடங்களாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கையை தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கிது. ஆட்சி முடிகிற நேரத்திலாவது நல்லது செஞ்சிட்டுப் போங்கய்யான்னு அவங்களும் கலக்கத்தோடு கோரிக்கை வச்சிக்கிட்டு இருக்காங்க.''

""இட ஒதுக்கீடு பற்றி எடப்பாடி அரசோடு பா.ம.க. 3-ந் தேதி பேச்சு வார்த்தை நடத்தியிருக்கே?''

""ஆமாங்க தலைவரே, வன்னியர் சமூகத்திற் கான 16 சத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்திவரும் பா.ம.க., அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துனுச்சு. இந்தப் பேச்சு வார்த்தையை தலைமைச் செயலகத்தில் நடத்தாமல் அமைச்சர் தங்கமணி யின் வீட்டிலேயே நடத்தினார்கள். வன்னியர் சங்கங்கள் இல்லாமல் பேச்சுவார்த்தையான்னு கேள்வி எழுந்ததால், கடைசி நேரத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, தீரன் மற்றும் கே.பாலு ஆகியோரையும் கூட்டத்தில் கலந்துக்க செய்தார் ராமதாஸ். அரசுத் தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும், பா.ம.க தரப்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் கலந்துக் கிட்டாங்க.''

""கூட்டத்தில் என்ன நடந்ததுனு நான் சொல்றேன். பா.ம.க. தரப்பு 16 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி வந்த நிலையில், இப்ப 10.5 சத ஒதுக்கீட்டையாவது மீண்டும் ஆட்சி அமையும் போது தரனும். அது பற்றிய அறிவிப்பை, கவர்னருக்கு நன்றி தெரிவித்து பேசும் போது, முதல்வர் எடப்பாடி வெளியிடனும்ன்னு பா.ம.க. தரப்பு வலியுறுத்துச்சு. அரசுத் தரப்போ, அதை அடுத்து ஆட்சி அமையும் போது நாங்கள் தருவோம். இப்போது அறிவிக்க முடியாது. ஏனென்றால் 30-க்கும் மேற்பட்ட சமூகங்கள் தங்களுக்கும் உள் ஒதுக்கீடு கேட்டு அரசிடம் மனு கொடுத்திருக்கு. உங்களுக்கு மட்டும் அறிவித்தால், தேர்தல் நேரத்தில் மற்ற சமூகங் களின் எதிர்ப்பை நாங்கள் சம்பா திக்க நேரும்ன்னு சொல்லியிருக்கு. அதனால் இது குறித்து எந்த முடி வும் இந்தக் கூட்டத்தில் எட்டப் படலை. அதேபோல் கூட்டணியில் தொடர தங்களுக்கு 31 சீட்டுகளை பா.ம.க. தரப்பு கேட்டிருக்குதாம்.''

nkn060221
இதையும் படியுங்கள்
Subscribe