தமிழக அமைச்சர் களுக்கு கொடுக்கப்பட்டு வந்த அணிவகுப்பு மரியாதை கட் செய் யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித் திருக்கிறார் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.! இதன் பின்னணியில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் நடந்துள்ளன.
தமிழகத்திற்கு வரும் முக்கிய வி.ஐ.பி.க்களுக்கு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழக முதலமைச்சர், அமைச்சர் கள் ஆகியோர் தமிழகத்தில் அரசு முறை பயணமாக எந்த ஒரு மாவட்டத்துக்குச் சென்றாலும் இந்த அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்படுகிறது. இது மட்டுமல்ல, தமிழக சட்டமன்ற நிலைக்குழுக்களின் தலைவர்களுக்கும் இந்த மரியாதை தந்து வந்தது தமிழக அரசு.
இந்த சூழலில் தான், தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் முக்கிய பிரமுகர் களில் யாருக்கெல் லாம் காவல்துறை அணிவகுப்பு மரி யாதை அளிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு சில முடிவுகளை திடீரென எடுத்திருக்கிறது, அதன்படி கடந்த வாரம் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட ஒரு அரசாணையில் (எண்:568), யாருக்கெல்லாம் இனி காவல்துறை அணிவகுப்பு மரியாதை தரப்பட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக கவர்னர், தமிழக முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் (கேபினெட்) ஆகிய 7 பேருக்கு மட்டுமே காவல்துறை அணிவகுப்பு மரியாதை இனி அளிக்கப்பட வேண்டும்; அதற்கான வழிகாட்டி விதிகளைப் பின்பற்றி நெறிமுறைகள் மீறப்படாததை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.) ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் தலைமைச் செயலாளர்.
இந்த அரசாணையின்படி பார்த்தால், இனி மேற்கண்ட 7 வி.வி.ஐ.பி.க்களைத் தவிர தமிழகத்தில் யாருக்கும் அணிவகுப்பு மரியாதை கிடையாது. அமைச்சர்களுக்கான மாரியாதைக்கும் கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு அரசாணை திடீரென பிறப்பிக்கப்பட்டதன் பின்னணி குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, "அரசு வி.ஐ.பி.க்களுக்கு அணிவகுப்பு மரியாதை கொடுப்பது பற்றி கடந்த 2012-ல் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருந்தது. அதன்படி, வி.ஐ.பி.க்களுக்கு அணிவகுப்பு மரியாதையை கொடுத்து வந்தது தமிழக அரசு.
ஆனால், தமிழக சட்டமன்றக் குழுக்களின் தலைவர்கள் சிலர் சமீபகாலமாக செய்து வரும் அலப்பறைகள் எல்லை மீறிப்போனது. இதனை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் மூத்த அமைச்சர் துரைமுருகன். அதன்பிறகே, அணிவகுப்பு மரியாதையில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பித்துள்ளார் தலைமைச் செயலாளர்.
அதாவது, தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு நிலைக்குழுக்கள் இருக்கின்றன. அதில், அரசு நிறுவனங்களை ஆய்வு செய்யும் குழுவும் ஒன்று. இந்த குழுவுக்கு, அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார்தான் தலைவர். இவருக்கு கீழே தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தோழமைக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் உறுப்பினர்களாக இருக்கின் றனர். பொதுவாக, எம்.எல்.ஏ.க்களில் சீனியர்களாக இருப்பவர்கள்தான் குழுவின் தலைவராக நியமிக் கப்படுவது வழக்கம். ஆனால், இந்த குழுவில் சீனியர் கள் சிலர் இருக்க, அவர்களை தவிர்த்துவிட்டு ஜூனியரான நந்தகுமார் தலைவராக நியமிக்கப் பட்டார்.
ஜூனியரான நம்மை தலைவராக நியமித்திருக்கிறார்களே என எண்ணி ஆர்ப் பாட்டம் இல்லாமல் தனது பணிகளை நந்தகுமார் மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, வேலூர் மாவட்டத்திற்கு ஆய்வுப் பணிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்கு கொடுக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் பரப்பியுள்ளார் நந்த குமார். இந்த வீடியோக்களை பரப்பிய அவரது ஆதரவாளர்கள், அடுத்து நந்தகுமார்தான் மந்திரி; இனி வேலூர் மாவட்டத்தில் அண்ண னைத் தவிர வேறு யாரும் அரசியல் செய்ய முடியாது என்கிற ரீதியில், அதகளம் பண்ணி வரு கின்றனர்.
வேலூர் மாவட்ட அமைச்சராக இருப்பவர் மூத்த அமைச்சர் துரை முருகன். மேலும் தி.மு.க. வின் பொதுச்செயலாளர். அவருக்கும் நந்தகுமாருக்கும் ஏழாம் பொருத்தம். அந்த வகையில், இந்த அணி வகுப்பு மரியாதையை வைத்து துரைமுருகனை வம்புக்கிழுத்துள்ளனர். நந்தகுமாரின் இந்த அலப் பறைகள் துரைமுருகனுக்கு தெரியவர, அதிர்ச்சியடைந்த அவர், தலைமைச்செயலாளர் முருகானந்தத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
குறிப்பாக, சட்டசபைக் குழுக்களின் தலைவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குழுவில் தலைவரை விட சீனியர்களாக பலர் இருக்கி றார்கள்; முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர் கள் பலர் இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது வயது குறைவான ஒருவருக்கு, குழுவின் தலைவராக அவர் இருப்பதாலேயே அணிவகுப்பு மரியாதை தருவது ஆரோக்கியமானது அல்ல என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன், சோசியல் மீடியாவில் பரவிய நந்தகுமார் பற்றிய வீடியோவையும் குறிப்பிட்டிருக்கிறார் துரைமுருகன்.
இதனை உடனே முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் எடுத்துச்செல்ல, மூத்த அமைச்சர் துரைமுருகன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்; ஆலோசித்து தேவையான முடிவுகளை எடுங்கள் என உத்தரவிட்டார். இதனையடுத்து பிறப்பிக்கப்பட்டதுதான் இந்த புதிய அரசாணை ! அதன்படி, 7 பேர் தவிர மற்றவர்களுக்கு இனி அணிவகுப்பு மரியாதை அரசு சார்பில் தரப்படாது. அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த அணிவகுப்பு மரியாதையும் கட் செய்யப்பட்டுவிட்டது''’என்று பின்னணிகளை விவரிக்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.