சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பல்வேறு வியூகங்களை வைத்தி ருக்கிறது தி.மு.க. தலைமை. அந்த வகையில், சீனியர்கள் பலருக்கும் இந்த முறை சீட் மறுக்கப் படும் நிலையில், மண்டல பொறுப்பாளர்களின் பரிந்துரைகள், "பென்' அமைப்பின் ரிப்போர்ட் டுகள், உளவுத்துறையின் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தச் சூழலில், மேயர்கள் சிலரை எம்.எல்.ஏ. தேர்தலில் களமிறக்கவும் அறிவாலயம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
சமீபகாலமாக அடிக்கடி மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருக்கும் தி.மு.க. வின் பொதுச் செயலாளரும், சீனியர் அமைச்சருமான துரைமுருகன்,
கடந்த 10-ஆம் தேதி கால் இடறி விழுந்ததில் முதுகுத்தண்டிலும் காலிலும் பலத்த அடிபட்டிருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப் பட்டார் துரைமுருகன். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்படுகிறது.
இது குறித்து தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்களி

இது குறித்து தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் பேசியபோது, "தனது தொகுதியான காட்பாடிக்கு கடந்த வாரம் விசிட் செய்திருந்தார் துரைமுருகன். ஒன்றிய செயலாளர்கள் பலருடனும் தேர்தல் களநிலவரம் பற்றி விவாதித்தபடியிருந்தார்.
அதே நேரம், சென்னையில் இருந்த துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்திற்கு, முதல்வர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து போன் வந்தது. கதிரிடம் பேசிய அவர், அப்பாவுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இந்த முறை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டாம்னு தலைவர் விரும்புறார். அவரது ஆலோசனைகள் கட்சிக்குத் தேவை. இப்போதைக்கு ஓய்வுதான் அவருக்கு அவசியம். அதனால் அப்பாவுக்கு சீட் இல்லை. இதனை தலைவர் சொல்லச் சொன்னார் எனச் சொல்லியிருக்கிறார் குடும்ப உறுப்பினர்.
மேலும், கணக்கு வழக்குகளை சரிபார்த்து தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனை அப்போதே, துரைமுருகனைத் தொடர்புகொண்டு தெரிவித்திருக்கிறார் கதிர்ஆனந்த். அதைக்கேட்டு ஏகத்துக்கும் அப்-செட்டாகி அழத் தொடங்கிவிட்டார் துரைமுருகன். அவர் அழுவதைக் கண்டு பதறிய ஒன்றிய செயலாளர்கள், "என்னண்ணே ஆச்சு, என்னண்ணே ஆச்சு என கேட்க, இந்த முறை எனக்கு சீட் இல்லையாம்; ஓய்வெடுக்கச் சொல்றாங்க' என சொல்லி தேம்பியிருக்கிறார். அதைக்கேட்டு ஒ.செ.க்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
உடனே, காட்பாடியிலிருந்து சென்னைக்குத் திரும்பினார் துரைமுருகன். செக்ரட்டரியேட் சென்ற அவர், அங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வீடு திரும்பினார். முக்கியமான ஓரிருவரை வரச்சொல்லி அவர்களிடம் புலம்பித் தள்ளியிருக்கிறார். என்ன சொல்லி அவரை தேற்றுவது என தெரியாமல் அவர்கள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், மன உளைச்சலிலிருந்து துரை முருகனால் விடுபடமுடியவில்லை. வந்தவர்கள் சென்றுவிட, அப்படியே உறங்கிப் போனார். இடையில் பாத்ரூம் செல்வ தற்காக எழுந்தபோதுதான், கால் இடறி விழுந்துள்ளார் துரைமுருகன். தற்போது ஆபரேசன் செய்யவேண்டிய சூழல்''’என்று விவரிக்கின்றனர்.
சீனியர் துரைமுருகனுக்கு இந்த முறை சீட் மறுக்கப்படும் நிலையில், அவரது தொகுதியான காட்பாடியில், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் களமிறக்கப்படவிருக்கிறார். துரைமுருகனைப் போல, அமைச்சர் காந்திக்கும் இந்தமுறை நோ சீட். அவருக்கு எதிராக முதல்வரிடம் குவிந்த புகார்களே இதற்கு காரணம் எனச் சொல்லப் படுகிறது.
அதேபோல, கடந்த முறை விழுப் புரத்திலிருந்து திருக்கோவிலூருக்குத் தாவி அங்கு எம்.எல்.ஏ.வான சீனியர் தலைவர்களில் ஒருவரான பொன்முடி, இந்த முறை திருக்கோவிலூரைத் தவிர்த்துவிட்டு, விக்கிரவாண்டியில் போட்டியிடத் திட்டமிட்டு காய்களை நகர்த்தியிருக்கிறார். ஆனால், துரைமுருகன், காந்தி வரிசையில் பொன்முடிக்கும் இந்த முறை சீட் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. இந்த பட்டியல் இவர்களோடு முடியாமல் இன்னும் நீள்கிறது என்கிறது அறிவாலய வட்டாரம்.
சீனியர்களுக்கு கல்தா கொடுக்கப்படும் நிலையில், மேயர்களாக இருக்கும் சிலர், எம்.எல்.ஏ. வாக முயற்சித்து வருகிறார்கள். அறிவாலயமும் இது குறித்து ஆலோசித் திருக்கிறது. குறிப்பாக, தாம்பரம் மேயராக இருப்பவர் வசந்தகுமாரி. மதுராந்தகம் தனித் தொகுதியில் போட்டியிட முயற்சித்துவருகிறார். இவருக்கு தி.மு.க. இளைஞரணியின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. மதுராந்தகம் தனித் தொகுதி, கடந்தமுறை தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு மல்லை சத்யா போட்டியிட்டார். அ.தி.மு.க. மரகதம் குமரவேலிடம் தோற்றுப்போனார். தற்போது ம.தி.மு.க.வில் மல்லை சத்யா இல்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அந்த வகையில், மதுராந்தகம் தொகுதியை இந்தமுறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல் தி.மு.க.வே எடுத்துக்கொள்ளவிருக்கிறது. அந்த வகையில், மதுராந்தகம் தொகுதிக்கான சரியான கேண்ட்டிடேட் குறித்து தி.மு.க. ஆலோசித்த நிலையில், மேயர் வசந்தகுமாரியின் பெயர் முதலிடத்தில் அடிபடு கிறது.
அதேபோல, தாம் பரம் மாநகராட்சியின் துணை மேயரான காமராஜ், தி.மு.க. எம்.பி. ஜெகத் ரட்சகனின் சொந்த மைத்துனர். எம்.எல்.ஏ. தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட விரும்பி காய்களை நகர்த்தியிருக்கிறார். கூட்டணிக் கட்சிக்கு பல்லாவரம் தொகுதி ஒதுக்கப்படாதபட்சத்தில் இந்த முறை இந்த தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக காமராஜுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியின் மேயர் ப்ரியாவும் எம்.எல்.ஏ. தேர்தலில் குதிக்கத் தயாராகியிருக்கிறார்.
கட்சி மேலிடமும் இவரை சட்டமன்றத் தேர்தலுக்குள் கொண்டு வர நினைக்கிறது. அந்த வகையில், சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் களமிறக்கப்படலாம் என்கிறார்கள் தி.மு.க.வின் மேலிடத் தொடர் பாளர்கள்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us