ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு 2019ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. உதயசூரியன், அ.தி.மு.க.வில் ஒரே மாவட்ட செயலாளர் எக்ஸ். எம்.எல்.ஏ. குமரகுரு ஆகியோர் தீவிர அரசியல் செய்து வருகிறார்கள். கடந்த 2021 தேர்தலில், தி.மு.க. உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது. கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் அ.தி.மு.க.வின் செந்தில்குமார் வெற்றிபெற்றார். இந்த நிலையில்... வரும் 2026 தேர்தலில் ஐந்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டுமென்ற முனைப்பில் தி.மு.க. மா.செ.க்கள் அரசு திட்டங்களையும், கட்சிப் பணிகளையும் ஓடியோடி செய்துவருகிறார்கள்.
சங்கராபுரம்
சங்கராபுரம் தொகுதியில் கடந்த முறை வெற்றிபெற்ற உதயசூரியனே மீண்டும் களத்திலிறங்க அதிக வாய்ப்பிருந்தாலும்கூட இளைஞரணியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷிக், அமைச்சர் எ.வ.வேலு வுடன் நெருக்கமாக இருந்து கொண்டு சீட்டுக்கு கடும் முயற்சி செய்துவருகிறார். சங்கராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பின ராக இருந்து மறைந்த பச்சையப்பனின் மகன் அரவிந்தன் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு அல்லது இவரது மகன் மருத்துவர் அணியிலுள்ள டாக்டர் அஸ்வின் ஆகிய இரு வரில் ஒருவர் சீட்டினை பெறுவதில் முனைப் புடன் உள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ. அங்கயற்கண்ணி, சின்ன சேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச்செய லாளர் வாணியந்தல் ஆறுமுகம் என சீட்டு கேட்க பலரும் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ. உதயசூரியன் சீட்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், மருத்துவ ராக உள்ள அவரது மகன்கள் கதிரவன், பர்னாலா ஆகியோரில் ஒருவரை களமிறக்கத் தயாராக உள்ளாராம். கூட்டணியிலுள்ள வி.சி.க., பொதுத்தொகுதியான இதில் தங்கள் கட்சி மாவட்ட செயலாளர் வேல். பழனியம்மாளை வேட்பாளராக்க ஆர்வமாக உள் ளனர். மீண்டும் 2026-ல் நாங்கள் ஆட்சியை பிடிப்போ மென்று நம்பிக் கையோடு மார்தட்டிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வில், முன்னாள் அமைச்சர் மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், நகைக்கடைக்காரர் நாகராஜன் போன்றவர்கள் லிஸ்டில் உள்ளனர். இவர்களில் ராஜசேகர், 2016 தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டவர். இவருக்கு இந்த முறையாவது எடப்பாடி வாய்ப்புத் தருவாரென நம்பிக்கையோடு உள்ளனர் ர.ர.க்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/kalakuruchi1-2025-12-12-12-35-43.jpg)
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி தொகுதி, சிட்டிங் அ.தி. மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார், எக்ஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரபு, அழகுவேல் பாபு, மற்றும் இளைஞரணி ராஜீவ்காந்தி போன்றவர்கள் சீட்டு முனைப்பில் உள்ளனர். இவர்களில் பிரபு கடந்த 2016-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செய்தவர். அதோடு கட்சியின ருடன் நெருக்கமாக உள்ளவர். இவரது தந்தை ஐயப்பா, தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர். இவருக்கு கட்சி கடந் தும் செல்வாக்குள்ளது. எனவே பிரபுவுக்கு சீட்டு கொடுத்தால் நிச்சயம் வெற்றி எனும் ர.ரக்கள், மாவட்ட செயலாளர் குமரகுரு என்ன முடிவெடுப்பாரோ எனப் புதிர் போடுகிறார்கள்.
தி.மு.க. தரப்பில் தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் கை காட்டுபவருக்கே வாய்ப்பு. அந்த வகையில் மாவட்ட பஞ்சாயத்து சேர்மனாகவுள்ள மடம்.புவனேஸ்வரி, அல்லது இவரது கணவர் பெருமாள் ஆகிய இருவரில் ஒருவருக்கு கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதோடு, கடந்த 2016 தேர்தலில் நின்று தோல்வியடைந்த காமராஜ், இளைஞரணி தாகப்பிள்ளை போன்றவர் களும் சீட்டு முனைப்பிலுள்ளனர்.
கடந்த தேர்தலில் தி.மு.க. இந்த தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத் தது. இந்த முறை தொகுதியை தங்கள் கட்சிக்கு பெற வேண்டுமென்று வி.சி.க. தரப்பில் முனைப்புடன் உள்ளனர். அப்படி கிடைத்தால் கடலூர் மேற்கு மாவட்ட வி.சி.க. செயலாளர் திராவிட மணி, முன்னாள் மாவட்ட செயலாளர் தனபால், மாவட்டத் துணைச்செய லாளர் ராமமூர்த்தி ஆகியோர் தீவிரமாக உள்ளனர். கடந்த முறை காங்கிரஸில் காட்டு மன்னார்கோவில் தொகுதியை சேர்ந்த மணிரத்னம் இங்கு வேட்பாளராக நின்று தோல்வியடைந்தார். இம் முறையும் நிற்க அவர் ஆசைப்பட்டாலும், மண்ணின் மைந்தர்களுக்கே நிற்க வாய்ப்பளிக்க வேண்டு மென்ற கோரிக்கைப்படி, கட்சி வழக்கறிஞர்களான இளையராஜா, வழக்கறிஞர் பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் சுரேஷ் குமார் ஆகியோர் போட்டியிட முனைப்பிலுள்ளனர்.
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் தொகுதி யில் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் 2016, 2021 என இரண்டு தேர்தல்களிலும் வெற்றிபெற்ற வர். வரும் தேர்தலில் ஹாட்ரிக் சாதனைக்காகக் காத்திருக்கிறார். இந்த தொகுதியிலுள்ள மண லூர்பேட்டை பேரூர் செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்டத் துணைச்செய லாளர் அண்ணாதுரை, பொருளாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் அசோக் குமார், பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உட்பட அனைத்து நிர்வாகிகளும் வசந்தனின் பாசப்பிணைப்பில் உள்ளனர். எனவே வசந்தன் கார்த்திகேயனையே வேட்பாளராக தலைமை அறிவிக்குமென்று நம்பிக்கை யோடு கூறுகிறார்கள் உ.பி.கள். அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை நின்று தோல்வி யடைந்த சந்தோஷ், ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ் மற்றும் மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா போன்றவர்களும் சீட்டுக்கான முயற்சியில் உள்ளனர். 2011 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் வெற்றிபெற்றவர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அந்த பாசத்தில் பிரேமலதாவுக்கு இந்த தொகுதியின் மீது மிகப்பெரிய பிடிப்பு உள்ளது. அதன் எதிரொலியாக சமீபத்தில் இத்தொகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய எந்த கட்சியோடு கூட்டணி வைத்தாலும் விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா அல்லது அவரது மகன் போட்டியிடத் தீவிரமாக உள்ளதாகக் கூறுகிறார்கள் தே.மு.தி.க. தொண்டர்கள்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க.வில் எடப்பாடியின் நம்பிக்கை நட்சத்திரம் மாவட்ட செயலாளர் குமரகுரு. இவர் கடந்த எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், கடந்த முறை தி.மு.க. மணிக்கண்ணனிடம் தோற்றார். வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற வெறியோடிருக்கிறார். இவரோடு ஒன்றிய செயலாளர்கள் ஏகாம்பரம், செண்பகவேல், மணிராஜ், நகர செயலாளர் துரை ஆகியோருக் கும் போட்டியிட ஆசையுள்ளது. ஆனால் குமரகுருவை தவிர மற்றவர்களுக்கு எடப்பாடி டாட்டா காட்டுவார் என்கிறார்கள் ர.ர.க்கள் தி.மு.க. சார்பில் சீட்டுக்கு முயற்சி செய்து வருகிறார் சிட்டிங் எம்.எல்.ஏ. மணிக்கண்ணன். ஒன்றிய செயலாளர் வசந்தவேல், ஒன்றிய சேர்மன் ராஜவேல், நகராட்சி கவுன்சிலர் முருகவேல் ஆகியோரும் சீட்டுக்கு மோது கிறார்கள். இத்தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தால், அக்கட்சியின் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் அல்லது இவரது பேரன் ஜெய்கணேஷ், கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலம் ஜெய்கணேஷ் ஆகியோர் தீவிர முயற்சியிலுள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ஜ.க., வழக்கறிஞர் கண்ணனை நிறுத்துவதற்கு தீவிரமாக உள்ளது. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞராக உள்ளார். கட்சித்தலைமை கேட்டுக்கொண்டதால், தெலுங்கானா சட்ட மன்றத் தேர்தல் பணியிலும் செயலாற்றியவர் என்கிறார்கள் பா.ஜ.க. தரப்பில்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் பொன் முடி அல்லது இவரது மூத்த மகனும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான கௌதம சிகாமணி இருவரில் ஒருவர் போட்டியிடக் கூடும். இவர்களை மீறி வேறு யாருக்கும் கட்சித் தலைமை வாய்ப்பு தருமா என்பது கேள்விக்குறி. இருந்தும் தி.மு.க.வில் மாவட்டத் துணைச்செய லாளரும் நகராட்சி தலைவருமான முருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், கண்டாச்சிபுரம் ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வ ராசு போன்றவர்களும் முயற்சி செய்கிறார்கள். அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர்கள் பழனியப்பன், சுப்பு, விநாயகமூர்த்தி, எக்ஸ் எம்.எல்.ஏ. சிவராஜ் மகன் பிரபு போன்றவர்கள் ஆர்வமாக உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியி லுள்ள பி.ஜே.பி. தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தி.மு.க. அமைச்சர் ஏ.ஜி. கோவிந்தசாமியின் மகன் சம்பத்தை வேட்பாள ராக்கி வெற்றி பெறவைக்க தீவிரமாக உள்ளனர். திருக்கோவிலூர் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் யாருக்கு சீட்டு, யாருக்கு வெற்றியென்ற பரபரப்பு தொற்றியுள்ளது.
-எஸ்.பி.எஸ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/kalakuruchi-2025-12-12-12-35-15.jpg)