மதுரையைச் சேர்ந்த பெண் தொழிலதிபரான அன்பரசி, அப்பகுதியைச் சேர்ந்த முரளி, குணசேகரன், சரவணன் ஆகிய மூன்று பேரிடம் 12 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக 25 லட்சம் கொடுத்து கடந்த 1999-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி அக்ரிமெண்ட் போட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென நில உரிமையாளர்கள் மூவரும் நிலத்தை வேறு நபருக்கு விற்றுவிட்டனர்.
இதனால் அன்பரசி பணத்தை திருப்பித்தர வலியுறுத்தி மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனடிப்படையில் நீதிமன்றமும் ரூ. 28,66,660 ரூபாயை, அந்தப் பணத்திற்கான 6 சதவிகித வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது.
பணம் தராததால் உத்தமபாளையத்திலுள்ள பங்குதாரர்களின் சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க அன்பரசி தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால் பங்குதாரர்கள் பல்வேறு தவணைகளில் நீதிமன்றத்தில் 44.75 லட்சத்தை திருப்பிச் செலுத்தினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lawyer_16.jpg)
தொழிலதிபர் அன்பரசியின் கணவர் பாக்கியராஜ், தனது நண்பர் திண்டுக்கல்லிலுள்ள ஆடிட்டர் சீனிவாசனிடம் இந்தப் பிரச்சனை குறித்துத் தெரிவித்துள்ளார். அவரின் ஏற்பாட்டின் பேரில், இந்த வழக்கை நடத்த தேனியைச் சேர்ந்த வழக்கறிஞ ரான குரு ராதாகிருஷ்ணனை (ஓ.பி.எஸ்.ஸின் உறவினரான இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு வழக்கறிஞராக இருந்தவர்) நியமித்துள்ளனர். அதனடிப்படையில் 44.75 லட்சத்தை முரளி, சரவணன் மற்றும் குணசேகரன் ஆகியோரிடமிருந்து அன்பரசி பெற்றுக்கொண்டதாக போலி ஆவணத்தை தயார்செய்து அதில் அன்பரசியின் கையெழுத்தை போட்டு அந்தப் போலி ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கையும் வாபஸ் பெற்றனர்.
"இந்த மோசடி விசயம் தெரிந்த உடனே அதிர்ச்சி அடைந்து விட்டோம். முறைப்படி கோர்ட்டில் செக்தான் கொடுத்திருக்க வேண்டும். அதைவிட்டு பணத்தைக் கொடுக்கிறார்களென்றால், அதை எங்களை வைத்துதான் கொடுத்திருக்க வேண்டும். அதிலேயே கோர்ட் விதிகளையும் மீறியிருப்பதாகத் தெரிகிறது. ஆடிட்டர் சீனிவாசனையும், வழக்கறிஞர் குரு இராதாகிருஷ்ணனையும் சந்தித்து பணத்தைத் திருப்பிக் கேட்டபோது ரூ.8.50 லட்சத்தை மட்டும் எங்களிடம் கொடுத்தனர். மேலும் மீதிப் பணம் 36.25 லட்சத்தை கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததுடன் கொலைமிரட்டலும் விடுத்தனர். அதனால் பணத்தை மீட்டுத் தரக்கோரி திண்டுக்கல் தேனி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமாரியிடம் கடந்த 29.9.2021 அன்று புகார் மனு கொடுத்தேன். தேனி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. பரிந்துரையும் செய்திருந்தார்.
ஆனால், தேனி மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தேனி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் பணத்தை மீட்டுத் தரக்கோரி மனு கொடுத்தோம். இந்த மனுவை விசாரித்த தேனி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், மாவட்ட குற்றப்பிரிவு மூலம் அவர்கள்மேல் வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டது. ஆடிட்டர் சீனிவாசன், வழக்கறிஞர் குருராதாகிருஷ்ணன் மீது மோசடி மற்றும் கொலைமிரட்டல் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் தேனி மாவட்டக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீமைராஜ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை, பாண்டிச்சேரி பார் கவுன்சிலிலும் வக்கீல் குருராதாகிருஷ்ணன் மேல் புகார் கொடுத்ததன் பேரில் அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்''” என்கிறார் அன்பரசியின் கணவரான ஆடிட்டர் பாக்யராஜ்.
இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி விளக்கம் கேட்க ஆடிட்டர் சீனிவாசனை லைனில் பிடிக்க முடியவில்லை. வழக்கறிஞர் குருராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, “"இது சம்பந்தமாக நேரில் வாருங்கள் விளக்கம் சொல்கிறேன். போனில் பதில் சொல்ல விரும்பவில்லை''” என்று கூறிவிட்டார்.
மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீமைராஜிடம் கேட்டபோது, “"கோர்ட் ஆர்டர் மூலம் அவர்கள் மேல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுசம்பந்தமான ஆவணங்கள் கோர்ட்டில் இருப்பதால் அந்த ஆவணங்களைப் பெற்று மேல் விசாரணை நடத்தியபிறகுதான் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்''’என்றார்.
இந்த வழக்கில், தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சீனிவாசனும், குரு ராதாகிருஷ்ணனும் முன்ஜாமீன் கேட்டிருந்தனர். அவர்களுக்காக ஓ.பி.எஸ். மைத்துனரும், வழக்கறிஞருமான சந்திரசேகர் ஆஜரான நிலையில்... அவர்களது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக... நீதிமன்ற உத்தரவு இருந்துமே மோசடியில் துணிந்து இறங்குகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/lawyer-t_0.jpg)